For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  இது பழைய ‘கர்நாடகா’ பிரச்சினை.. பக்கத்து வீட்டுபெண்ணின் கையை கடித்த பிக் பாஸ் மது.. வைரலாகும் வீடியோ

  |
  பக்கத்து வீட்டுபெண்ணின் கையை கடித்த பிக் பாஸ் மது.. வைரலாகும் வீடியோ

  சென்னை: இரண்டு வருடங்களுக்கு முன்னரும் இதே போல் கர்நாடகாப் பிரச்சினை ஒன்றை மது சந்தித்துள்ளார். ஆனால், அப்போது தன் கையை நறுக்கிக் கொள்ளாமல், பக்கத்து வீட்டுப் பெண்ணின் கையைக் கடித்து அவர் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

  பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் அதிரடியாக வெளியேற்றப் பட்டுள்ளார் நடிகை மதுமிதா. அதற்குக் காரணம், பிக் பாஸ் வீட்டில் கர்நாடகா மற்றும் காவிரி பிரச்சினையில் அவர் தன் கையை வெட்டிக் கொண்டது தான். தன்னைத் தானே காயப் படுத்திக் கொண்ட காரணத்தால் பிக் பாஸ் விதிகளின் படி அவர் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

  ஆனால், மதுமிதா இப்படி ஒரு கர்நாடகா பிரச்சினையை சந்திப்பது இது முதல்முறையல்ல. ஏற்கனவே இதே போன்ற பிரச்சினையை அவர் வேறு விதமாகக் கையாண்டிருக்கிறார்.அப்போது என்ன நடந்தது என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

  புகார்

  புகார்

  கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடிகை மதுமிதா மீது அவரது பக்கத்து வீட்டுக்காரரான உஷா என்பவர் கோயம்பேடு போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அப்புகாரில் அவர், ‘சென்னை வளசரவாக்கம் அன்பு நகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் தன்னை, பக்கத்து வீட்டில் வசித்து வரும் நடிகை மதுமிதா தகராறு செய்ததாகவும், அதில் தனது கையை மதுமிதா கடித்து விட்டதாகவும்' குற்றம் சாட்டி இருந்தார்.

  வீடியோ:

  வீடியோ:

  இது தொடர்பாக இருதரப்பிலும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மதுமிதா தனது பக்க விளக்கம் ஒன்றை வீடியோவாக வெளியிட்டார். அதோடு ஊடகங்களுக்கும் அவர் பேட்டி அளித்தார். அதில், ‘அடுக்குமாடிக் குடியிருப்பை பராமரிக்கும் பணி தொடர்பாக உஷாவுக்கும், எனக்கும் உஷாவுக்கும் பிரச்சினை ஏற்பட்டது.

  மன உளைச்சல்:

  மன உளைச்சல்:

  காரணமேயில்லாமல் என் மீது அவர் புகார் கூறினார். இதனால், இரவு நேரத்தில் மின்சாரத்தை கட் பண்ணுவது, ஏ.சி. இணைப்பைத் துண்டிப்பது, மாடிப்படிகளில் எண்ணெய்யை ஊற்றிவிடுவது போன்ற செயல்களில் அவர் ஈடுபட்டார். அவரது செயல்களால் தீவிர மன உளைச்சல் ஏற்பட்டது.

  மிரட்டல்

  மிரட்டல்

  இதுகுறித்து நான் உஷாவிடம் கேட்டபோது "நான் கர்நாடகாவை சேர்ந்தவள், தண்ணீருக்கே ஓடஓட விரட்டும் எங்கள் மீதே, போலீசில் புகார் கொடுக்கிறீயா என மிரட்டினார். இதனால், நான் அவரிடம் எதுவும் பேசாமல் வந்து விட்டேன். இந்த சம்பவத்தை குடியிருக்கும் அனைவரும் பார்த்தனர். இதனால் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் ஒன்று சேர்ந்து உஷா மீது போலீசில் புகார் கொடுத்தோம்.

  தட்டிக் கேட்டேன்

  தட்டிக் கேட்டேன்

  அப்போது, போலீஸார் உஷாவை எச்சரித்து அனுப்பினர். பின்னர், உஷாவின் டார்ச்சர் அதிகமானது. அப்போதுகூட நான் அமைதியாக இருந்தேன். சம்பவத்தன்று போலீஸ் உயரதிகாரி ஒருவர், வீட்டில் உஷாவிடம் விசாரித்துக்கொண்டிருந்தார். அப்போது, அந்த போலீஸ் அதிகாரியையும் என்னையும் தவறாக பேசினார் உஷா. அதை நான் தட்டிக்கேட்டேன்.

  பதிலடி

  பதிலடி

  இதனால் வாக்குவாதம் அதிகமானது. அப்போது, உஷா என்னைக் கடுமையாகத் தாக்கினார். அதை அருகிலிருந்தவர்கள் தடுக்க முயன்றனர். அவர் என்னைத் தாக்கியதைத் தடுக்கவே லேசாகக் கடித்தேன். அதை அவர் பெரிது படுத்தி விட்டார்.

  தற்காப்புக்காக கடித்தேன்

  தற்காப்புக்காக கடித்தேன்

  நம்முடைய சட்டத்தில் ஒரு பெண் தாக்கப்படும்போது தற்காப்புக்காக, நகத்தையும் பற்களையும் பயன்படுத்தலாம் என்று சொல்லப்பட்டுள்ளது. நான் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள். மக்கள்தான் என்னுடைய முதல் கடவுள். இன்று நடக்கும் விசாரணையில், காவல்துறையில் நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

  வைரல் வீடியோ

  வைரல் வீடியோ

  இது தொடர்பாக அப்போது ஊடகங்களில் வெளிவந்த வீடியோவும், மதுமிதா பேசிய வீடியோவும் தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகியுள்ளது. சிலர் வேடிக்கையாக நல்லவேளை இப்போது மதுமிதா யாருடைய கையையும் கடிக்கவில்லை. இல்லையென்றால் அவர் தான் கையில் கட்டுடன் கமல் அருகில் நின்று பேசிக் கொண்டிருந்திருப்பார் என கமெண்ட் வெளியிட்டுள்ளனர்.

  English summary
  A video of actress Madhumitha biting her neighbor woman hand is viral now in social medias.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X