»   »  மெர்சல் சிங்கிள் டீசருக்குக் கிடைத்த மெர்சல் வரவேற்பு!

மெர்சல் சிங்கிள் டீசருக்குக் கிடைத்த மெர்சல் வரவேற்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய்யின் மெர்சல் படத்திலிருந்து ஒரு பாடலை மட்டும் இன்று மாலை வெளியிடவிருக்கிறார்கள். இந்தப் பாடலுக்காக ஒரு டீசரை நேற்று வெளியிட்டனர். இந்த டீசருக்கு ஏக வரவேற்பு கிடைத்துள்ளது.

ஏஆர் ரஹ்மான் இசையில் ஆளப்போறான் தமிழன்.. என்று தொடங்கும் பாடலின் பத்து செகன்ட் டீசர் இது. சத்யபிரகாஷ், ஏ ஆர் ரஹ்மான் பாடியுள்ளனர். பாடலை விவேக் எழுதியுள்ளார். இந்த டீசர் வெளியான சில மணி நேரத்தில் 1.3 மில்லியன் பார்வைகளையும், 1.25 லட்சம் லைக்குகளையும் பெற்றுள்ளது.

Big reception for Mersal single audio teaser

'தமிழாலே ஒண்ணானோம், மாறாது எந்நாளும்...' என்ற இரு வரிகள் மட்டும் இந்த டீசரில் உள்ளன. தமிழ் மொழி, தமிழ் இனத்தின் பெருமையைச் சொல்லும் பாடலாக இது உருவாகியுள்ளது.

ட்விட்டரில், பேஸ்புக், யுட்யூபில் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது இந்த டீசர்.

இன்று மாலை 5 மணிக்கு சாவன், கானா, ஐட்யூன்ஸ், விங்க், ஜியோ மியூசிக், ஐடியா மியூசிக் மற்றும் ஆப்பிள் மியூசிக் தளங்களில் இந்தப் பாடல் வெளியாகவுள்ளது.

English summary
The ten seconds audio teaser of the single song ‘Aalaporaan Tamizhan’ from Vijay’s Mersal got a big response in social media.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X