நண்பர் விக்ரம்.. வீக்கென்ட் வந்தா மட்டும் அசீமுக்கு ஞானோதயம் வந்துடும் போல.. என்னம்மா நடிக்கிறாரு!
சென்னை: நீங்க அப்படியே இருந்தீங்கனா ரெட் கார்டு கொடுத்து அப்பவே வெளியே அனுப்பியிருப்பேன். ஆனால், நீங்க மன்னிப்பு கேட்டு மாற நினைச்சீங்க அதனால் தான் ரெட் கார்டு கொடுக்கல.. ஆனால், நீங்க மறுபடியும் அதே மாதிரி பண்றது வேற விஷயம் என படு ஓப்பனாக கமல் பேசியது அசீம் ஆர்மியினரை ரொம்பவே கதி கலங்க வைத்திருக்கும்.
கமல் பிரேக் எடுத்து விட்டு போகும் போது கூட அமுதவாணனிடம் அந்த அளவுக்கு சண்டை போடும் அசீம், இந்த புத்தாண்டு முதல் என் கோபத்தை விடலாம்னு இருக்கேன் என சார் என கமல் முன்னாடி என்னம்மா நடிக்கிறாரு என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
மேலும், விக்ரமனுக்கு தனக்கு மனசுக்கு பிடித்த பரிசை கொடுத்து விட்டு நண்பர் விக்ரமன் என சொன்னைதை எல்லாம் பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் உருட்டு உருட்டு என கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

கோபத்தை குறைக்கணும்
இந்த புத்தாண்டில் உங்களுடைய ரெசல்யூசன் என்னவா இருக்கு என கமல் கேட்க, இந்த ஆண்டு முதல் என் கோபத்தை குறைக்கணும் சார் என மறுபடியும் அதே உருட்டை அசீம் நல்லா உருட்டுறாருப்பா என பிக் பாஸ் ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். இந்த சீசனில் முதல் வாரம் முதல் 12வது வாரம் வரை ஒரே வசனத்தையே அசீம் பேசி வருகிறார் என ட்ரோல் செய்து வருகின்றனர்.

சரிந்த ஓட்டு
அசீம் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் சண்டை போட்டு வெறுப்பு பிரசாரத்தை பரப்பி வந்த நிலையில், டாப்பில் இருந்த அசீம் கடைசி விளிம்பு நிலைக்கு டேஞ்சர் ஜோனில் தள்ளப்பட்டுள்ளார் என நெட்டிசன்கள் அசீமையும் அவரது ஆர்மியினரையும் கலாய்த்து வருகின்றனர். பிஆர் டீம் வைத்து அசீம் ஓட்டுக்கள் வாங்கி வருகிறார் என தகவல்கள் வெளியானது அசீமின் ஓட்டுக்களை சரிய வைத்தது எனக் கூறுகின்றனர்.

நண்பர் விக்ரமன்
விக்ரம் வேதா மாதிரி சண்டை போட்டு வந்த அசீம் மற்றும் விக்ரமன் கடைசியில் 12வது வாரத்தில் நண்பர் விக்ரமனாக மாறி அசீம் தனக்கு விருப்பமான பொருளை விக்ரமனிடம் கொடுத்து கட்டிப் பிடித்து போட்ட டிராமா எல்லாம் வேற லெவல் என்றும் அடுத்த வாரத்திற்கான ஓட்டுக்களை அள்ளி இந்த வீட்டில் ஸ்டே பண்ண வேண்டும் என்பதற்கான பிளான் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

கேமில் காட்டுங்க
கேப்டன் டாஸ்க்கில் கடந்த வாரம் அமுதவாணனிடம் தோற்றுப் போன அசீம், கமல் பிரேக் விட்ட கேப்பில் கூட அவரிடம் சண்டை பிடித்து வருகிறார். உங்கள் திறமையை கேமில் காட்டி வெற்றி பெறுங்கள் சனிக்கிழமை எபிசோடில் ஷிவின் அசீமை வச்சு செய்து விட்டார் என கமெண்ட்டுகள் பறக்கின்றன.


Click it and Unblock the Notifications











