For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஹானஸ்ட்டா சொல்றேன்.. கொஞ்சம் கூட வொர்த் இல்லை.. பிக்பாஸ் 4 போட்டியாளர்களை பங்கம் பண்ணிய மீம்!

  |

  சென்னை: இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் லிஸ்ட்டை தெரிந்து கொண்ட ரசிகர்கள், சுவாரஸ்யமே இல்லையே என கலாய்த்து வருகின்றனர்.

  சர்ச்சைக்கும், கவர்ச்சிக்கும் கொஞ்சமும் பஞ்சம் இல்லாமல், மூன்று சீசன்களை பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்து விட்டது.

  ஆனால், 4வது சீசன் எப்படி இருக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

  என்னம்மா.. இது நியாயமா.. இப்படி ஆரம்பிச்சுட்டீங்க.. மாஸ்டர் பட நடிகையிடம் நீதி கேட்கும் நெட்டிசன்ஸ்!

  ஆரம்பமே அசத்தல்

  ஆரம்பமே அசத்தல்

  தமிழில் முதன்முறையாக பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அதனை கமல் தொகுத்து வழங்குகிறார். நடிகை ஓவியா, சிநேகன், நமீதா, ரைசா வில்சன், ஆரவ், ஹரிஷ் கல்யாண், பிந்து மாதவி, ஆரத்தி, ஜூலி, சக்தி, கணேஷ் வெங்கட்ராம், ஸ்ரீ, என போட்டியாளர்கள் லிஸ்ட்டே அமர்க்களமாக இருந்தது.

  ஐஸ்வர்யா, யாஷிகா

  ஐஸ்வர்யா, யாஷிகா

  முதல் சீசனுக்கு சற்றும் சளைக்காமல் இரண்டாவது சீசனில் மும்தாஜ், ரித்விகா, ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த், ஜனனி அய்யர், மகத், தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி என சர்ச்சைக்கும் கவர்ச்சிக்கும் பஞ்சமே இல்லாமல் களைக் கட்டியது. சர்வாதிகாரி டாஸ்க் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வேற லெவலில் வைரலானது.

  இது தான் ஹைலைட்டே

  இது தான் ஹைலைட்டே

  பிக்பாஸ் தமிழ் வரலாற்றிலேயே முதல் சீசனுக்கு பிறகு ஏகப்பட்ட சூப்பரான போட்டியாளர்கள் பிக்பாஸ் 3வது சீசனில் தான் கலந்து கொண்டனர் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு போட்டியாளர்கள் லிஸ்ட் செம ஸ்ட்ராங்காக இருந்தது. வனிதா விஜயகுமார், கஸ்தூரி, மீரா மிதுன், லாஸ்லியா, சாக்‌ஷி அகர்வால், ஷெரின், கவின், சேரன், பாத்திமா பாபு, அபிராமி வெங்கடாச்சலம், ரேஷ்மா, முகேன் ராவ், ஜாங்கிரி மதுமிதா என போன சீசனும் களைகட்டியது.

  யார் யார்

  யார் யார்

  நான்காவது சீசனில் யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்கிற உறுதியான உத்தேச பட்டியல் வெளியாகி விட்டது. நடிகை ரேகா, ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், ரியோ ராஜ், ஆரி, சனம் ஷெட்டி, விஜே அர்ச்சனா, ஆஜித், பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத் உள்ளிட்ட பெயர்கள் கன்ஃபார்ம் ஆகி உள்ளன.

  எதிர்பார்க்கப்பட்ட பெயர்கள்

  எதிர்பார்க்கப்பட்ட பெயர்கள்

  ஆனால், நான்காவது சீசன் அறிவிக்கப்பட்ட நிலையில், எதிர்பார்க்கப்பட்ட நடிகை கிரண், பூனம் பஜ்வா, டிக்டாக் இலக்கியா, அம்ரிதா அய்யர், லக்‌ஷ்மி மேனன், அபி ஹாசன், ஷில்பா மஞ்சுநாத், கருண் ராமன் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவில்லை என்பது பல ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கி இருக்கிறது.

  ஹானஸ்ட்டா சொல்றேன்

  ஹானஸ்ட்டா சொல்றேன்

  இந்நிலையில், இந்த ஆண்டு பிக்பாஸ் போட்டியாளர்கள் பட்டியல் சிறப்பாக இல்லை என்றும், நிகழ்ச்சி ரொம்ப போரடிக்கும் போலத் தெரிகிறதே என்றும் கமெண்ட்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர். மேலும், வனிதா விஜயகுமார் போட்டோவையும் போட்டியாளர்கள் புகைப்படங்களையும் பதிவிட்டு, "நான் ஹானஸ்ட்டா சொல்றேன்.. சத்தியமா வொர்த்தே இல்லை என மீம் போட்டு பங்கம் பண்ணி உள்ளனர்.

  English summary
  Bigg Boss Tamil season 4 guessing contestant list not satisfied Bigg Boss fans. They trolled the contestants by a meme goes viral.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X