For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  குழாயடி சண்டை போடுறவங்களலாம்.. பிக் பாஸ் வீட்டுக்கு வந்தா இப்படித்தான்.. இன்னாம்மா சண்டை போடுறாங்க!

  |

  சென்னை: ஒய் பிளட் சேம் பிளட் காலர் டாஸ்க்கில் யார் நல்லா பர்ஃபார்ம் பண்ணாங்களோ, அதன் படி அவர்களை வரிசையில் நிற்க பிக் பாஸ் சொல்லி நல்லா கொளுத்திப் போட்டார்.

  மடக்கி மடக்கி ரியோவை கடுப்பேற்றிய அனிதா. | Call Centre Task

  ஷிவானியிடம் வழிந்து பேசிவிட்டு, பாலாவிடம் பேசாமல் இருந்த ஆரிக்கு ஏன் தான் முதல் இடத்தை கொடுத்தார்கள் என்றே தெரியவில்லை.

  இரண்டு முறையும் தானே போனை கட் பண்ணிட்டு, அர்ச்சனா அக்கா தான் முதல் இடத்துக்கு தகுதி என வாதாடியது எல்லாம் ரொம்ப ஓவர்.

  எனக்கு ரெண்டாவது இடம் தான் வேணும்.. அடம்பிடித்த அனிதா.. கோபத்துல என்ன செஞ்சாரு தெரியுமா?

  ஒரே பிளேடு

  ஒரே பிளேடு

  ஒய் பிளட் சேம் பிளட் டாஸ்க்கை கொடுத்து விட்டு, போன வாரமும் இந்த வாரமும் ஒரே பிளேடு போட்டு ரசிகர்களின் கழுத்தை அறுத்து விட்டனர். போன வாரம் தான் நிவர் புயல் காரணமாக இழு இழுவென இழுத்தார்கள் என்று பார்த்தால், இந்த வாரமும் வியாழன் வரை வச்சு செய்து விட்டனர்.

  லக்சரிக்கு வேட்டு

  லக்சரிக்கு வேட்டு

  ஏகப்பட்ட கிஃப்ட்டுகள், சாப்பாடுகள் என தினம் தினம் கொடுக்கப்படும் விளம்பர டாஸ்க்குகளுடன் இந்த சீசன் போட்டியாளர்களுக்கு கிடைப்பதால், பாலாஜி முருகதாஸ் சொல்ற மாதிரி எதுக்கு லக்சரி டாஸ்க்கை ரிஸ்க் எடுத்து செய்யணும், போனா போகட்டுமே என அசால்ட்டா சொல்வது போலவே காலர் டாஸ்க்கில் ஃபேவரிசம் காட்டி லக்சரி பட்ஜெட் மதிப்பெண்களை போட்டியாளர்கள் குறைத்துக் கொண்டனர்.

  சண்டை ட்ரியோ

  சண்டை ட்ரியோ

  சம்யுக்தா ட்ரியோ குரூப் என சொல்லி கலாய்த்த நிலையில், இப்போ பிக் பாஸ் வீட்டின் சண்டை ட்ரியோவாக அனிதா சம்பத், சனம் ஷெட்டி மற்றும் பாலாஜி முருகதாஸ் மாறி உள்ளனர். எப்படா சான்ஸ் கிடைக்கும் சண்டை போட்டு பிக் பாஸுக்கு கன்டென்ட் கொடுத்து, வெளியேறாமல் தப்பித்துக் கொள்ளலாம் என பிளான் போட்டு விளையாடி வருகின்றனர்.

  குழாயடி சண்டை

  குழாயடி சண்டை

  காது கொடுத்தே என்ன பேசுறாங்க என்பதை கேட்க முடியாத அளவுக்கு, நன்றாக படித்த, மீடியா பற்றி தெரிந்த புத்திசாலிகள் குழாயடி சண்டை போடும் விதமாக கத்திக் கொண்டு ஆளுக்கு ஒரு நியாயத்தை சொல்லி சண்டை போட்டதை பார்க்கவே சகிக்கல. க்ளீன் கேமாக யாருமே விளையாட வில்லை. யார் பேச்சையும் கேட்க யாருக்கும் விருப்பம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  அனிதாவுக்குத்தான் முதலிடம்

  அனிதாவுக்குத்தான் முதலிடம்

  ஒய் பிளட் சேம் பிளட் கேமை ஒழுங்கா பண்ணவர்களின் அடிப்படையில் வரிசை அமைக்க வேண்டும் என்கிற நிலையில் அனிதாவுக்குத்தான் முதலிடம் கொடுத்து இருக்க வேண்டும். நிஷா கேட்ட கேள்விக்கும் சரியாக பதில் அளித்தும், ரியோவை ஹர்ட் பண்ணும் கேள்விகளை அழகா அடுக்கி வைத்தும் அசத்தினார். ஆனால், குரூபிசம், ஃபேவரிசம் ஆட்சி செய்யும் இடத்தில் அனிதாவுக்கு இரண்டாவது இடமும் கிடைக்க வில்லை என்பதால், அவர் டென்ஷனாகிட்டார். ரியோ கால் கட் பண்ணாத இடத்தில் அனிதா அவ்வளவு பேசியும் வெற்றி பெறவில்லை.

  பாலாவுக்கு ஏன்?

  பாலாவுக்கு ஏன்?

  ஆரிக்கு முதல் இடம் கிடைத்ததும் சரியில்லை. சனம் ஷெட்டிக்கு இரண்டாம் இடம் கிடைத்ததும் சரியில்லை. பாலாவுக்கு மூன்றாவது இடமும் கொடுத்திருக்க கூடாது என பிக் பாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். வரம்பு மீறிய கேள்விகளை கேட்டு, கஸ்டமர் கேர் நிர்வாகியை தானாகவே போனை வைக்க செய்ய வேண்டும். அதன் படி பார்த்தால், இந்த டாஸ்க்கை யாருமே சரியாக செய்யவில்லை என்பது தான் உண்மை இவங்களுக்கு லக்சரியை இந்த முறை ஜீரோவாக மாற்றி இருக்கணும் என்றும் ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

  English summary
  Bigg Boss Tamil 4 contestants fight for the top order place. Netizens slams the contestants no one played the game in correct way.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X