பிக்பாஸ் ஃபினாலேவுக்கு தயாராகும் கமல்...இன்றைக்கு என்ன ஸ்பெஷல்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இறுதிப் போட்டிக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளது. 106 நாட்களைக் கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 103 நாட்கள் முடிவடைந்து விட்டது. இதனால் டைட்டிலை யார் வெல்ல போகிறார்கள் என்ற ஆர்வம் அனைவரிடமும் அதிகரித்து காணப்படுகிறது.

18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் அமீர், பாவனி, நிரூப், ராஜு, பிரியங்கா ஆகிய ஐந்து பேர் ஃபைனலுக்கு சென்றுள்ளனர். ஜனவரி 16ம் தேதி மாலை 6.30 மணி துவங்கி இறுதிப் போட்டி நடத்தப்பட உள்ளது. கொரோனா காரணமாக இந்த முறை நேரடி ஒளிபரப்பு செய்யப்படாமல், பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சியாகவே இறுதிப் போட்டி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

ஃபினாலே ப்ரோமோ

ஃபினாலே ப்ரோமோ

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 104 வது நாளான இன்றைய நாளுக்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. வழக்கமான ப்ரோமோக்களில் பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் நிகழ்வுகளும், வார இறுதியில் கமல், போட்டியாளர்களுடன் பேசும் காட்சிகளும் ப்ரோமோக்களில் வெளியிடப்படும். இது ஃபினாலே வாரம் என்பதால் அது தொடர்பாகவே ப்ரோமோ வெளியிட துவங்கி விட்டனர்.

தயாராகும் கமல்

தயாராகும் கமல்

இன்றைய நாள் எபிசோடிற்கான முதல் ப்ரோமோவில், மேக்அப் ரூமில் கமல் தயாராகிக் கொண்டிருப்பது போன்ற காட்சி உள்ளது. அதில் பேசும் கமல், வெவ்வேறு கனவுகளுடன் இந்த வீட்டிற்குள் வந்த போட்டியாளர்களில் ஐவரே எஞ்சி இருக்கிறார்கள். தீர்ப்புக்கு முந்தைய இரவு அவர்களின் மனநிலை எவ்வாறாக இருக்கும். என்ன சிந்திப்பார்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது. பார்ப்போம் என்கிறார்.

இது தான் இன்று நடக்கிறதா

இது தான் இன்று நடக்கிறதா

இதனால் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு பிறகு, போட்டியாளர்கள் ஃபினாலேவுக்கு தயாராகி வருவதை காட்டுகிறது. விருந்தினர்களாக வந்துள்ள, வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வெளியேறி உள்ளார்கள். தற்போது இறுதிப் போட்டிக்கு சென்றுள்ள 5 பேரும் ஃபைனலுக்கு செல்ல தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

நிரூப் வெளியேற்றப்படுகிறாரா

நிரூப் வெளியேற்றப்படுகிறாரா

பைனலுக்கு முன்பே ஒருவர் வெளியேற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஃபைனலுக்கு சென்றுள்ள ஐந்து பேரில் இருந்து நிரூப், எலிமினேட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. உடல் நலக்குறைவால் வெளியேற்றப்பட்டுள்ள பிரியங்கா, ஃபைனலுக்கு அழைத்து வரப்படுவார் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X