Don't Miss!
- News
ஜெயலலிதா சொத்துக்கு வந்த புது "பங்குதாரர்!" சென்னை உயர்நீதிமன்றத்தில் "அண்ணன்" மைசூர் வாசுதேவன் மனு
- Lifestyle
இந்த 4 அறிகுறிகள் உங்களுக்கு இருந்தா? இரத்த சர்க்கரையால் தீவிரமான நரம்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்காம்!
- Finance
பட்ஜெட் 2023: இதற்கு தான் முக்கியத்துவம் தரனும் - ப. சிதம்பரம்..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles
கார் பைக்குகளில் இருப்பது போல ரயில் இன்ஜின்களிலும் கியர் இருக்குமா? இது எப்படிப் பயன்படுகிறது?
- Sports
"எங்களுக்கு நீங்க ஆர்டர் போடாதீங்க" பணிச்சுமை விவகாரம்.. பிசிசிஐ - ஐபிஎல் அணிகள் இடையே மோதல்- விவரம்
- Technology
ஒட்டுமொத்த பட்ஜெட் போன்களையும் பேக்கில் ஓடவிடப்போகும் OnePlus Nord 3.! இது தான் காரணமா?
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஆடை பட தயாரிப்பாளர் படத்தில் ரித்விகா...இவர் தான் ஹீரோ
சென்னை : தீவிரமடைந்து வரும் கொரோனா பரவல் சினிமா துறையை முற்றிலுமாக முடக்கி போட்டுள்ளது. லாக்டவுன் முடிந்த பிறகு, அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடர பல பெரிய நடிகர்களின் படங்கள் காத்திருக்கின்றன.
இன்னும் சிலர் லாக்டவுன் முடிந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்ட உடன் புதிய படங்களின் வேலைகளை துவக்க திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில் புதிய படங்கள் பற்றிய அறிவிப்புக்களும் வந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் சூர்யா நடித்த சூரரை போற்று, சிம்பு நடித்த ஈஸ்வரன் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் காளி வெங்கட் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு மாடு என பெயரிடப்பட்டுள்ளது.
புதுமுக இயக்குனர் பிரம்மா இந்த படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக ரித்விகா நடிக்க உள்ளார். ரஜினி நடித்த கபாலி போன்ற படங்களில் நடித்திருந்தாலும் விஜய் டிவி.,யில் பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்று, டைட்டில் வென்ற பிறகே ரித்விகா பிரபலமானார்.
8 பாடல்… 3 தீம் மியூசிக்குடன்… ஜகமே தந்திரம் ஆல்பம் நாளை ரிலீஸ் !
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புக்கள் கிடைக்காவிட்டாலும் சிறிய ரோல்களில் பல படங்களில் ரித்விகா நடித்து வருகிறார். தற்போது மாடு படத்தில் ஹீரோயினாக நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த படத்தை அமலா பாலை வைத்து ஆடை படத்தை தயாரித்து, பரபரப்பை கிளப்பிய விஜி சுப்ரமணியம் தயாரிக்கிறார். இந்த படம் பற்றிய அடுத்தடுத்த அறிவிப்புக்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.