பிக்பாஸ் இறுதிப் போட்டியாளர்கள் யாரு தெரியுமா...விஜய் டிவி வெளியிட்ட சஸ்பென்ஸ் ப்ரோமோ

சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி இன்று மாலை துவங்க உள்ளதால், தற்போது அனைவரின் மனதிலும் உள்ள ஒரே கேள்வி, யாரெல்லாம் பிக்பாஸ் வீட்டிற்குள் போக போகிறார்கள் என்பது தான். இதை வைத்து தான் தற்போது சோஷியல் மீடியாவில் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது.

Recommended Video

Bigg Boss 5 Home Tour | Kamal Hassan, BB 5 Grand Launch

இதற்கிடையில் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் விதத்தில் பல விதங்களில் ப்ரோமோ வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறது விஜய் டிவி. நிகழ்ச்சி துவங்க இன்னும் சில மணி நேரங்களே உள்ளதால், இன்று பிக்பாஸ் மேடையிலேயே கமல் தோன்றுவது போன்ற ப்ரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. இது போட்டியாளர்கள் யார் என கேட்டு கமல் பேசும் லேட்டஸ்ட் ப்ரோமோ அனைவரையும் கவர்ந்துள்ளது.

லேட்டஸ்ட் ப்ரோமோ

லேட்டஸ்ட் ப்ரோமோ

லேட்டஸ்ட் ப்ரோமோவில், ஃபயர் எஃபெக்டுடன் கமல் மேடையில் நடந்து வருகிறார். பிக்பாஸில் யாரெல்லாம் கலந்து கொள்ள போகிறார்கள் என தெரிந்து கொள்ள அனைவரும் ஆவலாக இருப்பீங்க. இதோ... என்கிறார். முகத்தை மூடியபடி சிலர் ஆடும் காட்சிகள் காட்டப்படுகிறது. உடனே கமல், ஐ...அப்படியெல்லாம் உடனே காட்டிடுவோமா? வாங்க. வந்து பாருங்க. இன்று மாலை 6 மணிக்கு பிக்பாஸ் கிராண்ட் ஓப்பனிங் என சொல்லி முடிக்கிறார்.

ஆண்டவரா இப்படி

ஆண்டவரா இப்படி

இந்த ப்ரோமோவை பார்த்து விட்டு சிலர், என்னடா வழக்கமா விஜய் டிவி தான் இன்று மாலை என சொல்லி ரசிகர்களை கலாய்க்கும். இப்போது ஆண்டவரும் இப்படி ஆரம்பிச்சுட்டாரே. இப்படியா ஆசை காட்டி ஏமாற்றுவீர்கள். இன்று மாலை தான் நிகழ்ச்சி ஆரம்பமாக போகிறதே இப்ப கூட போட்டியாளர்கள் யார் என சொல்லக் கூடாதா. இன்னமுமா சஸ்பென்ஸ் வைக்கனும் என ரசிகர்கள் பல விதங்களில் கேள்வி கேட்டு வருகின்றன.

இத கவனிச்சீங்களா நீங்க

இத கவனிச்சீங்களா நீங்க

இந்த ப்ரோமோவில் மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால், கடந்த சீசனை போல் இந்த சீசனிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. வ்ரிச்சுவல் முறையிலேயே பார்வையாளர்கள் பங்கேற்பார்கள் என கூறப்பட்டு வந்தது. ஆனால் லேட்டஸ்ட் ப்ரோமோவில், கமல் மேடையில் தோன்றி பேசும் போது, கீழே பார்வையாளர்களுக்கான இருக்கைகள் சமூக இடைவெளி விட்டு போடப்பட்டுள்ளது.

மீண்டும் பார்வையாளர்கள்

மீண்டும் பார்வையாளர்கள்

அதில் பார்வையாளர்கள் அமர்ந்து பார்ப்பது போன்ற காட்சி காட்டப்படுகிறது. அதனால் இந்த சீசன் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளது உறுதியாகி உள்ளது. அதே சமயம் வழக்கம் போல் இல்லாமல் மிக குறைந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்கள், சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

கமலிடம் கேள்விகள் உண்டா

கமலிடம் கேள்விகள் உண்டா

இதனால் பார்வையாளர்கள் கமலிடம் நேரடியாக கேள்வி கேட்பது போன்ற பகுதியும் இன்றை துவக்க விழா அல்லது வரும் வார இறுதி எபிசோட்களில் காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X