அசீம் ஒரு கோமாளி.. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இப்படியா கேவலமா பேசுவார்.. மீம் போட்டு விளாசும் ஃபேன்ஸ்!
சென்னை: பிக் பாஸ் வீடு ராயல் மியூசியமாக மாறி உள்ள நிலையில், அரச குடும்பம் சாப்பிடும் உணவில் ஷிவின் உப்பை வாரிக் கொட்டி விட்டார்.
உப்பு போட்டது யார் என ஆரம்பித்த சண்டையில், ராஜாவின் ஆலோசகரான விக்ரமன் இது தளபதி கவனித்திருக்க வேண்டிய விஷயம், அவர் தவறு செய்து விட்டார் என சொல்ல, எச்சில் துப்பிக் கொடுக்கிறேன், நீ சாப்பிடுவியா என அசீம் கேட்டது பெரிய சண்டையை கிளப்பி உள்ளது.
இந்நிலையில், விக்ரமன் ரசிகர்கள் மட்டுமின்றி பிக் பாஸ் ரசிகர்கள் பலரும் கோமாளி அசீம் என்றும் அவருக்கு ஏகப்பட்ட மீம்களை போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர்.

டோட்டல் டேமேஜ் ஆகிடும்
பிக் பாஸில் போட்டியாளராக பங்கேற்ற பலரது பெயர்கள் டோட்டல் டேமேஜ் ஆகி உள்ளன. ஆனாலும், ஒவ்வொரு நாளுக்குள் அவர்கள் உள்ளே இருக்க பெரிய சம்பளம் கிடைப்பதால், பலரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த சீசனில் இதுவரை அசீம் மற்றும் தனலட்சுமியின் பெயர்கள் பெருமளவில் கெட்டுப் போயுள்ளன. ஆனால், அவர்கள் தான் கேம் ஆடி வருகின்றனர் என்றும் ஆதரவுகளும் பெருகி உள்ளன.

உப்பு பிரச்சனை
சேவகியான ஷிவின் கொஞ்சம் குறும்புத்தனமாக அரச குடும்பம் உணவும் உணவில் உப்பை அதிகமாக கொட்டி விட அதன் விளைவு அசீமுக்கும் விக்ரமனுக்கும் இடையே பெரிய எச்சில் பிரச்சனையையே கிளப்பி விட்டது. ஷிவினுக்கு பதிலாக கதிரவன் தான் தான் உப்புப் போட்டேன் என ஒப்புக் கொண்டு மக்கள் மத்தியில் வாக்குகளை அள்ளி வருகிறார்.

கோமாளி அசீம்
அசீமை ஏற்கனவே பூமர் அங்கிள் என்றெல்லாம் மீம் போட்டு நெட்டிசன்கள் கலாய்த்த நிலையில், தற்போது கோமாளி அசீம் என வறுத்தெடுத்து வருகின்றனர். இவ்வளவு கேவலமாக பிக் பாஸ் வீட்டில் சண்டை போடலாமா? தனாவுக்கு மட்டும் கேமரா இருக்கு பார்க்கிறாங்க பார்த்து பேசும்மான்னு அட்வைஸ் பண்ணதெல்லாம் டிராமாவா என திட்டித் தீர்த்து வருகின்றனர்.

பழைய பன்னீர் செல்வம்
அசீம் தனது ரியல் ஃபேஸை காட்டத் தொடங்கி விட்டார். பழைய பன்னீர் செல்வமாக மாறிவிட்டார். வாடா.. வாடா.. சண்டைக்கு வாடா என விக்ரமன் ரசிகர்கள் மீம் போட்டு அசீம் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த வாரம் கமல் மீண்டும் அசீமை எப்படி கண்டிக்கப் போகிறார் என்பதை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











