அடடே...பெரிய காதல் மன்னனா இருப்பார் போலயே ராஜு ஜெயமோகன்
சென்னை : தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ம் தேதி பிரம்மாண்ட விழாவுடன் துவங்கியது. இந்த நிகழ்ச்சியையும் கமலே தொகுத்து வழங்கினார். 18 போட்டியாளர்களையும் அறிமுகம் செய்து, நிகழ்ச்சி துவங்கியது.
இதற்கு முன் இல்லாத வகையில் முதல் முறையாக 18 போட்டியாளர்கள் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் ஒரு சிலர் மட்டுமே தெரிந்த முகங்கள். பலர் தெரியாத முகங்கள் தான். போட்டியாளர்கள் பலரின் பெயரே ரசிகர்களுக்கு இன்னும் நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை.

நம்பிக்கையில் ரசிகர்கள்
முதல் நாளில் போட்டியாளர்கள் தங்களை ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொண்டனர். முதல் நாள் கலகலப்பாக, ஜாலியாக சென்றது. இதனால் ரசிகர்கள், முந்தைய சீசன்களை போல் இல்லாமல் இந்த சீசன் என்டர்டைன்மென்டாக இருக்கும் என நம்பிக்கையுடன், எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

அனைவரையும் கவர்ந்த ராஜு
குறிப்பாக ராஜு ஜெயமோகன், தனது டைமிங் காமெடியால் ஹவுஸ்மெட்களை கவர்ந்து, சிரிக்க வைத்து வருகிறார். ஐக்கி பெர்ரியை பார்த்து ஜமீன்கோட்டை படத்தில் வரும் சூனியக்கார கிழவி போல் இருப்பதாக கலாய்த்தார். பிறகு பேய் கதை சொல்லி தாமரைச் செல்வியை அலற வைத்தார். பிறகு அக்ஷரா ஷெட்டியை பிரபல நடிகை அமலா போல் இருப்பதாக புகழ்ந்தார்.

சின்னத்திரை பிரபலம்
முதல் நாளிலேயே ராஜுவின் காமெடியான பேச்சுக்களை அனைவரும் ரசித்தனர். ராஜு ஏற்கனவே சின்னத்திரை ரசிகர்களுக்கு பரிட்சியம் ஆனவர் தான். ஸ்டார் விஜய் சேனல் அறிமுகப்படுத்தியவர்களில் ராஜுவும் ஒருவர். கல்லூரி சாலை, ஆண்டாள் அழகர், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர், பாரதி கண்ணம்மா போன்ற பிரபலமான சீரியல்களில் நடித்துள்ளார்.

நிஜ காதல் கதை
பிக்பாஸ் சீசன் 3 பிரபலமும், விஜய் டிவியால் உருவாக்கப்பட்ட கவின் நடித்த நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்திலும் நடித்துள்ளார். நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் ஹீரோவின் ஃபிரண்டாக முக்கிய ரோலில் நடித்து வருகிறார் ராஜு. சின்னத்திரையில் காமெடி செய்து வரும் ராஜுவின் நிஜ வாழ்க்கையில் மிகப் பெரிய காதல் கதை உள்ளது.

12 வருட காதல்
இவர் தாரிகா என்ற பெண்ணை 12 ஆண்டுகள் காதலித்துள்ளார். சமீபத்தில் தான் இவர்களின் காதல், திருமணத்தில் முடிந்துள்ளது. ராஜு பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு தான் அவரின் காதல் கதை வெளியில் தெரிய துவங்கி உள்ளது. சின்னத்திரை நடிகர்கள் பலர், தங்களின் பேட்டியில் ராஜுவின் காதல் கதையையும், திருமணத்தில் நடந்த சுவாரஸ்ய விஷயங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

நிஜ காதல் மன்னனா
இதைக் கேட்ட பிக்பாஸ் ரசிகர்கள் பலர், என்னது...12 வருஷம் காதலிச்சாரா. பார்க்க காமெடியன் போல் அனைவரையும் கலாய்த்து கொண்டிருக்கிறார். ஆனால் நிஜ வாழ்க்கையில் பெரிய காதல் மன்னனாக இருப்பார் போலவே. இவருக்கு பின்னால 12 வருட காதல் கதை இருக்கா என்று கேட்டு வருகிறார்கள். ராஜுவின் பழைய ஃபோட்டோக்களையும் தேடிப்பிடித்து சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











