»   »  இந்திய சினிமா சார்பில் இளையராஜாவுக்கு மாபெரும் பாராட்டு விழா! - விஷால் அறிவிப்பு

இந்திய சினிமா சார்பில் இளையராஜாவுக்கு மாபெரும் பாராட்டு விழா! - விஷால் அறிவிப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மரியாதை செய்யும் விதமாக மாபெரும் பாராட்டு விழா ஒன்றை இந்திய சினிமா சார்பில் நடத்தப் போவதாக தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்துள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் மற்றும் நிர்வாகிகள் , இசைஞானி இளையராஜா அவர்களை பிரசாத் ஸ்டுடியோவில் இன்று சந்தித்தனர்.

Big felicitation for Ilaiyaraaja - Vishal announced

இந் நிகழ்வில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பேசுகையில், "வாழ்க்கையிலேயே சந்தோஷமான நிகழ்வு இது. இளையராஜா அவர்களோடு நாங்கள் இருந்த அரை மணி நேரம் மேலும் ஒரு வருடம் நாங்கள் வேகமாக உழைக்க எங்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது. நாங்கள் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு இதை ஒரு பெரும் மரியாதை செய்யும் விதமாக நடத்தவுள்ளோம். இவ்விழா இந்திய சினிமாவே அவருக்கு நடத்தும் பாராட்டு விழாவாக இருக்கும்.
இது சாதாரணமான பாராட்டு விழாவாக இருக்காது. இது வரை இல்லாத அளவில் மிகப்பெரிய பாராட்டு விழாவாக இது அமையும்.

இந்த பாராட்டு விழா சென்னையில் தான் நடக்கும். இந்த விழா சென்னையில் நடப்பது சென்னை மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். ஏனென்றால் இசைஞானி இளையராஜா நம் அனைவருடைய வாழ்விலும் இருக்கிறார். நாம் சிரிக்கின்றபோதிலும், நம்முடைய சோகத்திலும் அவருடைய பாடல்கள் தான் நமக்கு துணை. இசைஞானி இளையராஜா அவர்களுக்கு நன்றி. இது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்யம். அதற்கான பணிகள் இன்று முதல் ஆரம்பமாகின்றன.

Big felicitation for Ilaiyaraaja - Vishal announced

இது நிச்சயம் 1௦௦ பேர் கலந்து கொள்ளும் ஒரு பாராட்டு விழாவாக இருக்காது. மிக பிரம்மாண்டமான விழாவாக இருக்கும்," என்றார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க செயலாளர் 5 ஸ்டார் கதிரேசன் பேசுகையில், "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் அறிமுக விழா வருகிற வியாழன் அன்று மாலை 6 மணி அளவில் ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெறும். இதில் தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த அனைவரும் தங்கள் குடும்பத்தோடு கலந்து கொள்ள வேண்டும்," என்றார்.

துணைத் தலைவர் பிரகாஷ்ராஜ், கௌரவ செயலாளர் கே ஈ ஞானவேல்ராஜா, செயற்குழு உறுப்பினர்கள் ரா.பார்த்திபன், எம். கபார் ஆகியோரும் இந்த சந்திப்பின்போது உடன் இருந்தார்கள்.

English summary
Producers Council President Vishal says that a big felicitation will be arranged for Maestro Ilaiyaraaja to pay tribute to the maestro's achievements.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil