Don't Miss!
- News
"இதோ டேட்டா பாருங்க".. அண்ணாமலைக்கு எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. வேலையை காட்டிய ஓபிஎஸ்.. என்னாச்சு?
- Technology
WhatsApp மெசேஜ்ஜை அடுத்தவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி? இந்த சீக்ரெட் மோட்-ஐ ON செய்யுங்க.!
- Sports
"3 தனித்தனி அணிகள்.. ஆனாலும் ஒரு சிக்கல்".. பிசிசிஐ திட்டம் குறித்து கபில் தேவ் அறிவுரை.. அடேங்கப்பா
- Automobiles
கண் தெரியாமல் லாரியை ஓட்டும் டிரைவர்கள்! டாக்டர்கள் நடத்திய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
- Finance
இது மட்டும் நடந்துட்டா..? மாத சம்பளக்காரர்களுக்குப் பெரும் கொண்டாட்டம் தான்..!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி திருமணத்திற்கு முன் இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க... இல்லனா பிரச்சினைதான்!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
கலக்கலாக வந்த கமல்... அதிர வைத்த ஹவுஸ்மேட்ஸ்... தொடங்கியது பிக் பாஸ் கிராண்ட் பினாலே
சென்னை: கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 தற்போது கொண்டாட்டத்துடன் அதன் இறுதி நாளை எட்டியுள்ளது.
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனின் டைட்டில் வின்னர் ரேஸில் இறுதியாக 3 பேர் மட்டுமே களத்தில் உள்ளனர்.
ஷிவின், விக்ரமன், அசீம் மூவரில் யார் பிக் பாஸ் சீசன் 6 டைட்டிலுடன் வெளியேறப் போகிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
நாளை மாலை 6 விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் சீசன் 6ன் கிராண்ட் பினாலே கொண்டாட்டம் இன்றே தொடங்கியது.
பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் யார்... லீட் கொடுத்த ப்ரோமோ... ரிசல்ட் எப்போன்னு தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 6 க்ளைமேக்ஸ்
விஜய் டிவியின் டிஆர்பி கண்டெய்னரான பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தாண்டில் 6வது சீசனை நிறைவு செய்யவுள்ளது. நடிகர் கமல் தொகுத்து வழங்கும் இந்த பிக் பாஸ், தமிழ்நாட்டின் மிகப் பெரிய ரியாலிட்டி ஷோவாக பார்க்கப்படுகிறது. அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய ஆறாவது சீசனில் ஜிபி முத்து, அசல் கோளாறு, ஷிவின், சாந்தி, மணிகண்டன், குயின்ஷி, நிவாஷினி, ஷெரினா, ஜனனி, ரச்சிதா, மகேஸ்வரி, அசீம், விக்ரமன், ராம், ஏடிகே, ராபர்ட் மாஸ்டர், அமுதவாணன், மைனா நந்தினி, ஆயிஷா, கதிர் என மொத்தம் 21 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

பிக் பாஸ் சீசன் 6 கிராண்ட் பினாலே
இந்த சீசனில் முதல் ஆளாக சாந்தி எவிக்சன் ஆனார், ஜிபி முத்து முதல் இரண்டு வாரங்களில் அவரது சொந்த விருப்பத்தின் பேரில் வெளியேறினார். மற்றவர்கள் வாக்குகள் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் வீட்டில் இருந்து எவிக்சன் செய்யப்பட்டனர். இறுதியாக ஷிவின், விக்ரமன், அசீம் மட்டுமே பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரேஸில் இருக்கின்றனர். இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றிருந்த கதிர் பண மூட்டையுடனும், அமுதா பணப் பெட்டியுடனும் வெளியேற, மைனா நந்தினி மீட் வீக் எவிக்சனில் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து தற்போது கிராண்ட் பினாலே கொண்டாட்டத்துடன் தொடங்கியது.

பினாலே கொண்டாட்டம் ஆரம்பம்
பிக் பாஸ் கிராண்ட் பினாலே விஜய் டிவியில் நாளை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து வெளியான அடுத்த ப்ரோமோவில் கிராண்ட் பினாலே ஹவுஸ்மேட்ஸ்களின் கொண்டாட்டத்துடன் தொடங்கியுள்ளது. ஏடிகேவின் ராப் இசையுடன் தொடங்கும் இந்த கொண்டாட்டம் மணிகண்டன், குயின்ஷி, மகேஸ்வரி, மைனா நந்தினி, ஜிபி முத்து, கதிர் உள்ளிட்ட அனைத்து ஹவுஸ்மேட்ஸ்களுடனும் அதிரடியாக தொடங்கியதை பார்க்க முடிகிறது.

கலக்கலாக வந்த கமல்
ஹவுஸ்மேட்ஸ்களின் ஆட்டம் பாட்டம், பிக் பாஸ் ரசிகர்களின் பலத்த கரகோஷம் என அரங்கமே அதிர, கமல் செம்ம ஸ்டைலிஷாக என்ட்ரி கொடுக்கிறார். தி பிக்கஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் ஷோ பிக் பாஸ் சீசன் 6 கிராண்ட் பினாலே என நிகழ்ச்சியை தொடங்குகிறார். இந்த ப்ரோமோ பிக் பாஸ் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. விஜய் டிவியில் நாளை மாலை 6 மணிக்கு தான் கிராண்ட் பினாலே ஒளிபரப்பாகிறது. ஆனால், நாளை காலையிலேயே யார் டைட்டில் வின்னர் என்ற ரிசல்ட் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் பெரும்பாலான ரசிகர்கள் விக்ரமன் தான் டைட்டில் வெல்வார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.