பிக்பாஸ் தமிழ் 6..முரட்டு உருவம் ராபர்ட் மாஸ்ட்ருக்குள் இத்தனை சோகமா?..மகளை நினைத்து அழுகை
சென்னை: கதை சொல்லும் டாஸ்க்கில் தனது சோகக்கதையை சொன்ன ராபர்ட் மாஸ்டர் கண்ணீர் விட்டார்.
நான் இறந்த பிறகாவது நான் தந்தை என்று என் மகளுக்கு தெரியட்டும் என கண்ணீர் விட்டார் ராபர்ட் மாஸ்டர்.
ராபர்ட் மாஸ்டர் முரட்டுத்தனமான உருவமாக இருந்தாலும் அவருக்குள்ளும் ஒரு சோக கதை இருந்ததை கதை சொல்லும் டாஸ்க்கில் காண முடிந்தது.

ராபர்ட் மாஸ்டர் சொன்ன கதை டாஸ்க்
பிக் பாஸ் வீட்டில் கதை சொல்லும் டாஸ்க் ராபர்ட் மாஸ்டர் தனது சோக கதையை சொல்லி அனைவரையும் கலந்து வைத்தார் அவருடைய மனைவியை சிறு வயதில் பிரிந்த நிலையில் மகளுக்கு தான் தந்தை என்பது தெரியாது என்பதை சொல்லிய அவர் நான் சாகும் முன் அவர் தந்தை என்று தெரிந்தால் அதுவே எனக்கு போதும் என்று கண்ணீர் வழிய தெரிவித்தார். ராபர்ட் மாஸ்டருக்குள் இத்தனை சோகமா? என அனைவரும் விக்கித்து போனார்கள்.

சிறப்பான தொடக்கமாக அமைந்த சீசன் 6
பிக் பாஸ் வீட்டில் பல்வேறு விதமான மனநிலை கொண்டவர்கள் பல்வேறு விதமான வாழ்க்கை நிலை கொண்டவர்கள் ஒன்றாக 100 நாட்கள் இருந்து தங்களை பற்றி நிரூபித்து அதில் ஒருவர் இறுதியில் கோப்பை வெல்வார். சீசன் 6-ல் சினிமா, சின்னத்திரை, டிக்-டாக், யூடியூபர், அரசியல்வாதி, திருநங்கை என பலதரப்பட்டவர்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் கடந்த ஐந்து சீசனை விட வேகமாக இருப்பதை காண முடிகிறது. 4 நாட்களில் 40 நாட்களுடைய பிரச்சனையை சந்தித்து விட்டீர்கள் என்று கமல்ஹாசன் பாராட்டும் அளவிற்கு பல போட்டிகள் பல விதமான சூழல், குழப்பங்கள், கோஷ்டிகள், சண்டைகள், சமாதானங்கள் என பிக் பாஸ் வீடு உற்சாகமாக நகர்கிறது.

போலித்தனமாக பழகும் சிலர்
ஆனால் அதிலும் சிலர் இன்னும் கேமரா கான்ஷியஸ் உடன் போலித்தனத்துடன் இருப்பதையும் காண முடிகிறது. பிக்பாஸ் வீட்டில் இரண்டு முக்கிய நபர்கள் வந்துள்ளனர். ஒருவர் டான்ஸ் மாஸ்டர் சாந்தி, இன்னொருவர் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் இருவரும் சினிமா துறையில் டான்ஸ் மாஸ்டராக இருந்தவர்கள். வயதிலும் மூத்தவர்கள். இதில் சாந்தி அனைவரிடமும் நெருக்கமாக பழகி பிக் பாஸ் வீட்டின் தாய் போன்று இருந்து வருகிறார். கடந்த வாரம் கிச்சன் டீமில் இருந்த அவர் அனைவருக்கும் சமைத்து போட்டு நல்ல பெயரை வாங்கினார். அதேபோல் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் அனைவருடனும் நன்றாக பழகி வருகிறார்.

முரட்டு உருவம் கரும்பு இதயம்
ஆனால் அவர் எந்த வேலையும் செய்தது போல் தெரியவில்லை. அனைவருடைய மதிப்பை பெற்று அமைதியாக வீட்டில் இருந்து வருகிறார். முரட்டுத்தனமான உருவத்துடன் பெரிய பழுவேட்டரையர் போன்று தோற்றத்துடன் அவர் இருந்தாலும் அவ்வப்போது நகைச்சுவை உணர்ச்சியும் காட்டி வருகிறார். இந்த நிலையில் கதை சொல்லும் டாஸ்க்கில், இன்று டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் கதை சொல்ல தொடங்கினார். முதலில் அவர் சொல்ல தயங்கி பின்னர் தனது கதையை சொல்ல ஆரம்பித்தார். தன் சிறுவயதில் கால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் தனது தந்தை எடுத்த பெரு முயற்சியில் சாதாரணமாக நடக்க தொடங்கியதை கூறினார்.

மகளை நினைத்து உருகிய ராபர்ட் மாஸ்டர்
அப்பொழுது அவர் பேசுவதற்கு தடை செய்து ஒருவர் பஸ்ஸரை அழுத்தினார். ஆனால் மற்ற போட்டியாளர்கள் எதுவும் செய்யாமல் அவர் பேசுவதை கவனித்து கொண்டிருந்தனர். சிறிது நேரம் பொறுத்து தன்னுடைய வாழ்க்கையில் நடந்ததை கூற ஆரம்பித்த ராபர்ட் 18 வயதில் தம் திருமணம் செய்து கொண்டதும் இளம் வயதிலேயே திருமணம் செய்து தனக்கு ஒரு மகள் இருப்பதாகவும் பின்னர் தாங்கள் பிரிந்து விட்டதால் தனது மகளை இதுவரை சந்திக்க முடியவில்லை என்றும் தனது மகளுக்கு தான் தந்தை என்பதே தெரியாது என்றும் தெரிவித்தார். அப்போது கண்களில் கண்ணீர் வடிந்தது. தான் இறந்த பிறகாவது தன் மகளுக்கு தான் தந்தை என்று தெரிய வேண்டும் என்று கண்ணீர் வழிய தெரிவித்தார்.

ராபர்ட் மாஸ்டருக்கு மெசேஜ் சொன்ன சாந்தி
மற்றொருபுறம் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் தான் செய்வது என்னவென்று தெரியாமல் சில நேரம் செய்கிறேன் யாரும் எனக்கு வழிகாட்டி இல்லை என்று தெரிவித்தார்.கடினமான முகத்துடன், பெரிய பழுவேட்டரையர் போன்று முரட்டுத்தனமான உருவத்துடன்.பிக் பாஸ் வீட்டில் உலாவி வந்த ராபர்ட் மாஸ்டருக்குள் இவ்வளவு சோகமா என்று ஹவுஸ் மேட்ஸ்கள் அவரை கட்டி அணைத்து ஆறுதல் கூறினர். அப்பொழுது அந்த சாந்தி உங்கள் மகள் நன்றாக இருக்கிறாள் அருமையாக வளர்கிறார் என்றாவது வாய்ப்பு கிடைத்தால் நான் சொல்கிறேன் என்று தெரிவித்தார். அவரை கையெடுத்து கும்பித்து ராபர்ட் மாஸ்டர் நன்றி தெரிவித்தார்.

பிக்பாஸ் வீட்டுக்கு வந்ததே மகளுக்கு மெசேஜ் சொல்லத்தான்
தன்னுடைய மகள் நல்லதொரு தந்தையிடம் வளர்கிறார்,ஆனாலும் அவர் நான் பெற்ற பெண் என்பதை என்னால் சொல்ல முடியாத நிலை உள்ளது என்றாவது ஒருநாள் அவருக்கு நான் தான் தந்தை என்று தெரிந்தால் மட்டும் போதும் அதுவே எனக்கு நிம்மதி என் தந்தையை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்.இந்த இரண்டும் தான் என் வாழ்வில் முக்கியமான ஒன்று அதை சொல்லத்தான் இந்த பிக்பாஸ் வீட்டிற்க்கே வந்தேன் என்று ராபர்ட் மாஸ்டர் தெரிவித்தார். அவரை டீம்மேட்கள் அணைத்து ஆறுதல் தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











