Don't Miss!
- Automobiles
இந்தியர்களின் வாயை பிளக்க வைத்த டாடா நெக்ஸான் இவி... 1.38 லட்சம் கிமீ பயணித்து புதிய சாதனை!
- Finance
பெட்ரோல் விலை திடீர் உயர்வு.. மக்கள் அதிர்ச்சி..!
- News
துபாயில் திருக்குறள் ஒப்புவித்தல் திருவிழா.. உலக சாதனை நிகழ்ச்சியாக பதிவு
- Technology
பிப்.,7 வரைக்கும் எந்த புது போனும், டிவியும் வாங்காதீங்க: ரகரகமா வரும் OnePlus போன், டிவி!
- Sports
பாண்ட்யா கூறிய ஒரு வார்த்தை.. கடைசி ஓவரில் இந்தியா வெற்றி கண்டது எப்படி? சூர்யகுமார் சுவாரஸ்ய தகவல்
- Education
பகுதி சுகாதார செவிலியர் பணி 2023:'ரூ.18 ஆயிரத்தில் நர்ஸ் வேலை'...!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்க எப்பவும் வெற்றிபெறும் அதிர்ஷ்டத்தோடு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
பிக் பாஸ் சீசன் 6: ஷிவின் தான் சூப்பர் ஸ்டார்... விக்ரமனை கட்டிப் பிடித்து அழுத மணிகண்டன்
சென்னை: பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 12வது வாரத்தின் இறுதிப் பகுதியை நெருங்கிவிட்டது.கடந்த வாரம் தனலட்சுமி எவிக்சன் செய்யப்பட்ட பிறகு, மீதமிருக்கும் 9 போட்டியாளர்களும் தங்களது ஆட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இந்த வாரம் மணிகண்டன் எவிக்சன் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், வேறு எதும் ட்விஸ்ட்கள் உள்ளதா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதனிடையே தற்போது வெளியான இன்றைய தினத்துக்கான இரண்டாவது ப்ரோமோ, ரசிகர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
உன்
வாழ்க்கை
உன்
கையில்...
புதிய
நம்பிக்கை
வாசல்...
ரஜினி,
கமலின்
மோட்டிவேஷன்
புத்தாண்டு
வாழ்த்து

பிக் பாஸ் 84வது வாரம்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி இன்னும் மூன்றே வாரங்களில் முடிவுக்கு வரவுள்ளது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்தப் போட்டியில் தற்போது 9 பேர் மட்டுமே பிக் பாஸ் வீட்டில் உள்ளனர். அவர்களிலும் ஒருவர் இன்று எவிக்சன் செய்யப்படவுள்ளார். அது மணிகண்டன் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே விக்ரமன், ஷிவின், அசீம் ஆகியோர் இடையே தான் டைட்டில் வின்னருக்கான போட்டி பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் ப்ரோமோ
இந்த வாரம் பிக் பாஸ் வீட்டுக்குள் ஹவுஸ்மேட்ஸ்களின் குடும்பத்தினர் வந்து சென்றனர். அப்போது போட்டியாளர்களுக்கு Freeze - Release என்ற டாஸ்க்கும் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து தற்போது பிக் பாஸ் தொகுப்பாளர் கமல், அகம் டிவி வழியே போட்டியாளர்களுடன் பேசி வருகிறார். அதன்படி இன்றைய தினத்துக்கான முதல் ப்ரோமோ சற்று நேரம் முன்பு வெளியானது. அதில் எவிக்சன் கார்டுடன் உள்ளே வரும் கமல், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக் கூறுகிறார். அதன்பின்னர் எவிக்சன் ஹிட் லிஸ்ட்டில் இருக்கும் மைனா நந்தினி, மணிகண்டன், அசீம் மூவரையும் ஒன்றாக அமர வைத்து அவர்களிடமே வாக்கெடுப்பு நடத்தினார்.

இரண்டாவது ப்ரோமோ
இதனைத் தொடர்ந்து தற்போது இன்றைய தினத்தின் இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பிக் பாஸ் வீட்டில் ஹவுஸ்மேட்ஸ்களுக்கு சில விருதுகளும் பரிசுகளும் கொடுக்கப்பட்டிருந்தன. அந்த விருதுகள் பொருட்களை விடவும் எனக்கு இந்த உறவு தான் முக்கியம் என்றால் நீங்கள் யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்கிறார் கமல். அப்போது தனக்கு கிடைத்த லக் என்ற செயினை கையில் வைத்திருக்கும் மணிகண்டன், அதனை விக்ரமனுக்கு கொடுத்து ஆரத் தழுவுகிறார். ஆரம்பம் முதலே விக்ரமனின் கருத்துகளுக்கு எதிர்வாதம் செய்வதும், அவரை புறக்கணிப்பதாகவும் இருந்த மணிகண்டன், இன்று விக்ரமனிடம் நட்பு பாராட்டியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ஷிவின்
அதேபோல், ஏடிகே தனது விருதை மணிகண்டனுக்கும், விக்ரமன் தனது விருதை கதிருக்கும் கொடுக்கின்றனர். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே போனாலும் மணிகண்டனிடம் நட்போடு இருக்க வேண்டும் என ஏடிகேவும், கதிர் பிக் பாஸ் வீட்டில் நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்க வேண்டும் என விக்ரமனும் விளக்கம் கொடுக்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக பிக் பாஸ் வீட்டில் தனக்கு கிடைத்த சூப்பர் ஸ்டார் என்ற விருதுடன் எழுந்து நிற்கும் மைனா, இந்த வீட்டுக்கு மட்டும் இல்லை, தமிழ்நாட்டுக்கே ஷிவின் தான் சூப்பர் ஸ்டார் என விளக்கம் கொடுக்கிறார். இந்த விருதுகள் வழங்கும் டாஸ்க், பிக் பாஸ் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.