Bigg Boss Tamil 6: உண்மையை இதுக்கு மேல மூடி மறைக்க முடியாதோ.. அப்போ அசீம் தான் டைட்டில் வின்னரா?
சென்னை: தனியார் கருத்துக் கணிப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் அசீம் அதிகம் ஓட்டுக்களை அள்ளி வந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் அதை மறைக்க வேண்டும் என விஜய் டிவி நினைத்ததன் விளைவாகவே அவரை கடைசியில் சேவ் செய்து வந்ததாக இன்றைய ஷோ முடிந்ததும் அசீம் ஆர்மியினர் கமெண்ட் போட்டு விளாச ஆரம்பித்துள்ளனர்.
கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷிவின் முதலில் சேவ் ஆனார். இந்த வாரம் அசீம் முதலில் சேவ் ஆகி உள்ளார். மக்கள் ஓட்டுக்கள் அடிப்படையில் சேவிங் ஆர்டர் நடைபெறவில்லை என்றும் அதில் செம ட்விஸ்ட் காத்துக் கொண்டிருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விக்ரமன் அழகான க்ளீன் ஷேவ் எல்லாம் செய்து விட்டு செய்தி வாசிப்பாளராக எப்படி இருந்தாரோ அதே போல மாறிய நிலையில், அவருக்கு ஒரு வேளை டைட்டில் கிடைக்குமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

சேவிங் ஆர்டர்
பிக் பாஸ் சீசன் 4ல் தொடர்ந்து ஆரி அர்ஜுனன் முதல் நபராக சேவ் ஆக ஆரம்பித்த நிலையில், பாதியிலேயே அவர் தான் டைட்டில் வின்னர் என்பது உறுதியானது. அதே போல சீசன் 5ல் ராஜு ஜெயமோகன் முதலில் சேவ் ஆக ஆரம்பித்ததும் அதற்கு மேல் விளையாடுவதையே நிறுத்தி விட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டார் என குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், இந்த சீசனில் சேவிங் ஆர்டரில் கடைசி வரை மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.

அசீமை ஏமாற்றி
கருத்துக் கணிப்புகளில் விக்ரமனை விட அசீம் தான் ஒவ்வொரு வாரமும் அதிக வாக்குகளுடன் முன்னணியில் இருப்பார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல் முதல் நபராக விக்ரமன் அல்லது ஷிவினையே சேவ் செய்து வந்தார். அசீமை கடைசி வரை ஏமாற்றி விட்டார் கமல் என்றும் இனிமேல் கடைசி வாரம் என்பதால் ஏமாற்ற முடியவில்லை என்றும் ரசிகர்கள் சொல்லி வருகின்றனர்.

ஃபர்ஸ்ட் சேவ் அசீம்
இந்த வாரம் சனிக்கிழமை எபிசோடில் அசீம் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் நபராக சேவ் ஆகி உள்ளார். கடந்த வாரம் ஷிவின் சேவ் ஆன நிலையில், அவருக்குத்தான் டைட்டில் கிடைக்குமா? என கருதப்பட்ட நிலையில், அசீம் அதிரடியாக முதல் நபராக சேவ் ஆகி கெத்துக் காட்டி உள்ளார்.

டைட்டில் யாருக்கு?
இந்த சீசன் ரொம்பவே வித்தியாசமாக மாறி உள்ளது. விக்ரமன், ஷிவின், அசீம், அமுதவாணன், கதிர் என டாப் 5 போட்டியாளர்களும் ஒவ்வொரு வாரம் மாறி மாறி முதல் நபராக சேவ் ஆகி உள்ளனர். இதில், டாப் 3 போட்டியாளர்கள் என்று பார்த்தால் அசீம், விக்ரமன் மற்றும் ஷிவின் தான் இந்த மூவரில் யார் வின்னர் யார் ரன்னர் என்கிற கேள்வி ரசிகர்களை பெரிதும் குழப்பி வருகிறது.

அசீம் ஆர்மி ஹாப்பி
அசீமை கடைசி இடத்தில் வச்சு சேவ் செய்து டேஞ்சர் ஜோனிலேயே அவர் இருப்பது போன்ற மாயை உருவாக்கி வந்த நிலையிலும், மனுஷன் மனம் தளராமல் விளையாடி கிராண்ட் ஃபினாலே வாரத்துக்குள் மக்கள் போட்டியாளராக முதல் ஆளாக மக்கள் வாக்குகளுடன் உள்ளே சென்றுள்ளார் இவர் தான் டைட்டில் வின்னர் என அசீம் ஆர்மியினர் கொண்டாடி வருகின்றனர்.

தகுதி இல்லை
கடந்த வாரம் பிக் பாஸ் டைட்டில் வின்னராக தகுதியே இல்லை என்கிற டாஸ்க் வைக்கப்பட்டதன் பின்னணியும் இதுதான் என அசீம் ஆர்மியினர் கூறி வருகின்றனர். அசீமை ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்ஸும் தகுதி இல்லை என சொல்லிய நிலையில், அசீம் ஆர்மியினர் அதிக ஓட்டுக்களை போட்டு அவரை டைட்டில் வின்னராக்கும் முயற்சியில் இறங்கி விட்டதாகவும் கமெண்ட்டுகள் தெறிக்கின்றன.

பெட்டிக்காகவா
அசீம் இந்த வாரம் முதலில் சேவ் செய்யப்பட்ட நிலையில், விக்ரமன் 2வதாக சேவ் ஆகி உள்ளார். ஒரு வேளை இந்த வாரமும் அசீம் கடைசியாக சேவ் ஆனால், கண்டிப்பாக பணப்பெட்டியை தூக்கிக் கொண்டு ஓடிவிடுவார் என்பதற்காக கடைசி நேரத்தில் நடத்தப்பட்ட சேவிங் ஆர்டர் ட்விஸ்ட்டா? என்றும் பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட்டுகளை போட்டு அசீம் ஆர்மியினர் சந்தோஷத்தில் வேட்டு வைத்துள்ளனர். எப்படி இருந்தாலும் அடுத்த வாரம் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விடும்!


Click it and Unblock the Notifications











