நம்ப வச்சு ஏமாதிட்டா.. ரச்சிதாவால் கண்கலங்கிய ராபர்ட் மாஸ்டர்.. என்ன நடக்குது பிக் பாஸ் வீட்டில்?
சென்னை: ரச்சிதா தன்னை ஏமாத்தி விட்டார் என்பது போல ராபர்ட் மாஸ்டர் அழுது புலம்பும் புதிய ப்ரோமோ தற்போது வெளியாகி ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
ராஜா, ராணியாக பிக் பாஸ் வீட்டில் கிடைத்த வாய்ப்பை மிஸ் செய்து விடக் கூடாது என ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்த ராபர்ட் மாஸ்டருக்கு கடைசியில் சீக்ரெட் பிளான் மூலம் ஆப்பு அடித்து விட்டார் பிக் பாஸ்.
உடனடியாக ரச்சிதா தான் தன்னை ஏமாத்தி விட்டார் என ராபர்ட் மாஸ்டர் அழுது புலம்பும் காட்சிகள் அரங்கேறி உள்ளன.

காப்பாற்றும் முயற்சி
இந்த வாரம் ராபர்ட் மாஸ்டரை வெளியே அனுப்பக் கூடாது என்பதற்காக நேற்று ரச்சிதாவுடன் ராபர்ட் மாஸ்டர் தில்லானா தில்லானா பாடலுக்கு நடனமாடிய ப்ரோமோவையும், தற்போது ரச்சிதா ராபர்ட் மாஸ்டரை நடித்து ஏமாற்றி விட்டார் என்பது போன்ற ப்ரோமோவையும் போட்டு ராபர்ட் மாஸ்டரை இந்த வாரம் சேவ் செய்ய விஜய் டிவி முயற்சி வருகிறது என பிக் பாஸ் ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

சீக்ரெட் டாஸ்க்
திடீரென பிக் பாஸ் வீட்டில் சீக்ரெட் டாஸ்க் ரச்சிதாவுக்கு கொடுக்கப்பட்ட நிலையில், ராஜாவே மாற்றப்படுகிறாரா? ராணி ராஜா ராபர்ட்டுக்கு துரோகம் இழைத்தாரா? என்கிற கோணத்தில் தற்போது புதிய ப்ரோமோ ஒன்று வெளியாகி இன்றைய எபிசோடை பார்க்க தூண்டி வருகிறது.

மாஸ்டர் அழுகை
ராஜா ராணியாக எவ்ளோ ஹாப்பியா இருந்தோம்.. இப்போ இப்படி நடிச்சி ஏமாத்திட்டா என்ன சொல்றது என டாஸ்க்கையும் ரியாலிட்டியையும் புரிந்து கொள்ளாமல் ராபர்ட் மாஸ்டர் கதறி அழும் காட்சிகள் 40ம் நாள் 2வது ப்ரோமோவில் வெளியாகி ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

ஃபீல் பண்ணும் ரச்சு
ராபர்ட் மாஸ்டர் அழுவதற்கு தான் காரணம் என்பதை அறிந்து கொண்டதுமே ரச்சிதா ஃபீல் பண்ணும் காட்சிகள் இந்த ப்ரோமோவில் இடம்பெற்றுள்ளன. இந்த க்ரிஞ்சை எல்லாம் பார்க்கவா பிக் பாஸ் பார்க்கிறோ என்றும், இந்த சீசனில் இளம் போட்டியாளர்கள் காதல் டிராக்கை எல்லாம் தாண்டி பெருசா பிக் பாஸ் டீம் பண்ண பிளான் தான் இது என்றும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

வாழ்வா சாவா பிஜிஎம்
ராபர்ட் மாஸ்டருக்கு ப்ரோமோ போட்டது கூட பரவாயில்லை. ஆனால், வாழ்வா.. சாவா.. பாடல் பிஜிஎம் போட்டு வச்சிருக்கியே பிக்பாஸ் எடிட்டர் உன்னை முதல்ல உதைக்கணும் என பிக் பாஸ் ரசிகர்கள் ஜாலியாக போட்டு வரும் கமெண்ட்டுகள் டிரெண்டாகி வருகின்றன. ராபர்ட் மாஸ்டர் கண்ணிரை துடைக்க ரச்சிதா உண்மையிலேயே லவ் பண்ணிட போகிறார் என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











