Bigg Boss Tamil 6: யார் சொன்னாலும் கேட்க மாட்டேன்.. ஆதிவாசி அசீம் அட்டகாசம்.. அடக்கிய விக்ரமன்!

சென்னை: என்னடா அசீமையும் விக்ரமனையும் ஆதிவாசி டீமில் ஒன்னா போட்டுருக்காங்களேன்னு நினைச்ச உடனே சண்டை வெடித்து விட்டது.

தனக்கு மட்டும் தான் அறிவு இருக்கு மத்தவங்க எல்லாம் முட்டாள் என நினைக்கும் மனநிலையில் தொடர்ந்து அசீம் சுயநல ஆட்டம் ஆடி வருகிறார் என அவரது செயலை பார்த்து ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இன்றைய 3வது ப்ரோமோவில் உங்க யார் பேச்சையும் நான் கேட்க மாட்டேன் என அசீம் சொல்ல, உன் பேச்சை நாங்க ஏன் கேட்கணும் என விக்ரமன் வரிந்து கட்டிக் கொண்டு வந்திருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஜனனி அவுட்

ஜனனி அவுட்

ஏலியனாக இருந்த ஜனனியை ஆதிவாசி டீம் இழுத்து வந்து விட்ட நிலையில், அவர் அவுட்டாகி ஆதிவாசி பெண்ணாகவே மாறிவிட்டார். அசீமுக்கும் ஜனனிக்கும் இடையேயான சண்டைக் காட்சிகள் 2வது ப்ரோமோவில் சூடு பிடித்த நிலையில், 3வது ப்ரோமோவில் மீண்டும் அசீம் சண்டை போடும் காட்சிகள் அரங்கேறி உள்ளன.

ஆதிவாசி அசீம்

ஆதிவாசி அசீம்

ஆதிவாசி கொஞ்சம் அடக்கி வாசி என கில்லி படத்தில் சொல்லும் வசனத்தை அசீமை பார்த்து நெட்டிசன்கள் பலரும் சொல்லி வருகின்றனர். அந்த அளவுக்கு இந்த வார டாஸ்க்கிலும் தான் மட்டுமே டாமினேட் பண்ண வேண்டும் என அசீம் செயல்பட்டு வருவது ஒட்டுமொத்த ஆதிவாசி போட்டியாளர்களையும் கடுப்பில் ஆழ்த்தி உள்ளது.

நானே போவேன்

நானே போவேன்

கிச்சன் டீமிலேயே சம வாய்ப்பு கொடுக்க வேண்டும் என சொல்லப்பட்ட நிலையில், கேப்டனாக இந்த வாரம் இருக்கும் அசீம் டீம் டாஸ்க்கில் கூட நான் மட்டுமே ஒவ்வொரு முறையும் ஏலியன்களிடம் சென்று விட்டு வருவேன் என மற்றவர்களின் வாய்ப்பை தட்டிப் பறிப்பது போல விளையாடியது தான் இந்த பிரச்சனைக்கு காரணம்.

யார் பேச்சையும் கேட்க மாட்டேன்

யார் பேச்சையும் கேட்க மாட்டேன்

அசீம் நீங்க செய்றது தப்பு, நீங்க மட்டுமே போய் விளையாடிட்டு வரணும்னா மத்தவங்க எதுக்கு இருக்காங்க.. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு முறை செல்ல வேண்டும் என ஷிவின், விக்ரமன், கதிரவன் உள்ளிட்ட போட்டியாளர்கள் சொல்ல, யார் பேச்சையும் நான் கேட்க மாட்டேன் என அசீம் வாதம் செய்ய சண்டை ஸ்டார்ட் ஆகிவிட்டது.

அடக்கிய விக்ரமன்

அடக்கிய விக்ரமன்

நீங்க யாரு பேச்சையும் கேட்காமல் தனியா விளையாட இது உங்க கேமில்லை. இங்கே அனைவரது ஒப்பினியனையும் கேட்டுத் தான் விளையாடணும். அப்படி நீ தனியா போய் விளையாடினால் அது கேமே கிடையாது. ஃபவுல் கேம் ஆகக் கருதப்படும் என அசீம் கத்திப் பேசுறதுக்கு மேல கத்திப் பேசி விக்ரமன் அடக்கிய காட்சிகள் ரசிகர்களை இன்றைய எபிசோடை பார்க்கத் தூண்டி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X