வெள்ளை உடை போல் அவர் உள்ளமும் வெள்ளை..பெஸ்ட் பர்ஃபார்மர் ஜிபி முத்துவை கொண்டாடும் பிக் பாஸ் ஃபேன்ஸ்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 6 வெற்றிகரமாக வெள்ளிக்கிழமை வரை வந்து விட்டது. முதல் வாரத்திலேயே சந்தோஷத்துக்கும் சண்டைக்கும் பஞ்சமே இல்லாதது போல புதிய போட்டியாளர்கள் ரசிகர்களை என்டர்டெயின் பண்ணி வருகின்றனர்.

சிலர் இங்கேயும் வந்து மிக்சர் தான் சாப்பிடுவேன் என இன்னமும் போர்வைக்குள் ஒளிந்திருக்கும் நிலையில், வந்த நாள் முதல் இந்த நாள் வரை அதிரடி காட்டி பெஸ்ட் பர்ஃபார்மராக தேர்வாகி உள்ள ஜிபி முத்துவின் 3வது புரமோவை பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

அவர் அணிந்திருக்கும் வெள்ளை உடை போல அவரது மனமும் வெள்ளை என பதிவிட்டு வருகின்றனர்.

பிக் பாஸின் பாகுபலி

பிக் பாஸின் பாகுபலி

இந்த சீசனில் பிக்பாஸ் போட்டியாளர்கள் எல்லாம் யாருன்னே தெரியலையே பாஸ் என நெட்டிசன்கள் கலாய்த்து வந்த நிலையில், ஒரே வாரத்தில் பிக் பாஸை 24 மணி நேரமும் பார்க்க வைத்து விடுவார்கள் போல என கொண்டாடும் அளவுக்கு போட்டியாளர்கள் மாற்றியுள்ளனர். அதிலும், பாகுபலி போல பிக் பாஸ் நிகழ்ச்சியையே தூக்கி நிறுத்தி உள்ளார் ஜிபி முத்து.

பிரபலங்கள் ஆறுதல்

பிரபலங்கள் ஆறுதல்

ஜிபி முத்துவுக்கும் தனலட்சுமிக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில், ஜிபி முத்து அழுததை பார்த்த நிஷா கணேஷ் உள்ளிட்ட சில பிரபலங்களே அவருக்கு ஆதரவாக ஆறுதல் சொல்ல மதன் கெளரி எல்லாம் பிக் பாஸ் சீசன் 6 பார்க்க காரணமே தலைவன் ஜிபி முத்து தான் என ட்வீட் போட்டுள்ளார்.

பெஸ்ட் பர்ஃபார்மர்

பெஸ்ட் பர்ஃபார்மர்

ஜிபி முத்து சாந்தியையும், அமுதவாணனையும் பெஸ்ட் பர்ஃபார்மர் என சொன்ன நிலையில், பல போட்டியாளர்கள் ஜிபி முத்துவையும் சாந்தியையும் இந்த வாரத்திற்கான பெஸ்ட் போட்டியாளர்கள் என ஒவ்வொருத்தராக எழுந்து வந்து சொல்லஜ் ஜிபி முத்து அப்படியே ஆனந்தத்தில் மிதந்தார்.

வெள்ளை உடை வெள்ளை மனசு

வெள்ளை உடை வெள்ளை மனசு

வெள்ளை நிற வேட்டி சட்டையை அணிந்து கொண்டு இருந்த ஜிபி முத்து, வெள்ளை உடைக்கு இவ்வளவு மதிப்பா? என கேட்க ரசிகர்கள் அந்த வெள்ளை உடையை போலவே உங்க மனசும் வெள்ளை தான் என கமெண்ட் போட்டு வருகின்றனர்.

ஜனனியின் கிளாரிட்டி

ஜனனியின் கிளாரிட்டி

பிக் பாஸ் வீட்டில் எல்லாரும் போட்டியாளர்கள் போல இருக்கக் கூடாது என்றும் அம்மா, அப்பா, அண்ணன், தங்கை போல பழக வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு வயதிலும் போட்டியாளர்களை தேர்வு செய்து அனுப்பி இருக்காங்க என ஜனனி பேசியதை பார்த்த ரசிகர்கள் அவருடைய கிளாரிட்டி செம என பாராட்டி வருகின்றனர்.

உஷாரா இருங்க

உஷாரா இருங்க

ஆரம்பத்தில் இப்படித்தான் புகழுவாங்க.. அப்போ அங்க தொட்டுட்டான், இங்க தொட்டுட்டான் என பிரச்சனையை கிளப்பி காலி பண்ணிடுவாங்க, இதற்கு முன்னாடி பிக்பாஸ் வரலாறு அப்படித்தான் இருந்துருக்கு, உஷாரா இருங்க ஜிபி முத்து என ரசிகர்கள் எச்சரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X