Don't Miss!
- News
சட்டென உடைந்து.. கட்டுக்கடங்காமல் கண்ணீர்விட்ட சீமான்.. உணர்ச்சி வசப்பட்ட சகோதரி.. என்ன நடந்தது?
- Technology
போட்டோ எடுத்தா? 1-இன்ச் சோனி கேமராவுடன் அறிமுகமான Vivo X90 Pro! விலை தெரியுமா?
- Automobiles
ஹீரோ ஸுமால இத்தன மாடலுக்கு பாதிப்பா! டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா, டியோனு எல்லாத்துக்குமே ஆப்புதான்...
- Sports
சுப்மன் கில் தான் தொடக்க வீரர்..ராகுல் அந்த பணியை செய்ய மாட்டாரா? முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சாடல்
- Lifestyle
வார ராசிபலன் 05 February to 11 February 2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கவனமா இல்லன்னா பணஇழப்பு ஏற்படும்
- Finance
பிப்.6-8 RBI நாணய கொள்கை கூட்டம்.. மீண்டும் ரெப்போ விகிதம் உயருமா..?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
Bigg Boss Tamil 6: பொட்டிப் படுக்கையோடு கிளம்புங்க.. எவிக்ஷன் போட்டியாளருக்கு இப்படியொரு ட்விஸ்ட்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 56வது நாள் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
ஒயிட் டிசர்ட்டில் நாளுக்கு நாள் கமல் ஸ்லிம்மாகவும் அழகாகவும் மாறிக் கொண்டு வருவதை பார்த்தால், சந்துரு கமலாக இந்தியன் 2 படத்தில் நடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்றே தோன்றுகிறது.
முதல் ப்ரோமோவிலேயே எவிக்ஷனுக்காக ஒரு சூப்பர் ட்விஸ்ட் டாஸ்க் உடன் கமல் வந்திருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.
Bigg
Boss
Tamil
6:
குட்
பை
குயின்ஸி..
இந்த
வாரம்
பிக்
பாஸ்
வீட்டில்
இருந்து
வெளியேறியது
இவர்
தான்!

பிக் பாஸ் இளவரசிக்கா இந்த நிலைமை
தனலட்சுமி, மைனா நந்தினி மற்றும் குயின்ஸி தான் டேஞ்சர் ஜோனில் இந்த வாரம் இருப்பார் என்றும் ஜனனி அதிக ஓட்டுக்களுடன் செகண்ட் சேவ் ஆவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு குறிப்பாக ஜனனி ஆர்மியினருக்கு சூப்பர் ட்விஸ்ட் கொடுத்து பிக் பாஸ் இளவரசியை டேஞ்சர் ஜோனில் உட்கார வைத்து பயம் காட்டி விட்டார் கமல்.

மைனாவுக்கு இது தேவை தான்
கடந்த வாரம் மணிகண்டனுக்கு ஏற்பட்ட அதே நிலைமை தான் இந்த வாரம் திமிராக பேசிய மைனா நந்தினிக்கும் ஏற்பட்டுள்ளது என பிக் பாஸ் ரசிகர்கள் ப்ரோமோவுக்கு கீழ் கமெண்ட் போட்டு திட்டி வருகின்றனர். மைனா நந்தினியும் ரச்சிதாவை போல கேம் ஆடுவதே இல்லை. சீக்கிரமாக ஒரு நல்ல வைல்டு கார்டு போட்டியாளரை உள்ளே அனுப்புங்க என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பொட்டி படுக்கையுடன்
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேற போகிறார் என்பதை அறிந்து கொள்ள ஸ்டோர் ரூமில் வைக்கப்பட்டுள்ள 3 பெட்டிகள் வர, அதன் சாவிகளை ஜனனி, மைனா மற்றும் குயின்ஸியிடம் கொடுக்க சொல்கிறார் கமல். இதில், எந்த பெட்டி திறக்கப்பட்டு அதில் வெளியேறுபவர் பெயர் இருக்கிறதோ அவர் இந்த வாரம் வெளியேற வேண்டும் என இந்த ப்ரோமோவில் கமல் சொல்லி உள்ளார்.

அப்பாவை தொடர்ந்து
பிக் பாஸ் வீட்டில் குடும்ப விளையாட்டு விளையாடி வந்த ராபர்ட் மாஸ்டர், குயின்ஸி மற்றும் ரச்சிதா மூவரும் வெளியேற வேண்டியது தான் என ரசிகர்கள் எச்சரித்து வந்த நிலையில், கடந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேறினார். இந்நிலையில், இந்த வாரம் அவரது மகள் என சொல்லப்பட்டு விளையாடி வந்த குயின்ஸி வெளியேறுகிறார்.

அடுத்த வாரம் ரச்சிதாவா
இந்த வாரம் நைஸாக எஸ்கேப் ஆகிவிட்ட ரச்சிதா அடுத்த வாரம் வெளியேறுவாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ராம், ஏடிகே, ஜனனி, மைனா, மணிகண்டன் என ஒவ்வொரு மிக்சர் பார்ட்டியாக வெளியே அனுப்புங்க, டஃப் போட்டியாளர்கள் இந்த சீசனில் போட்டி போட்டு டைட்டில் வின் பண்ணட்டும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.