For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  உங்களால குழந்தைய சரியா வளர்க்க முடியலன்னா.. அப்புறம் எதுக்கு பெத்துக்குறீங்க.. கொதித்த ரசிகர்கள்!

  |

  சென்னை: பாலாஜி முருகதாஸின் கண்ணீர் கதை உண்மையிலேயே ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

  Balaji Murugadoss அப்பாவும் அம்மாவும் Alcoholic • பாகுபலிக்கு இப்படி ஒரு கதை

  சிரித்த முகத்துடன் ஜாலியாக சுற்றும் மனிதர்களுக்கு உள்ளார எவ்வளவு ரணம் ஒளிந்து கிடக்கிறது என்பதற்கு பாலாஜி முருகதாஸ் ஒரு சாட்சியாக நிற்கிறார் என பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  இந்த பிக் பாஸ் சீசனில் வெற்றி பெறவும் அவருக்கு வாய்ப்புகள் அதிகம் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  அப்பாவும் அம்மாவும் ஆல்கஹாலிக்.. பாகுபலி பாலாஜி முருகதாஸ் வாழ்க்கையில இப்படியொரு சோகக் கதை இருக்கா?

  பிக் பாஸ் வீட்டின் பாகுபலி

  பிக் பாஸ் வீட்டின் பாகுபலி

  பாகுபலி படத்தின் வில்லன் பல்வாள் தேவன் போல வாட்ட சாட்டமாக இருக்கும் பாலாஜி முருகதாஸை சனம் ஷெட்டி பாகுபலி என்றே அழைத்து வருகிறார். 2018ம் ஆண்டு நடந்த மிஸ்டர் இன்டர்நேஷனல் டைட்டில் வென்ற பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் வீட்டுக்குள் 4வது போட்டியாளராக உள்ளே நுழைந்தார்.

  ஆம்பள ஓவியா

  ஆம்பள ஓவியா

  மனசுல பட்டதை சட்டென சொல்லும் நபராக பாலாஜி முருகதாஸ் இந்த பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார். அவரை ஆம்பள ஓவியா என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். எவிக்‌ஷனுக்கு 4 பேரை பரிந்துரை செய்ய வேண்டும் என பிக் பாஸ் சொன்ன மறுகணமே கதை சொல்லாத 8 பேரை ஒருங்கிணைத்து, கேப்ரில்லா சின்னப் பொண்ணு, சனம் சும்மா மாடியில இருந்து விழுந்தாங்க, ஆரி அண்ணன், ரியோ அண்ணன் கதை எல்லாம் இன்ஸ்பயர் என முடிவெடுத்து சுரேஷ் சக்கரவர்த்தியின் பாராட்டுக்களையும் அள்ளினார்.

  பாலாஜியின் கண்ணீர் கதை

  பாலாஜியின் கண்ணீர் கதை

  இப்படி வீட்டில் படு ஜாலியாக இருக்கிறாரே.. செம வெயிட் பார்ட்டி போல அப்படியே ஜாலியா இங்கேயும் வந்துட்டார் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், குழந்தை பருவம் முதல் வளர்வது வரை வீட்டில் பெற்றோர்களின் அக்கறை இல்லாத வளர்ப்பில் தினம் தினம் செத்து செத்து வளர்ந்த கண்ணீர் கதையை சொல்லி அனைவரையும் அழ வைத்து விட்டார்.

  சூப்பரா கேட்டியா ஒரு கேள்வி

  சூப்பரா கேட்டியா ஒரு கேள்வி

  "ஒரு ஆசிரியரா நான் எத்தனையோ மாணவர்களை பார்த்திருக்கிறேன், இன்று இவர் சொன்ன விசயங்கள் அனைத்தும் உண்மையே, சமூகத்தில் ஒருவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பில் மட்டுமே சாத்தியமாகும்.... சூப்பரா கேட்டியா ஒரு கேள்வி" என இந்த ஆசிரியர் பாலாஜி முருகதாஸுக்கு 100க்கு 100 மார்க் போட்டுள்ளார்.

  பயில்வானுக்கும் சோகக் கதை

  பயில்வானுக்கும் சோகக் கதை

  பாலாஜி முருகதாஸின் கதையை புரமோவில் பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் அது குறித்து ஏகப்பட்ட கருத்துக்களை ஜாலியாகவும், சீரியஸாகவும் ட்வீட் போட்டு வருகின்றனர். "பயில்வானுக்கும் சோகக் கதை இருக்கத்தான் செய்கிறது" என வடிவேலுவின் மீமை போட்டு இந்த நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார்.

  ஜாலி மனிதர்கள்

  ஜாலி மனிதர்கள்

  தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வருபவர்கள், பாலாஜி முருகதாஸ் கதையையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும், அனிதா சம்பத்தை ஓட்டியது போல இவரை ஓட்டாமல், "ஜாலி மனிதர்கள் மனதில் எத்தனை சோகங்கள்" என வடிவேலு மீம்களை போட்டு வருகின்றனர்.

  தப்பான பெற்றோர்களுக்கு செருப்படி

  தப்பான பெற்றோர்களுக்கு செருப்படி

  "உங்களால குழந்தையை பெத்து வழக்க முடியலைன்னா நீங்க எல்லாம் குழந்தை பெத்து என்ன பண்ண போறீங்க சில தப்பான பெற்றோர்களுக்கு செருப்படி" என இந்த பிக் பாஸ் ரசிகை பாலாஜி முருகதாஸின் கண்ணீர் கதை போல தமிழ்நாட்டில் எத்தனையோ குழந்தைகள் தவறான பெற்றோர்களால் வளர்க்கப்படுவதை கண்டித்து இருக்கிறார்.

  English summary
  Bigg Boss Tamil 4 fans reactions on Balaji Murugadoss heart touching story. Many of them blamed the bad parents in our society.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X