Don't Miss!
- Finance
விலைவாசி விரைவில் குறையும்.. மக்களுக்கு குட் நியூஸ் - பொருளாதார ஆய்வறிக்கை 2023
- Sports
2வது டி20ல் நடந்த குளறுபடி.. கடைசி நேரத்தில் இந்தியா வைத்த கோரிக்கை.. அதிகாரி அதிரடி நீக்கம்- விவரம்
- Lifestyle
பிப்ரவரி மாசத்துல இந்த 4 ராசிக்காரர்களின் தொழிலில் பெரிய முன்னேற்றம் ஏற்பட போகுது...
- News
"பிரேக்கிங் பேட்" புகழ் போதைப்பொருள்.. சிக்கிய கல்லூரி மாணவர்கள்.. வெளிநாடு வரை பரவிய 'நெட்வொர்க்'
- Automobiles
பெட்டி பெட்டியா வெளிநாடுகளுக்கு பயணித்த சூப்பர் மீட்டியோர்650! ராயல் என்பீல்டு அதோட வேலைய காட்ட தொடங்கிருச்சு!
- Technology
முரட்டுத்தனமான ஸ்மார்ட்வாட்ச் மாடலை கம்மி விலையில் இறக்கிவிட்ட Noise.! என்னென்ன அம்சங்கள்?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இந்த வாரம் டபுள் எவிக்சன்..இன்று வெளியேறப்போகும் போட்டியாளர் யார்?
சென்னை : பிக்பாஸ் நிகழ்ச்சி 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இதில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்பட்டு வருகிறார். இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து 7 பேர் வெளியேறி உள்ளார்கள்.
கடந்த வாரமே கமல் டபுள் எவிக்ஷன் இருக்கும் என கூறியதால், இந்த வாரம் யார் வெளியேறப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
முத்த
காட்சிக்கு
50
முறை
ரீ
டேக்
எடுத்த
நடிகர்...நொந்து
போன
நடிகை!

மொக்கையான டாஸ்க்
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் முழுக்க மொக்கையான டாஸ்க்கால் அழுதுவடிந்துக்கொண்டு இருந்தது. ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒரு கதாபாத்திரத்தின் ரோல் கொடுக்கப்பட்டதால், அந்த கதாபாத்திரமாகவே மாறுகிறேன் என்று ஒவ்வொருவரும் சொதப்பினார்கள் இது பார்ப்பதற்கே செம கடுப்பாக இருந்தது.

அமுதவாணனுக்கு பாராட்டு
இதில்,ரத்தக்கண்ணீர் நாடகத்தில் சிறப்பாக நடித்த அமுதவாணனின் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். இதையடுத்து, மக்களின் ஸ்டார் விருது கீதா தேவியாகஇருந்த ரச்சித்தாவுக்கும், ஹவுஸ்மேட்ஸ்களின் சூப்பர் ஸ்டார் விருது பூனை சேகர் மைனாவுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, அமுதவாணன், ரச்சிதா, மைனா ஆகிய மூவரும் அடுத்த வாரத் தலைவர் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

வெளியேறுவது யார்
இதையடுத்து இன்றைய எபிசோடுக்கான கடைசி ப்ரோமோ வெளியாகி உள்ளது. வழக்கமாக பிற்பகலில் வெளியாகும் இந்த ப்ரோமோ இன்று கமல் வருவதால் தாமதமாக வெளியானது. இதில், இந்த வாரம் வெளியேறும் நபர் யார் என ஹவுஸ்மேட்டுகளிடம் கேட்டு பீதியை கிளப்பினார். அதில், ஒரு சிலர் ஏடிகேவின் பெயரை கூறினார்கள். சிலர் ஆயிஷா மற்றும் ராமின் பெயரை கூறினார். இதையடுத்து, இன்றைய எபிசோடில் வெளியேறும் போட்டியாளரின் பெயரை கமல் ஆடியன்சிடம் காட்டினார்.

குறைந்த வாக்குகள்
இந்த வாரம் ஆயிஷா, அசீம், ஜனனி கதிரவன், ஏடிகே மற்றும் ராம் ஆகிய ஆறு போட்டியாளர்கள் நாமினேஷன் செய்யப்பட்ட நிலையில் அவர்களில் ஆயிஷா மற்றும் ராம் ஆகிய இருவரும் குறைந்த வாக்குகள் பெற்றதால் அவர்கள் இருவரும் வெளியேற அதிக வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே கூறப்படுகிறது .