சேத்துல போய் விழுந்து அசிங்கப்படுத்திக்க நான் விரும்பல…. வனிதா குறித்து பேசிய நகுல்!

சென்னை: வனிதா விஜயகுமாரை பற்றி தான் பேச கூட விரும்பவில்லை என நடிகரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் நடுவருமான நகுல் கூறியுள்ளார்.

அம்மன் வேடம் போட்டுக்கிட்டு அசிங்கமா பேசி இருக்காங்க, சேத்துல போய் விழுந்து அசிங்கப்படுத்திக்க நான் விரும்பல என்று நகுல் கூறியுள்ளார்.

வனிதா விஜயகுமார் ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேக்கணும் என்று நகுல் காட்டமாக கூறினார்.

விஜயகுமாரின் மூத்த மகள்

பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா,மாணிக்கம், ஹிட்லர் பிரதர் உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். மேலும், எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் என்ற படத்தையும் தயாரித்துள்ளார்.

புகழ் பெற்றார்

புகழ் பெற்றார்

தனது தந்தை விஜயகுமாருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக சர்ச்சைகளில் சிக்கிய வனிதா தனியாக குழந்தைகளுடன் வசித்து வந்தார். கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3யில் 17 போட்டியாளர்களில் இவரும் ஒருவராக இருந்தார். பின்னர் மக்கள் அளித்த வாக்களிப்பால் 84 நாட்களிலேயே அந்த வீட்டை விட்டு வெளியேறினார்.

யூடியூப் சேனல்

யூடியூப் சேனல்

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த வனிதா, குக் வித் கோமாளி, பிக் பாஸ் 3 கொண்டாட்டம், கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்துள்ளார். மேலும் இவர், சொந்தமாக ஒரு யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் சமையல், அழகுக்கலை , உடல் எடை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பற்றி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

பிக் பாஸ் ஜோடிகள்

பிக் பாஸ் ஜோடிகள்

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களைக் கொண்டு பிக் பாஸ் ஜோடிகள் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார் திடீரென விலகுவதாக அறிவித்தார். மேலும்,அவர் வெறியேறியதற்கு நிகழ்ச்சியின் நடுவராக உள்ள நடிகை ரம்யா கிருஷ்ணன் தான் காரணம் என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

வாக்குவாதம்

வாக்குவாதம்

BB ஜோடிகள் நிகழ்ச்சியில் வனிதா காளி போல் வேடம் அணிந்து ஆடினார். இந்த நடனம் குறித்து ரம்யா கிருஷ்ணன் கமெண்ட் சொன்னதால், இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. அதோடு மற்ற போட்டியாளர்களுடன் Compare செய்யாதீர்கள் என வனிதா ரம்யா கிருஷ்ணனை பார்த்து கேட்ட, இது Competition அப்படித்தான் சொல்ல முடியும் என ரம்யா கிருஷ்ணன் பதில் அளித்தார் இதனால் கடுப்பான வனிதா அங்கிருந்து வெளியேறினார்.

Recommended Video

Vanitha Vijayakumar pressmeet | Filmibeat tamil
மரியாதை கொடுக்கவில்லை

மரியாதை கொடுக்கவில்லை

மேலும் இதுகுறித்து சிவப்பு மனிதன் படப்பிடிப்பு தளத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வனிதா, விஜய் டிவிக்கும் எனக்கும் எந்தவொரு பிரச்சினையுமே இல்லை. பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை பொறுத்தவரை சொன்ன விஷயங்களில் சில எனக்குப் பிடிக்கவில்லை. அந்த நிகழ்ச்சியில் அனைவருமே ஸ்டார்களாகத்தான் உள்ளே சென்றோம். அனைவரும் பிக் பாஸ் மூலம் பிரபலமானவர்கள் தான், அதற்குரிய மரியாதை கொடுக்கப்படாததால் அந்த நிகழ்ச்சியிலிருந்து விலகி விட்டதாக வனிதா கூறினார்.

வனிதா சரியாக ஆடவில்லை

வனிதா சரியாக ஆடவில்லை

இதுகுறித்து ரம்யா பாண்டியனிடம் கேட்டபோது ஒரே வார்த்தையில் நோ கமெண்ட்ஸ் என பதிலளித்துவிட்டார். மேலும் இதுகுறித்து அந்த நிகழ்ச்சியில் நடுவராக இருந்த நகுலிடம் கேட்டபோது, வனிதா காளி வேடம் போட்டு ஆடினார்கள் 4 நிமிட பாடலில், வனிதா 2 நிமிடம் சும்மாவே அமர்ந்து இருந்தார்கள். அடுத்து அவர்கள் ஆடும் போது மிகவும் ஆக்ரோஷமாக காளிபோல் ஆடுவார்கள் என்று நினைத்தோம் ஆனால், வனிதா சரியாக ஆடவில்லை. இதைத்தான் நாங்கள் இருவரும் குறிப்பிட்டு கூறினோம். ஆனால் அவர்கள் அதை தவறாக புரிந்து கொண்டார்கள்.

வனிதா மன்னிப்பு கேக்கணும்

வனிதா மன்னிப்பு கேக்கணும்

இதையடுத்து செட்டில் இருந்தவர்களிடம் எங்களை பற்றி அசிங்கமாக பேசி இருக்கிறார். இதை அந்த டீமில் இருந்தவர்கள் சொன்னார்கள். என்னை சொல்லியதைக்கூட நான் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், ரம்யா மேடம் எவ்வளவு பெரிய ஆளு அவங்களை இப்படி பேசலாமா, ரம்யா மேமிடம் வனிதா மன்னிப்பு கேக்கணும், வனிதாவை பற்றி தான் பேச கூட விரும்பல, சேத்துல போய் விழுந்து அசிங்கப்படுத்திக்க விரும்பல, அதுவும் அம்மன் வேடத்திலிருந்து அசிங்கமா பேசி இருக்கிறார் என்று புலம்பி தீர்த்துள்ளார் நகுல்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X