பிக் பாஸ் சுச்சியின் முன்னாள் கணவர்.. 2ம் மனைவிக்கு லிப் லாக் அடித்த ’யாரடி நீ மோகினி’ நடிகர்!

சென்னை: யாரடி நீ மோகினி, ராக்கெட்ரி உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்த நடிகர் கார்த்திக் தனது இரண்டாவது மனைவிக்கு லிப் லாக் கொடுத்த புகைப்படம் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது.

சுச்சி லீக்ஸ் பிரச்சனைக்கு பிறகு நடிகர் கார்த்திக்கும் அவரது மனைவியும் பிக் பாஸ் பிரபலமுமான சுசித்ரா இருவரும் பிரிந்தனர்.

பிக் பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக சுசித்ரா கலந்து கொண்டாலும், அதற்கு பிறகும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் ஏதும் அமையவில்லை.

கார்த்திக் குமார்

கார்த்திக் குமார்

அலைபாயுதே படத்தில் சினிமா வாழ்க்கையை தொடங்கிய கார்த்திக் குமார் கடைசியாக அதே மாதவன் நடிப்பில் வெளியான ராக்கெட்ரி படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்து உள்ளார். சினிமாவில் இருந்தே விலகி விட்டேன் என்றும் ஸ்டாண்ட் அப் காமெடியன் தான் இனி நான் என சொல்லி வந்த கார்த்திக் குமார் ராக்கெட்ரி படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்துள்ளார்.

யாரடி நீ மோகினி

யாரடி நீ மோகினி

வானம் வசப்படும், கண்ட நாள் முதல், பொய் சொல்லப் போறோம் என ஏகப்பட்ட படங்களில் கார்த்திக் குமார் நடித்திருந்தாலும், இன்னமும் ரசிகர்களுக்கு அந்த யாரடி நீ மோகினி படம் தான் இவரது பெயரை சொன்னாலே ஞாபகத்துக்கு வரும். தனுஷ் நண்பனாக அந்த படத்தில் அப்படியொரு நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

சுசித்ராவுடன் விவாகரத்து

சுசித்ராவுடன் விவாகரத்து

பிரபல ஆர்ஜேவும் பாடகியுமாக வலம் வந்த சுசித்ராவுக்கும் கார்த்திக் குமாருக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், சுச்சி லீக்ஸ் என்கிற பெயரில் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அந்தரங்க வீடியோ வெளியான விவகாரத்தில் சுசித்ரா சிக்கிய நிலையில், ஏற்பட்ட கருத்து மோதல்கள் காரணமாக சுசித்ராவை கார்த்திக் குமார் விவாகரத்து செய்தார்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

44 வயதாகும் நடிகர் கார்த்திக் குமார் கடந்த ஆண்டு அம்ருதா ஸ்ரீனிவாசன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஸ்டாண்ட் அப் காமெடியனாக வெளிநாடுகளில் பல நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இவர், தற்போது கோலாலம்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க செல்வதற்கு முன் மனைவியிடம் பிரியாவிடை பெற்றுக் கொண்ட புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

என்னவொரு லிப் லாக்

என்னவொரு லிப் லாக்

நிகழ்ச்சிக்கு செல்லும் கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுத்து வழியனுப்பிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார் கார்த்திக்கின் இரண்டாம் மனைவி அம்ருதா ஸ்ரீனிவாசன். அந்த போட்டோவிற்கு ரசிகர்கள் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் குவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X