Don't Miss!
- Finance
Economic survey 2023:அரசின் மூலதன செலவு இலக்கு எட்டப்படலாம்.. ஆய்வறிக்கையில் குட் நியூஸ்!
- News
இன்னைக்கு ஒரு புடி! சூப் -பிரியாணி- சாலட்! தூய்மை பணியாளருடன் மதிய உணவு சாப்பிட்ட முதலமைச்சர்!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 5 ராசிக்காரங்க வெற்றிப்படிக்கட்டில் வேகமா ஏறப்போறாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Sports
2வது டி20ல் நடந்த குளறுபடி.. கடைசி நேரத்தில் இந்தியா வைத்த கோரிக்கை.. அதிகாரி அதிரடி நீக்கம்- விவரம்
- Automobiles
பெட்டி பெட்டியா வெளிநாடுகளுக்கு பயணித்த சூப்பர் மீட்டியோர்650! ராயல் என்பீல்டு அதோட வேலைய காட்ட தொடங்கிருச்சு!
- Technology
முரட்டுத்தனமான ஸ்மார்ட்வாட்ச் மாடலை கம்மி விலையில் இறக்கிவிட்ட Noise.! என்னென்ன அம்சங்கள்?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
வனிதா அக்காவுக்கு வயசு ஏற ஏற அழகு கூடிட்டே போகுதே..பார்த்து பார்த்து உருகும் பேன்ஸ்!
சென்னை : சோசியல் மீடியாவில் வைரல் ஸ்டார் என்று பெயர் எடுத்த வனிதா விஜயகுமாரின் போட்டோவைப் பார்த்து ரசிகர்கள் வனிதாவா இது.. அடையாளமே தெரியலையே என கேட்டுள்ளனர்.
பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா, நான் ராஜாவாக போகிறேன், மாணிக்கம் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். மேலும், எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.
தனது தந்தை விஜயகுமாருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சர்ச்சைகளில் சிக்கிய வனிதா கடந்த 2019ம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார்.
டயலாக் எழுதி கொடுத்தா கூட பேசுவாங்களான்னு தெரியலையே.. பிக் பாஸ் சீசன் 6ஐ வெளுத்து வாங்கிய வனிதா!

வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார், சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் சமையல், அழகுக்கலை , உடல் எடை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பற்றி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் பல்வேறு திரைப்படத்திலும் பிஸியாக நடித்தி வரும் வனிதா, சமீபத்தில் பிக் பாஸ் அல்மேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் இறுதி வரை வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் , பாதியில் ஷோவிலிருந்து வெளியேறினார்.

ஏகப்பட்ட படங்கள் கைவசம்
நடிகை வனிதா தற்போது, அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அதுமட்டும் யூடியூப் சேனல் மற்றும் சொந்தமாக துணி மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடையையும் நடத்தி வருகிறார்.

பிக் பாஸ் விமர்சனம்
மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர் என்ற முறையில் தினமும் விமர்சனம் செய்து வருகிறார். மேலும் நேரலையில் பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார். வனிதாவின் விமர்சனத்தை கேட்பதற்கு என்றே ஒரு கூட்டம் வனிதாவின் பின்னால் சுற்றிக்கொண்டு இருக்கிறது.

வனிதா அக்காவா இது
ஏராளமான படங்களை கையில் வைத்துக்கொண்டு படு பிஸியாக இருக்கும் வனிதா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மார்டன் உடையில் இருக்கும் போட்டோவை பகிர்ந்துள்ளார். அந்தப் போட்டோவை பார்த்த ரசிகர்கள் வனிதா அக்காவா இது என்றும், இவங்களுக்கு மட்டும் வயசு ஏற ஏற அழகு கூடிக்கிட்டே போகுதே என கருத்துக்களை பகிர்ந்து இதயத்தை பரிசளித்துள்ளனர்.