For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அடேங்கப்பா.. என்னவொரு டான்ஸ்.. ஏடிகேவை வீழ்த்தி அசால்ட் காட்டிய ஜிபி முத்து.. தொடர்ந்து வெற்றிமுகம்!

  |

  சென்னை: ஜனனியை வீழ்த்தி பிக் பாஸ் வீட்டின் முதல்வார தலைவராக மாறிய ஜிபி முத்து நடனப் போட்டியில் ராப் பாடகர் ஏடிகேவையே தோற்கடித்து விட்டார்.

  சும்மா லெட்டர் எழுதிட்டு, அசிங்கமா பேசுறவன்னு நினைச்சீங்களா, இறங்கி விளையாடினா நான் தாம்லே பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னர் என்கிற ரேஞ்சுக்கு ஜிபி முத்து தன்னுடைய பக்காவான கேமை விடாமல் விளையாடி வருகிறார்.

  ஜிபி முத்துவின் ஒவ்வொரு பர்ஃபார்மன்ஸ்களையும் பார்த்து அவரது ஆர்மியினர் உற்சாகமடைந்து வருகின்றனர்.

   இரட்டை மனநிலையில் சுற்றும் விக்ரமன்..என்ன ஆச்சு?..அரசியல்வாதியால் பிக்பாஸில் சோபிக்க முடியாதா? இரட்டை மனநிலையில் சுற்றும் விக்ரமன்..என்ன ஆச்சு?..அரசியல்வாதியால் பிக்பாஸில் சோபிக்க முடியாதா?

  முதல் தலைவர்

  முதல் தலைவர்

  பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9ம் தேதி தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஒரு வாரத்தை கடந்துள்ளது. இந்த வாரம் வீட்டை கட்டி ஆளப்போகும் அந்த தலைவர் யார் என்கிற போட்டி திங்கட்கிழமை நடைபெற்றது. கடிகாரம் போன்ற செட்டப்பில் ஏறிக் கொண்டு விழாமல் சில மணி நேரங்கள் தாக்குப்பிடித்து ஜிபி முத்து முதல் தலைவராக மாறி உள்ளார். சாந்தி மற்றும் ஜனனி உள்ளிட்ட போட்டியாளர்கள் தோல்வியை தழுவினர்.

  ஜோடி போட்டி

  ஜோடி போட்டி

  பிக் பாஸ் முடிந்த உடனே அந்த போட்டியாளர்களுக்கு கூடுதல் வாய்ப்பாக பிக் பாஸ் ஜோடிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதற்கான ஒத்திகையாக போட்டியாளர்களுக்கு ஆரம்பத்திலேயே நடன போட்டியை வைத்து விட்டனர். ஜோடி போட்டி என்கிற டாஸ்க்கில் ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒரு சக போட்டியாளருடன் மேடையில் நடனமாட வேண்டும். அதில் சிறப்பாக நடனம் ஆடுபவர் வெற்றியாளராக அறிவிக்கப்படுகிறார்.

  சொடக்கு மேல

  சொடக்கு மேல

  சொடக்கு மேல சொடக்கு போடுது பாட்டுக்கு ஜிபி முத்து மற்றும் ஏடிகே மேடை ஏறி நடனமாடினர். இலங்கையை சேர்ந்த ராப் சிங்கரான ஏடிகேவை விட தலைவன் ஜிபி முத்து படு மாஸாக நடனமாடி அரங்கத்தையே அதிர வைத்தார். ஹவுஸ்மேட்கள் எல்லாம் ஜிபி முத்துவின் நடனத்தை கைதட்டி வெகுவாக ரசித்தனர்.

  ஜிபி முத்துவுக்கு வெற்றி

  ஜிபி முத்துவுக்கு வெற்றி

  கடைசியாக ஏடிகேவை விட ஜிபி முத்து தான் சிறப்பாக நடனமாடி வெற்றிப் பெற்றார் என அறிவிக்கப்பட்டது. தலைவர் டாஸ்க்கை தொடர்ந்து டான்ஸ் போட்டியிலும் மனுஷன் இன்னாம்மா பின்றாரே என ஜிபி முத்து ஆர்மியினர் அவரது நடன வீடியோவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து டிரெண்ட் செய்து வருகின்றனர்.

  அசீம் வாதம்

  அசீம் வாதம்

  இந்த நடன போட்டியில் வழக்கம் போல பிக் பாஸ் விதிமுறைகளை சரியாக புரிந்து கொள்ளாமல் இரண்டு பேருக்குமே பாசிட்டிவாக யெஸ் காட்டலாம் என அசீம் உள்ளிட்ட சிலர் தேவையில்லாத வாதம் செய்தனர். ஆனால், கடைசியில் ஜிபி முத்துவே இந்த போட்டியில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

  ஏகப்பட்ட சரக்கு

  ஏகப்பட்ட சரக்கு

  வெறும் லெட்டர் எழுதி டிக்டாக், யூடியூப் வீடியோக்களை போட்டுக் கொண்டு காமெடியாக திட்டுபவன்னு நினைச்சீங்களா, ஒரு வாரம் கூட பிக் பாஸ் வீட்ல தாங்கமாட்டாருன்னு கனவு கண்டீங்களா? எல்லாத்துக்கும் ரெடியாகி தான் இங்கே வந்திருக்கேன், இதெல்லாம் வெறும் சாம்பிள் மட்டும் தான் ஏகப்பட்ட சரக்கு இன்னும் உள்ளே இருக்கு என அதிரடி காட்டி வருகிறார் ஜிபி முத்து.

  English summary
  Bigg Boss Tamil Season 6 house turned a dance floor for the contestants. GP Muthu and ADK put a dance competition for Sodaku Mela song and GP Muthu won against ADK in that competition.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X