Don't Miss!
- News
மருமகள் மீது மாமனாருக்கு "காதல்.." 42 வயது வித்தியாசத்தை தாண்டி திருமணம்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
- Finance
ஏர் இந்தியா ஒரு வருட வெற்றி.. 500 புதிய விமானம்.. மாபெரும் அறிவிப்பு.. இனி தொடர் ஏறுமுகம் தான்..!
- Lifestyle
உங்க ராசிப்படி காதலில் நீங்கள் எந்த விஷயத்தில் சொதப்புவீங்களாம் தெரியுமா? உடனே கரெக்ட் பண்ணிக்கோங்க!
- Technology
Mars: செவ்வாய் கிரகத்தில் செல்பி! புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய நாசா! போட்டிக்கு நீங்களும் வரலாம்!
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
இமான் அண்ணாச்சி முதல் சுருதி வரை.. போன் கால் மூலமாக போட்டியாளர்களை உற்சாகப்படுத்தியது செம!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த சீசனில் வெளியேறிய போட்டியாளர்கள் போன் கால் மூலமாக தற்போது வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்களுடன் பேசி அவர்களை ஃபைனல்ஸ்க்கு தயாரிப்படுத்தும் விதமாக உற்சாகபடுத்திய படலம் ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் அரங்கேறியது.
இமான் அண்ணாச்சி, அபிஷேக் ராஜா, அக்ஷரா, சுருதி, சிபி மற்றும் வருண் உள்ளிட்ட எவிக்ட் ஆன போட்டியாளர்கள் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் தனிப்பட்ட முறையில் ஆதரவு அளித்தும் மொத்தமாக அனைவருக்கும் வாழ்த்துக்களை சொன்ன ஜாலியான தருணங்கள் ரசிகர்களை ரசிக்க வைத்தன.
ராஜு, பிரியங்கா, பாவனி, அமீர், தாமரை மற்றும் நிரூப் இந்த போன் கால் செஷன் மூலமாக உற்சாகமடைந்தனர்.

உற்சாகமூட்டிய போன் கால்
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் இதுவரை எவிக்ட் ஆகி வெளியேறிய போட்டியாளர்களில் சிலர் போன் கால் மூலமாக ஹவுஸ்மேட்களுடன் பேசும் அட்டகாசமான பகுதி ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் இடம்பெற்றது. இமான் அண்ணாச்சி, அபிஷேக் ராஜா, வருண், அக்ஷரா, சுருதி, சிபி என ஒவ்வொருவரும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசினர்.

கேட்டுக்கு வெளியே நிப்பேன்
முதல் நபராக இமான் அண்ணாச்சி ராஜுவிடம் போனில் பேசினார். நல்லா விளையாடுற சந்தோஷமா இருக்கு.. கேட்டுக்கு வெளியவே வெயிட் பண்ணிட்டு இருப்பேன் கப்போட வா ராஜு.. கப்பு முக்கியம் பிகிலு என இமான் அண்ணாச்சி, ராஜு இந்த சீசன் டைட்டிலை வின் பண்ண வேண்டும் என மனதார வாழ்த்தினார். மற்ற போட்டியாளர்களுக்கும் வாழ்த்துக்களை கூறினார்.

பிரியங்காவின் ஜீலி
ராஜுவை தொடர்ந்து பிரியங்காவுக்கு ஆதரவாக அபிஷேக் ராஜா போனில் பேசினார். சினிமா பையனின் குரலை கேட்டதும் ஹே ஜீலி என கத்தத் தொடங்கி விட்டார் பிரியங்கா.. பிரியங்காவை உற்சாகப்படுத்தும் வார்த்தைகளை அபிஷேக் சொல்வதற்கு முன்பாக இன்னமும் மலை மீது சுத்திட்டு இருக்கியா என பிரியங்கா வழக்கம் போல அவரே பேசி ஸ்கோர் பண்ணி விட்டார்.

தாமரைக்கு ஆறுதல் சொன்ன அக்ஷரா
தாமரைக்காக போனில் அக்ஷரா பேசினார். நீங்க ஆல்ரெடி வின் பண்ணிட்டீங்க அக்கா என அக்ஷரா மறைமுகமாக தாமரை எவிக்ட் ஆவது தெரிந்து ஊக்கம் அளித்தது போலவே அவரது பேச்சு இருந்தது. அடுத்த வாரம் என்னை தூக்கி சுத்தணும் என தாமரை செல்வி தொடர்ந்து பெரும் நம்பிக்கையுடனே அக்ஷராவிடம் பேசினார். தாமரையை தொடர்ந்து ராஜு அண்ணாவிடமும் அக்ஷரா அன்பை பொழிந்து பேசி ஊக்கப்படுத்தினார்.

பாவனிக்கு சுருதி அட்வைஸ்
இறுதி வாரம் ரொம்ப டஃப்பா இருக்கும் கடைசி வரைக்கும் போராடு பாவனி வெற்றியோ தோல்வியோ பெரிய விஷயம் இல்லை. இதுவரை உள்ளே உன்னை வைத்திருக்கும் மக்களுக்காக இந்த வாரம் விளையாடு. சில விஷயங்களை வேண்டாம் என விட்டுருக்க..அதை மீண்டும் தொடராதே.. அதை அப்படியே விட்டு விட்டு உன்னுடைய விளையாட்டை முழுமையாக விளையாடு என பாவனிக்கு பக்காவான அட்வைஸை சொன்னார் சுருதி.

அமீருக்காக பேசிய சிபி
அமீரை சந்தோஷப்படுத்தலாமா? என கமல் கேட்டு சிபியிடம் போன் கால் கனெக்ட் செய்ய சிபி தனக்கு ஆதரவாக பேசுகிறானா? என உண்மையிலேயே அமீர் சந்தோஷப்பட்டார். நல்லா கெத்தா விளையாடுற அமீர் அந்த கெத்து உன்னிடம் எனக்கு ரொம்ப பிடித்தது. அதை விட்டுக் கொடுக்காமல் விளையாடு என சிபி பேசிக் கொண்டிருக்கும் போதே தாமரை, பிரியங்கா என எல்லோரும் சிபியிடம் பேசி அப்படியே அந்த கால் முடிந்தது.
Recommended Video

நிரூப்புக்கு வருண்
நிரூப்பும் வருணும் பிக் பாஸ் வீட்டில் எதிரும் புதிருமாக இருந்தனர். பல இடங்களில் நிரூப்பை அடக்கியதே வருண் தான். இந்நிலையில், நிரூப்புக்கு சப்போர்ட் செய்து வருண் பேசியதும் நிரூப் ஹேப்பி ஆனார். தாமரை, ராஜு, பிரியங்கா, அமீர் என அனைவருக்கும் வருண் தனது வாழ்த்துக்களை கூறினார்.