Don't Miss!
- News
9 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! அன்பளிப்பாக சொனாட்டா வாட்ச்!
- Technology
இந்தியாவில் கம்மி விலையில் 2 போன்களை இறக்கிவிடும் Motorola.! காத்திருப்போம்.!
- Sports
4 போட்டிகளில் விளையாட தடையா?.. இஷான் கிஷானுக்கு வந்த பெரும் சிக்கல்.. விளையாட்டு விணையானது எப்படி?
- Finance
ஊழியர்களை ஏன் பணி நீக்கம் செய்றீங்க..அப்படி செய்யாதீங்க.. அஷ்னீர் குரோவரின் பரிந்துரைய பாருங்க!
- Lifestyle
உங்க பிறந்த தேதி 2,11,20 மற்றும் 29 இதுல ஒன்னா? அப்ப உங்களுக்கு எப்படிப்பட்ட எதிர்காலம் காத்திருக்கு தெரியுமா?
- Automobiles
இந்த காருக்கு வெயில்தான் எரிபொருள்.. கரண்ட், பெட்ரோல், டீசல்னு எதுமே தேவையில்ல! காச சூப்பரா மிச்சப்படுத்தலாம்!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
பிக் பாஸ் சீசன் 6: டைட்டில் வின்னர் ரேஸில் விக்ரமன் - அசீம்... மக்கள் தீர்ப்பு யாருக்கு?
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதால் அதிக பரபரப்பாக காணப்படுகிறது.
21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் தற்போது 5 போட்டியாளர்கள் மட்டுமே இறுதிப்போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.
கதிர் 3 லட்சம் ரூபாய் பண மூட்டையுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதால், ஆட்டம் இன்னும் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் யாருக்கு என்ற போட்டியில் விக்ரமன் - அசீம் இருவருக்கும் இடையேயான போட்டி தீவிரமாகியுள்ளது.
தப்பு கணக்கு போட்ட அசீம், கதிர்... மைனா, அமுதாவுக்கு செகண்ட் சான்ஸ் கொடுத்த பிக் பாஸ்

பிக் பாஸ் சீசன் 6 க்ளைமேக்ஸ்
அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிகிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் விக்ரமன், அசீம், ஷிவின், மைனா, அமுதவாணன், கதிர் ஆகிய 6 பேர் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றனர். ஆனால் எதிர்பாராத ட்விஸ்ட்டாக கதிர் 3 லட்சம் ரூபாய் பணமூட்டையுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் மீண்டும் பணப்பெட்டியை வைத்து மற்ற போட்டியாளர்களுக்கு தூண்டில் போட்டு வருகிறார் பிக் பாஸ்.

டைட்டில் வின்னர் யார்?
விக்ரமன், அசீம், மைனா நந்தினி, ஷிவின், அமுதவாணன் ஆகிய 5 பேர் மட்டுமே தற்போது இறுதிப் போட்டியில் விளையாட உள்ளனர். இவர்களில் யாரேனும் ஒருவர் பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ஷிவின் அல்லது மைனா வெளியேற வாய்ப்புள்ளது. அமுதவாணன் டைட்டில் வின்னர் கனவுடன் இருந்தாலும் அவருக்கான ஆதரவு ரசிகர்களிடம் அதிகளவில் இல்லை என்பதே உண்மை. ஆகமொத்தம் மிச்சம் இருப்பது விக்ரமனும் அசீமும் தான்.

முன்னிலையில் விக்ரமன்
முதல் மூன்று வாரங்கள் வரை இருக்கும் இடம் தெரியாமல் இருந்த விக்ரமன், அடுத்தடுத்து வாரங்களில் விஸ்வரூபம் எடுத்தார். சகபோட்டியாளர்கள் யாரும் பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்களின் பக்கம் நின்று நியாயம் கேட்டார். இதுவே அவரை மக்களிடம் பெரியளவில் கொண்டு சேர்த்தது. அதேபோல், எந்த நிலையிலும் தன்னிலை மாறாமல் பிறரை மரியாதையுடன் பேசுவதை மட்டுமே வழக்கமாக வைத்திருந்தார். இதனால் நாளுக்கு நாள் அவருக்கு பிக் பாஸ் ரசிகர்களிடம் ஆதரவு பெருகியது. முக்கியமாக அசீமை பல இடங்களில் கட்டுப்படுத்தியது விக்ரமன் தான்.

அசீமுக்கு ஆதரவு
விக்ரமனுக்கு ஒருபக்கம் ஆதரவு இருந்தாலும், அசீமும் சம பலத்துடன் டைட்டில் வின்னர் ரேஸில் இருக்கிறார். அசீமின் மிகப்பெரிய மைனஸாக பார்க்கப்படுவது பிறரை தாழ்த்திப் பேசுவதும், அடிக்கடி கத்தி பேசி எதிரில் நிற்பவர்களை காலி செய்வதையுமே தனது அன்றாட டாஸ்க்காக வைத்திருந்தார். இதுவே பிக் பாஸ் ரசிகர்களிடம் அவர் மீது அதிருப்தி ஏற்பட காரணமாக உள்ளது. இந்நிலையில், இதுவரை கிடைத்த தகவலின் படி விக்ரமன் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ரேஸில் முன்னிலையில் இருப்பதாக சொல்லப்படுகிறது.