Don't Miss!
- Lifestyle
தட்டுக்கடை முட்டை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?
- News
அசத்தலாக மாறப்போகும் 'வாட்ஸ்-அப்'.. வருகிறது 5 புதிய அப்டேட்கள்.. அடடே! என்னென்ன வசதிகள்!
- Finance
முதலீட்டாளர்களின் நலனுக்காகவே FPO ரத்து.. அதானி செம ட்விஸ்ட்!
- Technology
புது போன், Smart TV வாங்குற ஐடியா இருக்கா? 2024-க்குள் வாங்கிடுங்க.! நிர்மலா சீதாராமனே சொல்லிட்டாங்க.!
- Automobiles
க்ரெட்டாவின் பவர்ஃபுல் மோட்டாருடன் விற்பனைக்கு வந்தது 2023 வென்யூ... சும்மா சர்சர்னு போகலாம்!
- Sports
சுயநலமான கேப்டன்சியா??.. ஹர்திக் பாண்ட்யா மீது எழும் பரபரப்பு குற்றச்சாட்டுகள்.. என்ன நடந்தது?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
புடிக்கலைன்னா எவிக்ட் பண்ணிட்டுப்போ.. ஆடியன்ஸிடம் திமிரு காட்டிய மைனா.. ரெடியாயிடுங்க மேடம்!
சென்னை: விஜய் டிவி ப்ராடெக்ட் என்பதால் எப்படியும் தன்னை அவ்வளவு சீக்கிரத்தில் வெளியே அனுப்ப மாட்டாங்க என 2வது வாரத்தில் வந்த மைனா நந்தினி நினைத்துக் கொண்டிருப்பதால் தான் ஆடியன்ஸிடமே அப்படியொரு திமிர் பேச்சு பேசியுள்ளார் என #Myna ஹாஷ்டேக்கை போட்டு ரசிகர்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.
பிக் பாஸ் வீட்டிற்கு லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா மைனா நந்தினி தெறி பர்ஃபார்மன்ஸை கொடுப்பார் என்று பார்த்தால் மணிகண்டன் உடன் மட்டுமே தனியாக விளையாடிக் கொண்டிருக்கிறார் என விளாசி வருகின்றனர்.
பெய்டு ஹாலிடேஸ் எப்படி இருக்கு என கேட்ட ரசிகை ஒருவருக்கு மைனா நந்தினி சொன்ன பதில் அவரை அடுத்த வாரமே வெளியே அனுப்பிவிடும் என ரசிகர்கள் சபிக்க ஆரம்பித்து விட்டனர்.
ராபர்ட் மாஸ்டர் வெளியேறும் போது கடைசியா ரச்சிதா செய்த செயல்.. ஜூம் பண்ணி பார்த்த பிக் பாஸ் டீம்!

ரொம்ப கிரிஞ்ச்சா இருக்கு
மைனா நந்தினி மற்றும் மணிகண்டனின் நட்பு பார்க்க ரொம்ப க்யூட்டாக இருக்கு என்பது போல ஆரம்பித்து கடைசியில் அது ரொம்ப க்ரிஞ்சா இருக்கு என டோட்டல் டேமேஜ் செய்து விட்டார் ஒரு ரசிகர். கதிர், குயின்ஸி எல்லாம் எதுக்கு இந்த ஷோவுக்கு வந்திருக்கீங்க என்றும் ஜனனி, அமுதவாணன் சைலன்ட்டா இருக்கீங்களே ஏன் என்றும் ஆடியன்ஸ் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை தரமாக பயன்படுத்திக் கொண்டனர்.

அவ்ளோ பெரிய காமெடி இல்லை
எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என ரசிகர் சர்காஸமாக கிண்டல் செய்ய அதையும் புரிந்து கொள்ளாமல் ஹவுஸ்மேட்ஸ் ஆடிப் பாட, அப்படி பாடக் கூடாது.. எங்கள் வீட்டில் எல்லா நாளும் சண்டை தான்.. உடையப் போகுது மண்டை தான் என மைனா பாடிய காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் இது அவ்ளோ பெரிய காமெடி இல்லை மைனா என கலாய்த்து வருகின்றனர்.

கரும்பு தின்னக் கூலி
ரச்சிதா மற்றும் மைனாவிடம் தான் என்னுடைய கேள்வி என முதல் ஆளாக கேட்ட ரசிகை ஒருவர் உங்க பெய்டு ஹாலிடே எப்படி இருக்கு? என முதல் கேள்வியிலேயே இருவரது மூக்கையும் உடைத்து விட்டார். கரும்பு தின்னக் கூலி போல பிக் பாஸ் வீட்டில் மிக்சர் சாப்பிட பல லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு ரசிகர்களை என்டர்டெயின் செய்யாமல் இருக்கீங்க என விளாசி விட்ட ரசிகர் மீது மைனாவுக்கு உடனடியாக கோபம் பொத்துக் கொண்டு வந்தது.

புடிக்கலைன்னா அனுப்பிடுங்க
2 முறை கேப்டன் பதவிக்கு வந்து விட்டு நாமினேஷனில் இருந்து எஸ்கேப் ஆகி வரும் மைனா நந்தினி உங்களுக்கு புடிக்கலைன்னா அனுப்பிடுங்க என ரசிகை கேட்ட கேள்விக்கு செம திமிராக அளித்த பதில் ஒட்டுமொத்த பிக் பாஸ் ரசிகர்களையும் அப்செட்டில் ஆழ்த்தி உள்ளது.

அடுத்த பாயாசம்
இந்த வாரம் மணிகண்டனை கடைசி இடத்தில் உட்கார வைத்தது போல எல்லாம் விளையாட்டு காட்டாமல் அடுத்த வாரம் மைனா நந்தினிக்கு பாயாசத்தை போட்டு அனுப்பி விட வேண்டியது என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். ராம், மணிகண்டன், கதிர், குயின்ஸி, மைனா எல்லாமே மிக்சர் பார்ட்டி தான் யாரு போனாலும் ஓகே தான் என ரசிகர்கள் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.