For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  என் மகனுக்கு 'பிளட் கேன்சர்'.. சக போட்டியாளர்களை கலங்கடித்த ‘மொட்டை’ சுரேஷ்.. இதுதான் ஹைலைட்டே!

  |

  சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் நான்காம் நாளில் சக போட்டியாளர்களையும், பார்வையாளர்களையும் உருக வைத்த கதை என்றால், அது நம்ம 'மொட்டை தல' சுரேஷ் சக்கரவர்த்தி சொன்ன சோகக் கதை தான்.

  Who is this Suresh Chakrawarthi | Bigg boss 4

  இந்த சீசனில் பிக் பாஸ் வீட்டுக்கு 15வது போட்டியாளராக நுழைந்தவர் சுரேஷ் சக்கரவர்த்தி.

  நடிகர், சமையல் கலை வல்லுநர், தொழிலதிபர் என பன்முகத் தன்மை கொண்ட சுரேஷ் சக்கரவர்த்திக்குள் இப்படி ஒரு சோகக் கதையும் ஒளிந்து இருக்கிறது.

  அனிதா.. வனிதா.. பிக் பாஸ் ரசிகர்கள் மட்டுமில்ல.. உள்ளே இந்த பிரபலமும் இப்படித் தான் கலாய்க்கிறாரு!

  அதள பாதாளம்

  அதள பாதாளம்

  மிடில் கிளாஸ், கஷ்டப்படுற குடும்பத்துல இருந்து மேல வந்தேன் என மற்ற போட்டியாளர்கள் சொல்லும் போது, பார்ன் வித் த சில்வர் ஸ்பூன் அப்படி நல்லா வசதியா இருந்துட்டு, டக்குன்னு அதள பாதாளத்துக்கு போனது மாதிரி தான் என் வாழ்க்கையும் ஆகிடுச்சு, நான் கீழ இருந்து மேல வந்தவன் இல்ல. மேல இருந்து கீழ விழுந்து எழுந்தவன் என்றார்.

  கடவுள் போல தூக்கிவிடுவாங்க

  கடவுள் போல தூக்கிவிடுவாங்க

  6 கிரவுண்ட் இடத்துல பெரிய வீட்டுல இருக்க, நீ சினிமாக்காரன் பொய் சொல்லாத என என்னை பார்த்து பலரும் கிண்டல் அடித்துள்ளனர். ஆனால், உண்மையில், அந்த 6 கிரவுண்ட் இடத்துல உள்ள பெரிய வீட்டில், கடைசியில் ஒரு சின்ன இடத்தில் மட்டுமே நான் வாழ்ந்தேன் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், ஒன்று, நான் கஷ்டப்படுற நேரத்துல எல்லாம் கடவுள் போல யாராவது வந்து கைத்தூக்கி விடுவாங்க.. அப்படி விழுந்து விழுந்து எழுந்தவன் நான் என்றார்.

  வெளிநாடு போய் சம்பாதிச்சேன்

  வெளிநாடு போய் சம்பாதிச்சேன்

  அப்புறம் கஷ்டப்பட்டு வெளிநாடு போய் வெறித்தனமா உழைச்சு சம்பாதிச்சேன் அமெரிக்கா, ஆஸ்திரேலியன்னு போனேன். ஆஸ்திரேலியாவில் ஏகப்பட்ட ரெஸ்டாரன்ட்களை தொடங்கி சக்சஸ் பண்ணேன். ஆனால், அதை எல்லாம் விட்டுவிட்டு, வரும் நிலைமைக்கு மீண்டும் சரியான அடி விழுந்தது என கண்ணீர் விட தொடங்கினார்.

  மகனுக்கு பிளட் கேன்சர்

  மகனுக்கு பிளட் கேன்சர்

  அதை சொல்லக் கூட வாய் வராமல் மெளனியாய் கண்கள் குளமாக மாறிய சுரேஷ் சக்கரவர்த்தி ஹவுஸ்மேட்கள் பாவமாய் பார்த்து கலங்க ஆரம்பித்தனர். தொடர்ந்து பேசிய அவர், மகனுக்கு பிளட் கேன்சர், பார்க்காத வைத்தியம் இல்லை, ஏறாத மருத்துவமனை இல்லை, கடைசியா நேச்சுரோபதி வைத்தியம் பார்த்து குணமானார் என்றார்.

  ஹேப்பி நியூஸ்

  ஹேப்பி நியூஸ்

  பெங்களூருக்கு வந்துட்டோம்.. கேன்சர் குணமான பிறகு என் மகன் ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பித்தான். அவங்க குடும்பத்துல, அசைவம் சாப்பிட மாட்டாங்கன்னு சொல்லிட்டதால, என் ஹோட்டல்களையும் எல்லாம் மூடிவிட நேர்ந்தது. உயிர் பிழைப்பானா? பிழைக்க மாட்டான என நினைத்த மகனின் மனைவி இப்போ கர்ப்பமா இருக்கா? அடுத்த வருஷம் மார்ச் மாசம் நான் தாத்தா ஆகப் போறேன் என்கிற ஹேப்பி நியூஸையும் சுரேஷ் சொன்னதும் சக போட்டியாளர்கள் அவரை வாழ்த்தினர்.

  நிறைய ஹர்ட் பண்ணுவேன்

  நிறைய ஹர்ட் பண்ணுவேன்

  என்னடா கடைசி வரைக்கும் புரமோவில் வில்லத்தனமா சுரேஷ் சக்கரவர்த்தி பேசுனதே காணோமே.. இன்னைக்கும் ஏமாத்திட்டாங்களா என பார்த்தால், கடைசியாக, நான் கடும் போராளி, கடுமையாக இந்த நிகழ்ச்சியில் போராடுவேன். யார் ஜெயித்தாலும் நான் ஜெயித்ததா எடுத்துக்குவேன். யாரையாவது ஹர்ட் பண்ணியிருந்தா மன்னிச்சுடுங்க.. கம்மியா ஹர்ட் பண்ணியிருப்பேன்.. நான் ஹர்ட் பண்ண ஆரம்பிச்சா, நிறைய ஹர்ட் பண்ணுவேன் என அவருடைய வில்லத்தன லுக்கை விட, அனிதா சம்பத் முகம் அப்படியே மாறியதை க்ளோஸ் வைத்து எடிட்டர் காட்டி அந்த சேப்டரை முடித்தார்.

  இருவருக்கும் அது இருக்கு

  இருவருக்கும் அது இருக்கு

  இந்த எபிசோடை பார்த்த ரசிகர்கள், இருவருக்கும் அந்த போட்டி மனப்பான்மை இருக்கு, ரெண்டு பேரும் நல்லா கேம் பிளான் போட்டு விளையாடுறாங்க.. மத்தவங்களாம் டம்மியா இருக்காங்க.. போகப் போக பார்க்கலாம் என கமெண்ட்டுகளை சமூக வலைதளங்களில் தெறிக்க விட்டு வருகின்றனர்.

  English summary
  Bigg Boss Tamil 4 day 4 episode contains Suresh Chakaravarthy heart touching story. He shared his son’s blood cancer problem and how he overcome all the struggle in his life.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X