Don't Miss!
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- News
கர்நாடகா தேர்தல்: குவியும் நிதி, திட்டங்கள்- நாளை ஹெலிகாப்டர் தொழிற்சாலையை திறக்கும் பிரதமர் மோடி!
- Sports
சுப்மன் கில் தான் தொடக்க வீரர்..ராகுல் அந்த பணியை செய்ய மாட்டாரா? முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சாடல்
- Technology
அப்போ ஒன்னு சொல்றிங்க, இப்போ ஒன்னு சொல்றிங்க! காதல்னா என்ன சார்? வசமா சிக்கிய Netflix!
- Lifestyle
வார ராசிபலன் 05 February to 11 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமா இல்லன்னா பணஇழப்பு ஏற்படும்
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக் பாஸ் சீசன் 6: விக்ரமன், அசீம், ஷிவினை சும்மா வச்சு செய்யும் மீம்ஸ்.. வெல்லப் போவது யாரு?
சென்னை: இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சி முற்றிலும் வித்தியாசமாக சென்றுக் கொண்டிருக்கிறது.
அசீம் தான் நேற்றைய எபிசோடில் முதலில் சேவ் ஆவார். ஏடிகே தான் வெளியேறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், விக்ரமன் முதலில் சேவ் ஆகி இன்றைய எபிசோடில் ஜனனி எவிக்ட் ஆகப் போகிறார் என்கிற தகவல் கசிந்து ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.
டஃப் போட்டியாளர்களாக பார்க்கப்படும் ஷிவின், விக்ரமன் மற்றும் அசீம் மூவரையும் அவர்களது ரசிகர்கள் மாறி மாறி மீம்ஸ் போட்டு கலாய்த்து வருவதை இங்கே பார்ப்போம்..
கமல் வைத்த ஆப்பு... ஆடிப்போன அசீம்: பிக் பாஸ் வீட்டில் இப்படி ஒரு ட்விஸ்ட்டை யாருமே எதிர்பார்க்கல!

டாப் 3
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் இதுவரைக்கும் டாப் 3 போட்டியாளர்களாக ஷிவின், விக்ரமன் மற்றும் அசீம் ஆகிய மூன்று பேர் உள்ளனர். அடுத்த இடத்தில் தனலட்சுமி, அமுதவாணன், கதிர் மற்றும் ரச்சிதா உள்ளனர். மணிகண்டன், மைனா நந்தினி மற்றும் ஏடிகே எல்லாம் அடுத்து அடுத்து எவிக்ட் ஆவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், பிக் பாஸ் டீம் என்ன ட்விஸ்ட் செய்ய காத்திருக்கிறது என்பதை வெயிட் பண்ணித்தான் பார்க்க வேண்டும்.

சொல்வதெல்லாம் உண்மை
சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு அடுத்த ஹோஸ்ட்டாகவே விக்ரமனை களமிறக்கலாம் என ரசிகர்கள் நேர்மையின் சின்னம் என அப்படியே ஆரியின் ஜெராக்ஸ் காப்பி போல விளையாடி வரும் அரசியல்வாதி விக்ரமனை ட்ரோல் மீம்களை போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர்.

கிளவுன் அசீம்
கிரவுன் அசீம் என்பதை விட கிளவுன் அசீம் தான் சரியாக உள்ளது என்றும் பாலாஜி முருகதாஸ் ஆரி அர்ஜுன் உடன் சண்டைப் போட்டே ரன்னர் அப் ஆனதை போல இந்த சீசனில் அசீம் அனைவரிடமும் சண்டைப் போட்டு வெல்லப் பார்க்கிறார் என பிக் பாஸ் ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்து வெரைட்டி மீம்களாக போட்டுத் தாக்கி வருகின்றனர்.

நெற்றிக்கண் திறப்பினும்
ஒரு பக்கம் பத்து பேர் இருக்கட்டும், இன்னொரு பக்கம் ஷிவின் இருக்கட்டும் விக்ரமன் ஷிவின் சொல்வது தான் சரி என்பார். ஷிவின் விக்ரமன் சொல்வது தான் சரி என்பார் என அசீம் அவர் சொல்வது தான் சரி என வாதிட்டு வந்தார். ஆனால், ஷிவின் அசீமை சும்மா விளாசி எடுத்த நிலையில், யாரா இருந்தாலும் ஷிவின் விடமாட்டாங்க.. "நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே" என விளையாடுவாங்க என ரசிகர்கள் அவருக்கு ஃபயர் மீம் போட்டுள்ளனர். ஷிவினும் சந்தர்ப்பவாதி தான் என அசீம் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

மன்ச் சாக்லேட்
ஸ்ட்ராங்காக எந்த கருத்தையும் பேசாமல் கடைசி வரை வழ வழ குழை குழைன்னே பேசி வரும் விஜே கதிரவனை மன்ச் சாக்லேட் என மீம் போட்டு ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர். உள்ளே க்ரிஸ்ப்பாக இருந்தாலும், வெளியே சாக்லேட் பூசி மெழுகி விடுகிறார் என கலாய்த்து வருகின்றனர்.

கொட்டாவி விட்டே
கட்சி வச்சி கொட்டாவி விட்டே கடைசி வரை பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து டைட்டில் வின் பண்ணிடலாம்னு பார்த்தேன்.. அப்போ தான் நீ வந்தே என விக்ரமனுக்கு எதிராக அசீம் விளையாடி வருவதாகவும் அசீம் ஆர்மியினர் மீம் போட்டு அதகளம் செய்கின்றனர்.

ஏரியாவுக்கு வாடா
தைரியம் இருந்தா எங்க ஏரியாவுக்கு வாடா என அசீம் சொல்வதும்.. எங்கடா உங்க ஏரியா என விக்ரமன் கேட்பதுமாக கலக்கல் மீம்ஸ் போட்டு விக்ரமன் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இப்படி டாப் போட்டியாளர்கள் மூவரும் மாற்றி மாற்றி சண்டை போட்டு வரும் நிலையில், கடைசியில் டைட்டிலை வெல்லப் போவது யார்? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

விக்ரமனுக்குத்தான்
கமல்ஹாசன் விக்ரமனுக்கு எப்பவுமே ஃபேவராக பேசி வருகிறார் என்றும் விக்ரமனுக்குத் தான் டைட்டில் கிடைக்கும் என பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதே நேரம் விக்ரமன் மற்றும் அசீமை விடுத்து ஷிவினுக்கு டைட்டில் கொடுத்தால் ஷோவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் மற்றும் மரியாதை கிடைக்கும் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.