ட்விஸ்ட்னா இப்படி இருக்கனும்...காயினை பயன்படுத்த அனுமதி கொடுத்த பிக்பாஸ்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 ன் மூன்றாவது வாரத்தில் பஞ்சதந்திரம் என்ற டாஸ்க் நடத்தப்பட்டது. இதில் பஞ்ச பூதங்களின் பெயர்களைக் கொண்ட நாணயங்களை கைப்பற்ற வேண்டும். அந்த நாயணம் வைத்திருப்பவருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என பிக்பாஸ் அறிவித்தார்.
10 வாரங்கள் வரை இந்த நாணயங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த நாணயத்தின் பவரை பயன்படுத்தி, நாமினேஷில் இருந்து தன்னையோ அல்லது தனக்கு விருப்பமான ஒருவரையோ நாமினேஷனில் இருந்து காப்பாற்ற முடியும். இருந்தாலும் ஒருமுறை மட்டுமே நாணயத்தின் பவரை பயன்படுத்த முடியும் என்றும் கூறப்பட்டது.

எப்போது நாணயத்தை பயன்படுத்தலாம்
இந்த டாஸ்க் முடிவடைந்த நிலையில் மூன்றாவது வார இறுதியில் அபிஷேக், மக்கள் அளித்த ஓட்டுக்களின் அடிப்படையில் வெளியேற்றப்பட்டார். அந்த நாணயத்தை வைத்து அபிஷேக்கை காப்பாற்ற வீட்டில் உள்ள பலரும் துடித்தனர். ஆனால் அனுமதி அளிக்கும் போது மட்டுமே அந்த நாணயத்தை பயன்படுத்த முடியும் என பிக்பாஸ் கூறியதை அடுத்து அபிஷேக் வெளியேறினார்.

நாமினேட் ஆன பிரியங்கா
அபிஷேக் வெளியேறியதை தொடர்ந்து வரும் வாரத்திற்கான எவிக்ஷனுக்கான நாமினேஷன் துவங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான ப்ரோமோக்கள் இன்று வெளியிடப்பட்டன. இதில் பெரும்பாலானோர் பிரியங்காவை நாமினேட் செய்துள்ளனர். கடந்த வாரம் அவரின் செயல்பாடுகளை குறிப்பிட்டே பலரும் நாமினேட் செய்துள்ளனர்.

ட்விஸ்ட் வைத்த பிக்பாஸ்
இந்த வாரம் 6 பேர் நாமினேட் ஆகி உள்ளதாக ப்ரோமோவில் காட்டப்படுகிறது. பாவனி, இசைவாணி, அபினய், இமான் அண்ணாச்சி, வருண், பிரியங்கா ஆகியோர் இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டுள்ளதாக பிக்பாஸ் அறிவிக்கிறார். பிறகு தங்களிடம் வைத்துள்ள நாணயத்தின் பவரை பயன்படுத்தி, உங்களை நாமினேஷனில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேறு ஒருவரை நாமினேட் செய்ய வேண்டும் என புதிய ட்விஸ்ட் உடன் நாணயத்தை பயன்படுத்த அனுமதி கொடுக்கிறார்.

யாரை நாமினேட் செய்வார்கள்
இந்த வாரம் நாமினேட் ஆனவர்களில் பாவனி, இசைவாணி, வருண் ஆகிய மூன்று பேரிடம் நாணயங்கள் உள்ளன. இவர்கள் வேறு யாரையாவது நாமினேட் செய்து விட்டு, தங்களை காப்பாற்றிக் கொள்ள முடியும். இந்த ப்ரோமோவால் இன்றைய எபிசோட் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. இவர்கள் மூன்று பேர் யாரை நாமினேட் செய்து தங்களை காப்பாற்றிக் கொள்ள போகிறார்கள் என்பதை பார்க்க அனைவரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

கமெண்ட்ஸ் குவிக்கும் ரசிகர்கள்
இந்த மூன்று பேரில் பாவனி நிச்சயமாக அக்ஷராவை தான் நாமினேட் செய்வார் என்பது அனைவரும் அறிந்தது தான். என்றாலும் இசைவாணியும், வருணும் யாரை நாமினேட் செய்வார்கள் என ஒவ்வொருவரும் தங்களின் சிந்தனை குதிரைகளை தட்டி விட்டு, கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











