Don't Miss!
- News
குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள எகிப்து அதிபர் அல் சிசி வருகை! டெல்லியில் உற்சாக வரவேற்பு
- Finance
Budget 2023: பட்ஜெட்டில் இப்படி ஒரு சர்பிரைஸ் கிடைக்குமா.. தங்கம் இறக்குமதியாளர்களுக்கு வாய்ப்பு?
- Sports
பந்துவீச்சில் மாற்றம் செய்தேன்.. இரட்டிப்பாக உழைப்பதில் மகிழ்ச்சி.. டி20 தொடருக்கு ரெடி - ஹர்திக்
- Automobiles
டொயோட்டாவுக்கு ஏழரை சனி! காரை நம்பி வாங்கியவர்கள் அதிர்ச்சி! பிரச்னைக்கு மேல பிரச்னையா வந்துகிட்டு இருக்கு!
- Lifestyle
உங்க சருமம் பளபளன்னு ஜொலிக்கவும் முடி நீளமா வளரவும் பப்பாளியை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
ஜனனி ஆர்மி எங்கே போயிட்டாங்க.. ஜனனி எவிக்ஷன்.. கடைசி நேர ட்விஸ்ட்டா? டிஆர்பி மோசடியா?
சென்னை: இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஏடிகே அல்லது மணிகண்டன் இருவரில் ஒருவர் தான் வெளியேறுவார் என ரசிகர்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வந்தனர்.
அதில், கடைசியில் குறைவான ஓட்டுக்களுடன் ஏடிகே தான் வெளியேறினார் என நேற்றே தகவல்கள் கசியத் தொடங்கின.
ஆனால், கடைசி நேர ட்விஸ்ட்டாக ஏடிகே எவிக்ட் ஆகவில்லை என்றும் ஜனனி தான் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் என பரபரக்கும் தகவல்கள் கசிந்து ஜனனி ஆர்மியையே ஷாக் ஆக்கி உள்ளது.
பாயாசம் போடுற அந்த ஆயாவே அசீம் தானா? ஷெரினா, குயின்ஸி இப்போ ஜனனி.. என்ன நடக்குது பிக் பாஸ் வீட்டில்?

ஜனனி ஆர்மி
ஜிபி முத்துவை தொடர்ந்து இந்த பிக் பாஸ் சீசனில் அதிக ஆர்மி ஆரம்பத்தில் இருந்தே இலங்கை போட்டியாளரான ஜனனிக்கு இருந்து வந்தனர். எப்போதெல்லாம் ஜனனி நாமினேஷனில் இடம் பெறுகிறாரோ அப்போதெல்லாம் ஜனனி ஆர்மியினர் அதிக வாக்குகளை செலுத்தி 2வது மற்றும் 3வது இடத்தில் அவரை சேவ் செய்து வந்தனர். ஆனால், இந்த வாரம் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக அவர் எலிமினேட் ஆகி உள்ளார்.

ரசிகர்கள் ஷாக்
இந்த வாரம் ஏடிகே அல்லது மணிகண்டன் இருவரில் ஒருவர் தான் வெளியேறுவார்கள் என நினைத்துக் கொண்டிருந்த ஜனனி ஆர்மியினருக்கு கடைசி நேர ஷாக்கிங்காக ஜனனியின் எவிக்ஷன் மாறி உள்ளது. எப்படி அவர் இந்த வாரம் எவிக்ட் ஆனார் என்றும் ஏடிகே மற்றும் மணிகண்டனுக்கு திடீரென எப்படி அதிக ஓட்டுக்கள் கிடைத்தன என்றும் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

டிரெண்டிங்கில் ஜனனி
ஜனனி இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டார் என்கிற தகவல் கசிந்த நிலையில், #Janany ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து அவரது ரசிகர்கள் இந்த எவிக்ஷனில் ஏதோ சதி நடந்துள்ளது என கமெண்டுகளை போட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

டிஆர்பி மோசடி
இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சி பேசு பொருளாக இல்லாமல் ரொம்பவே டல்லாக போனதை அறிந்த பிக் பாஸ் டீம் கடைசி நேர டிஆர்பி ட்விஸ்ட்டாக ஜனனியை எவிக்ட் செய்து விட்டு சோஷியல் மீடியாவில் விவாதத்தை கிளப்பி உள்ளனர் என பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் செய்து கழுவி ஊற்றி வருகின்றனர். சனிக்கிழமை நிகழ்ச்சி முடிந்த பின்னரும் நடந்த ஷிவின் - அசீம் சண்டைக்கான காரணமும் அதுதான் என்றும் அதனாலே அதை திடீரென 4வது ப்ரமோவாக ஒளிபரப்பு செய்தனர் என்றும் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

மிக்சரா தூக்குறாங்க
ஜனனி எவிக்ட் ஆக தகுதியானவர் தான். அவர் அமுதவாணன் உடனே இணைந்து கேம் ஆடி வந்த நிலையில் தான் இந்த வாரம் அவர் எவிக்ட் ஆகி உள்ளார் என்றும் அடுத்த மிக்சரையும் தூக்கியதற்கு நன்றி. ஏடிகே மற்றும் மணிகண்டனை விட ஜனனி தான் வீக்கான போட்டியாளர், அடுத்தடுத்த வாரங்களில் அவர்களும் வெளியேறுவார்கள் என்றும் ரசிகர்கள் மத்தியில் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

விக்ரமன் ஆர்மி
ஜனனி வெளியேற முக்கிய காரணமே இந்த வாரம் அவருக்கு எதிராக ஜனனி விளையாடிய மோசடி விளையாட்டுத் தான் என்றும் அதனை ஏற்கனவே குறும்படமாக போட்டுக் காட்டி விக்ரமன் ஆர்மி செய்த சம்பவம் தான் கடைசி நேரத்தில் அவருக்கான ஓட்டுக்கள் குறைந்து வெளியேற்றப்பட்டார் என்றும் ட்வீட்கள் டிரெண்டாகி வருகின்றன.