Don't Miss!
- Lifestyle
திருமணத்திற்கு முன் நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களாக சாணக்கியர் கூறுவது என்ன தெரியுமா?
- News
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை? அண்ணாமலை சூசசகம்
- Finance
தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள அழுத்தம்.. ஆபரண தங்கம் விலை குறையுமா..நிபுணர்களின் கணிப்பு?
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
- Technology
Jio-விற்கு செக்மேட்.. பிரபலமான 3 ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் நன்மையை சேர்த்த Airtel.. அதென்ன திட்டங்கள்?
- Automobiles
புதுசு கண்ணா புதுசு! டியோவின் இடத்தை காலி பண்ண வருகிறது ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்... பெயரே வேற லெவல்ல இருக்கு!
- Sports
"ஒரே ஒரு குறைதான்.. சரி செய்தால் நம்.1 பவுலர் ஆகலாம்".. உம்ரானுக்கு முகமது ஷமி முக்கிய அட்வைஸ்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
Bigg Boss Tamil 6: பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீமுக்கு 50 லட்சத்துடன்.. சொகுசு காரும் பரிசு!
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 6ன் டைட்டிலை அசீம் தட்டிச் சென்றார். அசீமின் பெற்றோர்கள் மேடை ஏறி அசீம் பற்றி பாராட்டி பேசினார்கள். 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை மட்டுமின்றி இன்னொரு பரிசும் கிடைத்துள்ளது.
ஷிவின், விக்ரமன் மற்றும் அசீம் மூன்று பேரில் யார் டைட்டிலை வெல்வார்கள் என கடந்த ஒரு வாரமாக ஏகப்பட்ட தகவல்கள், வதந்திகள் என பல விஷயங்கள் ரசிகர்களை போட்டு குழப்பி வந்தன.
விக்ரமனுக்கு ஒரு பக்கம் பெரிய ஆதரவும் அசீமுக்கு மறுபக்கம் பெரிய ஆதரவும் கிடைத்து வந்த நிலையில், விக்ரமனை வீழ்த்தி அசீம் பிக் பாஸ் தமிழ் சீசன் 6 டைட்டிலை தட்டித் தூக்கி உள்ளார். பிக் பாஸ் டைட்டில் வின்னர் அசீமுக்கு ரூ. 50 லட்சம் பரிசுத் தொகையை விஜய் டிவியின் முக்கிய நிர்வாகிகள் மேடையில் வழங்கி சிறப்பித்தனர்.

3 கோடி பேர்
பிக் பாஸ் நிகழ்ச்சியை இந்த சீசனில் 30 மில்லியன் பேர் அதாவது 3 கோடி பேர் பார்த்துள்ளதாக விஜய் டிவியின் தலைமை நிர்வாகிகள் கூறிய நிலையில், விஜய் டிவி ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை இத்தனை கோடி பேர் பார்த்து வரும் நிலையில், பலரும் அதிகபட்சமாக அசீமுக்கு ஓட்டுப் போட்டு வெற்றியடைய செய்துள்ளனர்.

அசீம் வின்னர்
பிக் பாஸ் தமிழ் சீசன் 6ன் உண்மையான வெற்றியாளர் அசீம் தான் என கமல்ஹாசன் கடைசியாக அசீமின் கையை உயர்த்தி அவருக்கு வெற்றிக் கோப்பையை பரிசாக அளித்து டைட்டில் வின்னர் அசீம் என அறிவித்தார். அசீம் வெற்றி பெற்றதை அறிந்ததும் சந்தோஷத்தில் கத்தி கூச்சலிட்டார்.

விக்ரமன் விரக்தி
கடைசி வரை போராடுபவர்கள் போராடிக் கொண்டே தான் இருக்க வேண்டும் எனக் கூறி வெற்றியை தவறவிட்டதை எண்ணி வருத்தப்பட்டு விக்ரமன் விரக்தியில் பேசிய வார்த்தைகள் அவரது ரசிகர்களை ரொம்பவே துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. விக்ரமன் தான் உண்மையான வெற்றியாளர் விஜய் டிவி மோசம் செய்து விட்டது என ஹாஷ்டேக் எல்லாம் போட்டு தூற்றி வருகின்றனர்.

50 லட்சம் பரிசு
வெற்றி பெற்ற அசீமுக்கு விஜய் டிவியின் உயர் அதிகாரிகள் மேடைக்கு வந்து 50 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை வழங்கினர். அசீமின் குடும்பத்தினர் மேடை ஏறிய நிலையில், அசீமின் அப்பா அசீம் ஒரு முறை தனது வெற்றியை நண்பனுக்காக விட்டுக் கொடுத்த கதையை சொல்லி நெகிழ்ந்தார்.

சொகுசு கார் பரிசு
வெறும் 50 லட்சம் பரிசுத் தொகை மட்டுமின்றி வெற்றி பெற்ற அசீமுக்கு இந்த முறை பிக் பாஸ் போட்டியாளர்கள் எவிக்ட் ஆனதும் அவர்களை வீட்டுக்கே கொண்டு விட்டு வந்த கிராண்ட் விட்டாரா சொகுசு காரையும் பரிசாக வழங்கி அசீமை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளனர். இந்த சீசனுக்கான டைட்டில் வின்னர் செம சந்தோஷத்தில் பேசிய பேச்சு அவரது ஆர்மியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியது.