For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ரம்யாவுக்கு என்ன ஒரு பரந்த மனசு.. எவிக்ஷன் ஃப்ரீ பாஸை ஆஜீத்துக்கு அப்படியே அள்ளிக் கொடுத்துட்டாரே!

  |

  சென்னை: தலைவின்னா இப்படி இருக்கணும், ரம்யா பாண்டியனுக்கு என்ன ஒரு பரந்த மனசு, எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை ஆஜீத்துக்கு அப்படியே விட்டுக் கொடுத்துட்டாரே என ரசிகர்கள் அவரை ரியோவை போல தூக்கி வைத்துக் கொண்டாட ஆசைப்படுகின்றனர்.

  Bigg Boss 4 Tamil • Day 9 | Housemates in Vijay Style • Nomination

  எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸுக்காக போராடும் டாஸ்க்கில் சனம் ஷெட்டி முதல் கேப்ரில்லா வரை வெளியேற, சுரேஷ் சக்கரவர்த்தியின் ஆட்டத்தை அடையாளம் கண்டு கொண்டார் ரம்யா பாண்டியன்.

  கடைசியாக ஆஜித்தை வைத்து விளையாடி சுரேஷை சூப்பராக வெளியேற்றினார்.

  என்ன மொட்டை தாத்தா.. சுட்டிக் குழந்தை ஆஜீத் கூடலாம் சண்டை போடுறீங்க.. கொஞ்சம் கூட சரியில்லையே!

  மகா கேடி

  மகா கேடி

  ஆம்பள வனிதா என ரசிகர்கள் நிச்சயம் சுரேஷ் சக்கரவர்த்திக்கு வைத்த பேரு, 100 சதவீதம் பொருத்தமாக உள்ளது. வனிதா விஜயகுமாரையே தூக்கி சாப்பிட்டுவிட்டு, தான் ஒரு மகா கேடி என இந்த சீசனில் கலக்கி கெத்துக் காட்டுகிறார் நம்ம மொட்டை அங்கிள் சுரேஷ் சக்கரவர்த்தி.

  கேப்டன் கூல்

  கேப்டன் கூல்

  முதல் வாரத்திலேயே பிக் பாஸ் வீட்டு தலைவியாக பதவியேற்ற ரம்யா பாண்டியன், எப்பவுமே செம காமாக இருந்து, கேப்டன் கூல் தோனியை போலவே இந்த சீசனில் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டு வருகிறார். யாருக்கு தெரியும், நிச்சயம் இவங்க டைட்டில் வின் பண்ணாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. அந்த அளவுக்கு சான்ஸ் இருக்கு.

  அந்த மனசு இருக்கே

  அந்த மனசு இருக்கே

  நான் உனக்கு விட்டுக் கொடுக்கிறேன், எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் எடுத்துக்கோ என ஆஜீத்துக்கு சொல்லாமல், நீ சொன்ன காரணத்தை 200 சதவீதம் நாம் ஏற்கிறேன். அதுக்காக இந்த ஃப்ரீ பாஸ் எனக்கு வேண்டாம். நீ வச்சிக்கோடா தம்பி என ஒரு அக்கா போல ரம்யா பாண்டியன் பெரிய மனுஷ தன்மையுடன் நடந்து கொண்ட அந்த நல்ல மனசுக்காகவே அவரை பாராட்டலாம்.

  எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ்

  எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ்

  அந்த அறையிலே எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை தராமல், அது குறித்து ரியோவை பேச வைத்து பிக் பாஸ் அதனை ஆஜீத்துக்கு வழங்கினார். எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் கிடைச்சிடுச்சு, ஆஜீத் சேவ் ஆயிடுவான்னு நினைத்த நேரத்தில், அது ஒரு அலாவுதின் பூதம் அதனை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற சூப்பரான ஆப்பையும் கூடவே சேர்த்து கொடுத்துட்டாரு பிக்பாஸ். பாவம் ஆஜீத்.

  திருட்டு புத்தி

  திருட்டு புத்தி

  சனம் ஷெட்டி, உடனடியாக அப்போ அதை திருடலாமா? என தனது திருட்டு புத்தி போகாமல் கேட்க, பலரும் சிரித்து விட்டனர். குட்டிக் குழந்தை ஆஜீத்தை ஏமாற்றி, அந்த ஃப்ரீபாஸை திருடப் போவது யாரு என்கிற கோணத்துடன் இந்த வார பிக் பாஸ் சீசன் ஓடும் என தெரிகிறது. ஃப்ரீ பாஸ் கிடைத்த ஆஜித்தே கடைசியாக அது இல்லாமல் எவிக்ட் ஆனாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை.

  பனியனுக்கு உள்ள

  பனியனுக்கு உள்ள

  அடுத்தவர் கைகளுக்கு அகப்பட்டு விடாமல் அந்த எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸை வைத்துக் கொள்ள வேண்டும் என்றவுடன், நீ சொன்ன இடத்துலயே வச்சிடு என மொட்டை தலை சுரேஷ் சொல்றாரு. ஆஜீத் அவர்கிட்ட எப்போ பேசுனான்னு தெரியல. ஆஜீத், உடனே ஜாக்கெட்டுக்குள்ள பர்ஸ், செல்போன் எல்லாம் சில பெண்கள் வைப்பது போல, தனது பனியனுக்குள் அந்த அலாவுதீன் பூதத்தை வைக்கிறார். யாரு ஆட்டையை போடப் போறாங்களோ!

  English summary
  Ramya Pandian granted Eviction Free Pass to Aajeedh in the Eviction Free Pass task. Aajeedh thanks Ramya Pandian. But Bigg Boss announced a super twist about the Free Pass.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X