Don't Miss!
- News
குளிர்காலத்தில் இதய பிரச்சினைகள் அதிகரிப்பது ஏன்? தடுக்க என்ன செய்யனும்? மருத்துவ நிபுணர்கள் அட்வைஸ்
- Automobiles
சுஸுகியும் கோதாவுல இறங்க போகுது... ஓலாவுக்கு மட்டுமல்ல ஹீரோ விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் ஆப்பு உறுதி!
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
ரூல்ஸ் மேல ரூல்ஸ்...அதிரடி காட்டிய அசீம்...தெறித்து ஓடும் போட்டியாளர்கள்!
சென்னை : பிக் பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனாக அசீம் பதவியேற்று ரூல்ஸ் மேல ரூல்ஸ் போட்டு அதிரடி காட்டி வருகிறார்.
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேறிய நிலையில் தற்போது 14 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாவது மட்டுமில்லாமல் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
அடித்து துவைக்கும் அசீம்..கேப்டன்ஷிப்பில் கலக்குவதால் ஹவுஸ் மேட்ஸ் கலக்கம்

50வது நாள்
பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்றோடு 50வது நாளை எட்டி உள்ளதால், இனிமேல் நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்கு பஞ்சமே இல்லாமல் டாஸ்க்குகள் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இருந்தாலும், ராம்,கதிர், ரச்சித்தா, ஆயிஷா போன்றவர்கள் வீண் வெட்டிக்கதை பேசிக்கொண்டு இருக்காமல் விளையாட்டில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.

சுவாரசியமாக இருக்கும்
நீங்க இவ்வளவு சேஃப்பா விளையாடுனீங்கனா மக்கள் டிவி ஆஃப் பண்ணிட்டு போய்டுவாங்க என்று போட்டியாளர்களுக்கு கமல்ஹாசனும் எடுத்து சொல்லி இருக்கிறார். இதனால், இனிவரும் நாட்களில் ஒவ்வொரு போட்டியாளர்களும் முகமூடியை கழட்டி வைத்துவிட்டு விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தலைவரானது அதிரடி
இதையடுத்து, நேற்றை எபிசோடில் கேப்டன் பதவிக்கான டாஸ்க் நடைபெற்றது. இதில், அசீம் ஷவின் விக்ரமன் ஆகியோர் பங்கேற்ற நிலையில், அசீம் வெற்றி பெற்று வீட்டின் கேப்டன் ஆனார். தலைவர் ஆனதும் முதல் வேலையாக சமையல் டீமில் சமையல் தெரியாத ராம்,ஏடிகே,விக்ரமன்,கதிர் ஆகியோரை சேர்த்துள்ளார்.

புது புது ரூல்ஸ்
ஒவ்வொருவருக்கும் டீம் பிரித்தவுடன் அவர்கள் வேலையை உடனடியாக செய்யும்படி ஆர்டர் போட்டார். அதுமட்டும் இல்லாமல், அவரவர்கள் சாப்பிட்ட தட்டை அவர்கள் தான் கழுவி வைக்க வேண்டும் என்று புது ரூல்ஸ் போட்டார். அதுமட்டும் இல்லாமல், படுக்கை அறையில் ஆங்காங்கே இருக்கும் பொருட்களை அனைவரும் எடுத்து வைக்க வேண்டும், மெத்தை சுத்தமாக இருக்க வேண்டும் என்று புது புது ரூல்சை போட்டு போட்டியாளர்களை திணறவிட்டார்.

அசீம் ஆர்மீஸ்
அசீம் என்னத்தான் கோவக்காராக இருந்தாலும் அவர் தன்னுடைய டாஸ்க்கை சரியாக செய்து வருகிறார். அது மட்டும் இல்லாமல், யாருக்காகவும் எதற்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளாமல், தன் மனதிற்கு சரிஎன்ற தோன்றுவதை செய்து வருவதால், அசீமுக்கு முன்பு இருந்ததை விட கணிசமான ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.