Don't Miss!
- News
கட்டடம் இடிந்து இளம்பெண் பலியான விவகாரம்.. இடிக்கும் பணியை உடனே நிறுத்த சென்னை மாநகராட்சி ஆர்டர்!
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Lifestyle
உங்களுக்கு நரை முடி மற்றும் வறண்ட முடி இருக்கா? அப்ப இந்த டிப்ஸ்கள ஃபாலோ பண்ணுங்க...!
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
தனலட்சுமி மூஞ்சில ஒரு லட்சம் முட்டை அடிப்பாங்க.. அவுட் ஆனாலும் அசீமுக்கு வாய்க்கு குறைச்சல் இல்லை!
சென்னை: அசீம் முகத்தில் நான் முட்டை அடித்து விட்டேன் என சந்தோஷப்பட்ட தனலட்சுமியை பார்த்து, நீ வெளியே போ ஒரு லட்சம் முட்டையை உன் மூஞ்சிலே அடிப்பாங்க என அசீம் பேசிய காட்சிகள் இன்றைய 3வது ப்ரமோவில் வெளியாகி உள்ளது.
வான்டட்டா தான் மட்டும் தான் ஏலியன் இருக்கும் இடத்திற்கு அடிக்கடி செல்வேன் என அடம்பிடித்து விளையாடி வரும் அசீமை தனலட்சுமி அவுட் செய்து விட்டார்.
முகத்தில் முட்டை அடித்து கலாய்த்த நிலையில், அவுட்டான அசீம் நான் சிரிக்கவே இல்லை என சாதிக்க பிக் பாஸ் அதிரடி தீர்ப்பு கொடுத்து விட்டார்.
ரௌடியா நீ...சவுண்டு விட்ட விக்ரமன்..ஆடிப்போன அசீம்..என்ன ஆச்சு தெரியுமா?

அசீம் மூஞ்சில முட்டை
அவதார் 2 திரைப்படம் வரும் டிசம்பர் 16ம் தேதி வெளியாக உள்ள நிலையில், பிக் பாஸ் வீட்டிலேயே ஏலியன்ஸ் vs ஆதிவாசிகள் கான்செப்ட் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அசீமை சிரிக்கவோ, அழவோ வைக்க முயற்சி செய்ய தனலட்சுமி அவர் தலையில் முட்டையை உடைத்து ஊற்றியும், முகத்தில் முட்டையை ஊற்றியும் அவுட் ஆக்கி விட்டார்.

கேம் ஸ்பிரிட் அதிகம்
அசீம் போல வெறும் வாய் ஜாலத்தால் இந்த பிக் பாஸ் விளையாட்டை விளையாடாமல் ரியலாகவே அதிக கேம் ஸ்பிரிட் உடன் தனலட்சுமி விளையாடி வருகிறார். அம்மா சென்டிமென்ட்டை டச் செய்து ஷிவினை அழ வைத்து அவுட் ஆக்கிய தனா அசீமை சிரிக்க வைத்து அவுட் ஆக்கி விட்டார்.

குருப்புல டூப் குயின்ஸி
தனலட்சுமி போட்டியாளர்களை சிரிக்கவும் அழவும் வைக்க முயற்சி செய்து கொண்டிருக்க பின்னாடி சோபாவில் ஹாயாக உட்கார்ந்து கொண்டும், தனாவின் பின்னாடி வந்து வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருக்கும் குயின்ஸியை குரூப்புல டூப் என இவர் பிக் பாஸ் போட்டியாளரே கிடையாது என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

அசீம் தனா சண்டை
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே போனாதான் பொதுவாக போட்டியாளர் முகத்தில் முட்டை அடிப்பாங்க.. ஆனால், நான் இங்கேயே அசீம் அண்ணா மூஞ்சில முட்டை அடிச்சிட்டேன் என வாய் துடுக்காக தனா பேசி கடுப்பாக இருந்த அசீமை மேலும் கோபப்படும் படி ட்ரிக்கர் செய்து விட்டார்.

ஒரு லட்சம் முட்டை அடிப்பாங்க
இங்கே எனக்கு நீ மூன்று முட்டை தான் அடிச்ச.. வெளியே போ உனக்கு ஒரு லட்சம் முட்டை மூஞ்சில அடிப்பாங்க என கடுப்பான அசீம் தனலட்சுமியை பார்த்து திட்ட இருவருக்கும் இடையே சண்டை வெடித்துள்ளது. அசீமின் திமிரை தொடர்ந்து ஒவ்வொரு போட்டியாளரும் அடக்கி வருகின்றனரே, நாளைக்கு மனுஷன் அப்படியே நல்லவனாக மாறி கமல் முன்னாடி டிராமா போடப் போகிறாரா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

கமல் முன்னாடி டிராமா
தொண்டைக் கட்டிப் போன நிலையிலும், விக்ரமன், ஷிவின், ஜனனி, அமுதவாணன் மற்றும் தனலட்சுமி உடன் இந்த வாரம் மோசமான சண்டையை போட்டுள்ள அசீம் அப்படியே கமல் முன்னாடி நல்லவன் போல நடித்து ஏமாற்றப் போகிறார். கமலும் வழக்கம் போல அசீமை கண்டிப்பது போல பேசிவிட்டு அப்படியே விட்டு விடுவார் என கலாய்த்து வருகின்றனர்.