பைனலை நெருங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி… அடுத்தடுத்து டாஸ்க் கொடுக்கும் பிக்பாஸ்!
சென்னை : பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பரபரப்பான இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் 2 வாரங்களே எஞ்சி உள்ளதால், இந்த சீசனில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் ஓபன் நாமினேஷன் நடைபெற்றது. இதில் அனைத்து போட்டியாளர்களின் பெயரும் நாமினேஷனில் உள்ளது.
தற்போது பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் நிரூப் பிரியங்கா குறித்து பல கேள்விகளை கேட்கிறார்.

டிக்கெட் டு ஃபினாலே
பிக் பாஸ் டிக்கெட் டு ஃபினாலே முதல் டாஸ்கிலேயே நிரூப் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து நடத்தப்பட்ட2 வது டாஸ்கில் தாமரைக்கும் பிரியங்காவுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு அடிதடி வரை சென்றது. இதில் தாமரை வைத்திருந்த முட்டை உடைந்ததாலும், அதேபோல பாவனி வைத்திருந்த முட்டை உடைந்ததாலும் இருவரும் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, நேற்று நடந்த டாஸ்கில் பிரியங்கா, ராஜூ இருவரும் வெளியேறி விட்டனர்.

வித்தியாசமான டாஸ்க்
இதையடுத்து, நேற்று டிக்கெட் டு ஃபினாலே டாஸ்கில் அடுத்தக்கட்ட போட்டி நடைபெறுகிறது. அதில், அமீர், சஞ்ஜீவ், சிபி போட்டியிடுகின்றனர். இதில் போட்டியாளர்கள் வரிசையாக கட்டம் போட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டு, அவர்கள் கையில் சிவப்பு மற்றும், பச்சை விளக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கேட்கப்படும் கேள்விகளுக்கு போட்டியாளர்களின் பதில்களும், பார்வையாளர்களாக இருக்கும் போட்டியை விட்டு வெளியேறியவர்களின் பதிலும் ஒன்றாக இருந்தால் ஒவ்வொரு கட்டமாக முன்னேறுவார்கள். இறுதியாக முன்னேறுபவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

3வது ப்ரோமோ
இதையடுத்து, இன்றைய எபிசோடுக்கான 3வது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில்,அண்ணாச்சி இருக்கும் போது, பிரியங்கா இந்த கேம் ஷோ கலக்கப்போவது யாரு கிடையாதுனு சொல்லி இருந்தா, ஆனால், அவங்க குடும்பத்தினர் உள்ளே வந்துட்டுபோன பின்னாடி வேற மாதிரி இருக்கு என்று நிரூப் கேள்வி கேட்பது போல ப்ரோமோ வெளியாகி உள்ளது.
Recommended Video

கடுப்பான ரசிகர்கள்
பிக் பாஸ் விறுவிறுப்பாக போய்ட்டு இருக்கு அதுவும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடந்துக்கிட்டு இருக்கு இந்த நேரத்தில் கொடுக்கும் டாஸ்கா இது என பிக் பாஸ் ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர். பிசிக்கல் டாஸ்க் கொடுத்தா கேம் ரசிக்கும்படி இருக்கும் என்றும் ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











