அடுத்த சீசனில் இனிமே பிஆர் பவர், அராஜக போட்டியாளர் தான் டைட்டிலை வெல்வார்களா? ரசிகர்கள் கேள்வி!

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை வென்றவர்கள் எல்லாம் இப்போ எப்படி இருக்காங்க என்பது ரசிகர்களுக்கு நல்லாவே தெரியும் என்றாலும், இந்த சீசன் டைட்டில் வின்னராக அசீம் தேர்வாகி உள்ளதற்கு எதிராக ஏகப்பட்ட எதிர்வினைகளை குவிந்து வருகின்றன.

அசீம் டைட்டிலை வென்றதாக தகவல்கள் வெளியான நிலையில், அசீம் ஆர்மியினர் கொண்டாட்ட மனநிலையில் இருந்தாலும் நெகட்டிவ் கமெண்ட்டுகள் அதிகப்படியாக பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் இருந்து வெளியாகி வருகின்றன.

விஜய் டிவி மோசமான எக்ஸாம்பிளை செட் பண்ணிட்டீங்க என்றும் இதே போலத்தான் இனிமே பிக் பாஸ் போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் நடந்து கொள்ள முனைவார்கள் என அசீமின் வெற்றியை விளாசி வருகின்றனர்.

 அனைவரிடமும் சண்டை

அனைவரிடமும் சண்டை

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பித்ததில் இருந்து இறுதி வரை பல போட்டியாளர்களுடன் அசீம் சண்டை போட்டுள்ளார். சண்டை போடுவதாலே அசீம் தான் அனைத்து ப்ரோமோக்களிலும் அதிகமாக இடம்பெற்று மக்கள் மத்தியில் அதிக ஆதரவை பெற்றுள்ளார். ஷிவினை மோசமாக இமிடேட் செய்தது, ஆயிஷா உடன் அநாகரிகமாக சண்டை போட்டது. ஜனனி உடன் கூட சண்டை போட்டது அசீம் தான் என நெட்டிசன்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

 ரெட் கார்டு கொடுக்காத கமல்

ரெட் கார்டு கொடுக்காத கமல்

அசீமுக்கு பல முறை ரெட் கார்டு எச்சரிக்கையை கமல் கொடுத்த நிலையிலும் ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அசீமை மட்டம் தட்டியே கமல் நீங்கள் உங்களை திருத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறுவார். அசீமுக்கு டைட்டில் கொடுத்தால் அது தவறான முன் மாதிரியாக மாறிவிடும் என விக்ரமன், ஷிவின், ரச்சிதா, ஏடிகே, மைனா உள்ளிட்ட பலரும் சொல்லி இருந்த நிலையில் அசீம் டைட்டிலை வென்றுள்ளார்.

 கோபக்கார அசீம்

கோபக்கார அசீம்

ஷிவின் அல்லது விக்ரமன் இருவரில் யார் வெற்றி பெற்றாலும் இருவரும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், அசீம் வெற்றிப் பெறவில்லை என்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியையே உழுது விட்டுருவாரு உழுது என பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர் ஆர்த்தியும் ட்வீட் போட்டிருந்த நிலையில், பிக் பாஸ் டைட்டிலை வென்று இருக்கிறார் அசீம்.

 தவறான முன் உதாரணம்

தவறான முன் உதாரணம்

பிக் பாஸ் டைட்டிலை அசீமுக்கு கொடுத்து விஜய் டிவி தவறான முன் உதாரணமாக மாறிவிட்டது. இனிமேல் இது நேர்மைக்கான நிகழ்ச்சி என சொல்லாதீங்க கமல் சார் என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். அடுத்து வரும் சீசன்களில் இதே போலத்தான் போட்டியாளர்கள் அடித்துக் கொண்டு மற்றவர்களை அசிங்கப்படுத்த போறாங்க என விளாசி வருகின்றனர்.

 பிஆர் டீம் ரெடி பண்ணிக்கோங்க

பிஆர் டீம் ரெடி பண்ணிக்கோங்க

இனிமேல் பிக் பாஸ் போட்டியாளராக வருவதற்கு முன்னர் அசீம் போல பெரியளவிலான பிஆர் டீமை ரெடி பண்ணிக்கோங்க உதயநிதி ஸ்டாலின் தெரியும் ஆளூர் ஷா நவாஸ் சொந்தக்காரர் என பொய் சொல்லுங்க அப்போதான் நீங்க டைட்டிலை எளிதாக தூக்கிச் செல்ல முடியும். மற்றபடி சிறப்பாக விளையாட எல்லாம் தேவையில்லை என கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X