»   »  மேடையிலேயே சண்டை சச்சரவுடன் அமோகமாக துவங்கிய இந்தி பிக் பாஸ்

மேடையிலேயே சண்டை சச்சரவுடன் அமோகமாக துவங்கிய இந்தி பிக் பாஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி சண்டை சச்சரவுடன் அமோகமாக துவங்கியுள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 11வது சீசன் நேற்று துவங்கியது. சல்மான் கான் மேடையில் நடனமாடி 18 போட்டியாளர்களை அறிமுகம் செய்து வைத்தார்.

அதன் பிறகு ஒவ்வொருவராக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.

பிரமாண்டம்

பிரமாண்டம்

பிக் பாஸ் வீடு பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் சிறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. சர்ச்சையை கிளப்பும் போட்டியாளர்களாக தேர்வு செய்துள்ளனர்.

ஷில்பா

ஷில்பா

இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ஷில்பா ஷிண்டே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அவர் தான் நடித்த தொலைக்காட்சி தொடரின் தயாரிப்பாளர் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.

விகாஸ் குப்தா

விகாஸ் குப்தா

தனக்கு பிரச்சனை ஏற்பட விகாஸ் குப்தா காரணம் என்று ஷில்பா முன்பு தெரிவித்திருந்தார். இந்நிலையில் விகாஸ் குப்தாவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

சண்டை

சண்டை

விகாஸ் ஷில்பாவை பார்த்ததும் கலாய்த்தார். பதிலுக்கு அவரும் கலாய்க்க அது வாக்குவாதத்தில் முடிந்தது. இருவரும் சல்மான் கான் முன்பே சண்டை போட்டுள்ளனர்.

டிஆர்பி

டிஆர்பி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பியை ஏற்ற சர்ச்சையை கிளப்பும் ஆட்களாகப் பார்த்து தேர்வு செய்துள்ளார்களாம். நல்லா தேர்வு செய்திருக்கிறார்கள். முதல் நாளே இப்படியா?

English summary
Bigg Boss hindi show has reportedly started with an argument between Shilpa Shinde and Vikas Gupta.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil