யாருக்கு என்ன ப்ளஸ், என்ன மைனஸ்... போட்டியாளர்கள் பற்றி ஓப்பனாக சொன்ன சிபி

சென்னை : பிக்பாஸில் நடத்தப்பட்ட பணப்பெட்டி டாஸ்கில் ரூ.12 லட்சம் தொகையுடன் வெளியேறி சென்றார் சிபி. இவரை நேற்றைய எபிசோடில் மேடைக்கு அழைத்து பேசினார் கமல். நிகழ்ச்சியின் துவக்கத்திலேயே சிபியிடம், என்ன காரணத்திற்காக பணப்பெட்டியுடன் வெளியே போனீர்கள் என காரணம் கேட்டார் கமல்.

Recommended Video

Bigg Boss Tamil Season 5 | 8th January 2022 - Promo 2 | Contestant பற்றி Ciby-யின் கருத்து!!

அதற்கு சிபி சொன்ன நேர்மையான, வெளிப்படை தன்மையான பதில் அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து மற்ற போட்டியாளர்கள் பற்றியும் அவர்களின் ப்ளஸ், மைனஸ் என்ன என்பது பற்றியும் அவர்களிடமே சொல்லுங்கள் என சிபியுடன் அகம் டிவி வழியே பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார் கமல்.

பிரியங்கா மைனஸ் இது தான்

பிரியங்கா மைனஸ் இது தான்

பிரியங்காவிடம் இருந்து பேச்சை துவக்கிய சிபி, உள்ளே இருக்கும் போதே தெரியும் பிரியங்கா ஜாலியானவர். அன்பாக, அக்கறையாக இருக்கக் கூடியவர். மைனஸ் என்றால் அவர் எல்லோரையும் நம்புவார். ஆனால் அது பொய்யாகும் போது அதை அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. மிகவும் லேட்டாக எல்லோரை பற்றியும் புரிந்து கொள்கிறார். ஆனால் இப்போது அவரது கேமை அவர் சரியாக ஆடி வருகிறார். நம்பிக்கையாக பேசுகிறார்.

ஸ்மார்ட் பாவனி

ஸ்மார்ட் பாவனி

பாவனி பயங்கர ஸ்மார்ட். அனைத்தையும் ஆராய்ந்த பிறகு தான் பேசுவார். முதலில் அவருடன் அதிகம் பேசியதில்லை. கடைசி 2 வாரங்களாக தான் பேசினேன். அவர் நேரடியாக எதையும் பேசாமல், பேசுபவருக்கு ஏற்ற மாதிரி, அவர்களின் மனம் புண்படாமல் தான் பேசுவார். சில நேரங்களில் அவர் பேசுவதை கேட்கும் போது இன்னும் ஷார்ப்பாக பேசி இருக்கலாம் என தோன்றும்.

நிரூப்பை கழுவி ஊற்றிய சிபி

நிரூப்பை கழுவி ஊற்றிய சிபி

நிரூப்பிற்கு ஒரே நோக்கம் எப்படியாவது ஃபைனல்ஸ் போய் விட வேண்டும், ஜெயிக்கனும் அப்படிங்குற எண்ணம் தான். அவனுக்கு நல்ல மனசு இருக்கு. நன்றாக விளையாடுவான். ஆனால், இன்னும் கெத்தாக விளையாடி இருக்கலாம். கேமிற்கு உண்மையாக இருக்கான். ஆனால் அவனுக்கு உண்மையாக இருக்கானா என்ற சந்தேகம் பலமுறை எனக்கு வந்துள்ளது. என்ன பண்ணியாவது ஃபைனல்சிற்கு போய் விட வேண்டும் என்பதில் அவன் ஆரம்பம் முதலே கவனமாக இருந்தான். விளயைாட்டில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக நிரூப் பல இடங்களில் சுயமரியாதையை இழக்கிறான். அது அவனுடைய ஸ்டாட்டர்ஜியாக கூட இருக்கலாம். ஆனால் அது எனக்கு மைனசாக தோன்றுகிறது.

அடிச்சு பேசு மச்சான்

அடிச்சு பேசு மச்சான்

ராஜு எப்போதும் பொறுமையாக பேசுவான். அனைத்தையும் பொறுமையாக டீல் பண்ணுவான். ஒரு பிரச்சனை என்றால் ஒதுங்கி போகாமல் இரு தரப்பிடமும் போய் பேசி, அதை தீர்ப்பதற்கு முயற்சி செய்வான். அது அவனிடம் உள்ள நல்ல குணம். மைனஸ் என்றால், நீ மேலோட்டமாக பேசுகிறாய். இன்னும் கொஞ்சம் அடித்து, ஸ்டிராங்காக பேசினால் நன்றாக இருக்கும். உன் பாயிண்ட் எல்லாமே நன்றாக இருக்கும். ஆனால் அதை இன்னும் ஸ்டிராங்காக பேசினால் நன்றாக இருக்கும்.

தாமரைக்கு இப்படி ஒரு ஆசையா

தாமரைக்கு இப்படி ஒரு ஆசையா

தாமரை முன்பெல்லாம் ஒரு வெறியோடு விளையாடுவார். ஆனால் கடந்த சில நாட்களாக, வீட்டில் இருந்தால் போதும் என்பது போல் அவரது மனநிலை மாறி விட்டது. அந்த வெறி குறைந்து விட்டது போல் உள்ளது. அவருக்கு பரிசுத்தொகையை விட ஃபிரிட்ஜ், ஓவனை தூக்கிக் கொண்டு போக வேண்டும் என்று தான் ஆசை. இந்த வீட்டில் இன்னும் இரண்டு வாரங்கள் இருக்க வேண்டும் என்பது தான் அவரது ஆசை.

அமீர் முன்பே வந்திருக்கலாம்

அமீர் முன்பே வந்திருக்கலாம்

அமீர் பாதியில் தான் வந்தார். முன்பே வந்திருக்கலாம். நல்லா கெத்தா, பாயிண்ட் எடுத்து வச்சு பேசுவார். அது அவரிடம் எனக்கு பிடித்த விஷயம். யோசிக்காமல் கரெக்டாக பேசுவார். வெற்றி பெறனும்னு வெறி எப்போதும் இருக்கும். அதனால் தான் ஃபைனலுக்கு போய் உள்ளார் என்றார் சிபி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X