For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நமக்கு சோறு தான் முக்கியம்.. கேப்ரில்லாவை மிக்சர் மாமாவுடன் ஓட்டும் நெட்டிசன்கள்.. வைரலாகும் மீம்!

  |

  சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் முதல் வாரத்தில் சமத்துப் பிள்ளையாக இருந்த ரியோ ராஜ், இப்போ சீற ஆரம்பித்துள்ளார்.

  யார் யார்க்கு என்ன வேஷமோ பிக்பாஸ் வீட்டில் என்பது போல, ஒவ்வொரு வாரமும், ஒவ்வொருத்தரா பெர்ஃபார்ம் பண்ணுவாங்கன்னு தெரியுது.

  அவ்ளோ பெரிய சண்டைக்கு மத்தியிலே நமக்கு சோறு தான் முக்கியமுன்னு சைலன்ட்டா சாப்பிட்டுக் கொண்டிருந்த கேப்ரில்லாவை கண்டுபிடிச்சு கலாய்த்து வருகின்றனர்.

  உள்ளே பேச வைத்து வெளியே லைவ் பண்ணிய பிக்பாஸ்.. வசமாக சிக்கிய சுரேஷ்.. கட்டம் கட்டும் ஹவுஸ்மேட்ஸ்!

  ஒல்லின்னு கிண்டல் பண்ணாங்க

  ஒல்லின்னு கிண்டல் பண்ணாங்க

  குண்டா இருந்தா குண்டா இருக்கன்னு கிண்டல் பண்றாங்க, ஒல்லியா இருந்தா பல்லின்னு சொல்லி கிண்டல் பண்றாங்க, உயரமா இருந்தா பனை மரம், குள்ளமா இருந்தா கத்திரிக்காய், கருப்பா இருந்தா அழகு இல்லன்னு கிண்டல் பண்றாங்க, வெள்ளையா இருந்தா வெள்ளைப் பன்னின்னு கிண்டல் பண்றாங்க, இந்த சமூகம் எப்படி இருந்தாலும் கிண்டல் பண்ணிட்டுத் தான் இருக்கும். ஒல்லியா இருக்கேன்னு ஃபீல் பண்ணி ஜிம்முக்கு போய் வெயிட் ஏத்துன கதையை கேப்ரில்லா சொல்லியும், அது நல்ல கதை இல்லைன்னு பிக் பாஸ் வீட்டுல இருக்கவங்களே கிண்டல் பண்ணிட்டாங்க..

  சாய்ச்சிபுட்டா மச்சா

  சாய்ச்சிபுட்டா மச்சா

  முதல் வாரம் எபிசோடு முழுவதும், ஹார்ட்டு, ஹார்ட் பிரேக்குன்னு எவ்ளோ மொக்கை போட முடியுமோ போட்டாங்க, அதைப் பற்றி கழுவி ஊற்றிய நிலையில், இந்த வாரம் ஆரம்பமே ஃபேஷன் ஷோ எல்லாம் வைத்து, இளைஞர்களை இப்பத்தான் ஐபிஎல் பார்க்குறதுல இருந்து பிக்பாஸ் பக்கமா திருப்ப ஆரம்பிச்சு இருக்காங்க.. கேப்ரில்லாவின் ஃபேஷன் ஷோ ஷிவானி அளவுக்கு இல்லைன்னாலும், கேபி ரசிகர்களை அவர் நிச்சயமாவே சாய்ச்சிப்புட்டாங்க..

  செம டான்ஸ்

  செம டான்ஸ்

  தினமும் பிக் பாஸ் வீட்டில் காலையில பாட்டை போட்டுட்டா போதும், எங்க இருந்தாலும் ஓடி வந்து செம ஸ்டெப் போட்டு டான்ஸ் ஆடுறதுல நம்ம கேபியை அடிச்சிக்க முடியாது. விஜய் டிவியின் ஜோடி நம்பர் 1 ஜூனியர் மற்றும் சீனியர் என இரண்டிலும் டைட்டில் ஜெயிச்சவங்களாச்சே சும்மாவா நல்லா பின்றாங்கப்பா.

  மிக்சர் மாமி

  மிக்சர் மாமி

  நம்ம மொட்டை தலை சுரேஷ் சக்கரவர்த்திக்கும், விஜய் டிவியின் செல்லப் பிள்ளை ரியோ ராஜுக்கும் இந்த வாரம் நல்லா முட்டிக்கிச்சு, ஆனால், அதையெல்லாம் கொஞ்சம் கூட கண்டுக்காம, நமக்கு சோறு தான் முக்கியம் என சாப்பிட்டுக் கொண்டே வேடிக்கை பார்க்கும் கேபியை வட்டம் போட்டு, மிக்சர் மாமாவுடன் ஒப்பிட்டுப் போட்டுள்ள மீம் வெறித்தனமாக வைரலாகிறது.

  இருவரில் யார்

  இருவரில் யார்

  பிக் பாஸ் வீட்டில் ஷிவானி யாருடனும் மிங்கிள் ஆக மாட்றாங்கன்னு எல்லோரும் குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். ஆனால், அதிகமாக ஸ்க்ரீனில் வராமல் இன்னும் தங்களது ஆட்டத்தை காட்டாமல் இருக்கும் ஆஜீத் மற்றும் கேப்ரில்லா ஆகிய இருவரில் யார் முதலில் வெளியேறுவார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். கேபிக்கு முன்னதாக ஆஜீத் தான் அவுட்டாவார் என்ற கணிப்புகளும் வைரலாகி வருகின்றன.

  செம குசும்பு

  செம குசும்பு

  பார்க்க சின்ன பொண்ணு மாதிரி இருந்துக்கிட்டு, கமல் சார் முன்னாடியே நம்ம டெரர் பீஸ் சுரேஷ் சக்கரவர்த்தியை இவரு செய்றதெல்லாம் செம குசும்புத்தனம். ஆனால், பார்க்க செம என்டர்டெயின்மென்ட்டா இருக்கு என அவருக்கு ஹார்ட் குத்தி, ரசிகர்களை என்ஜாய் பண்ண வைத்து, வீக்கெண்ட் ஷோவில் செம ஸ்கோர் செய்து இருந்தார் கேப்ரில்லா என்பது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Bigg Boss Tamil 4 contestant Gabriella enjoys her food during a big fight in the house. Some netizens make a meme against her and make it as a viral one.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X