Don't Miss!
- News
அடிக்கடி குலுங்கும் டெல்லி! நிலநடுக்கம் திடீரென அதிகரிக்க என்ன காரணம்! தமிழ்நாட்டின் உண்மை நிலை என்ன
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. நியூசி,-ன் அதிவேக பவுலரை அசால்ட் செய்த சுப்மன் கில்.. வாயடைத்துப்போன ரோகித்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 வரை இந்த 4 ராசிக்கு பிரச்சனை மேல பிரச்சனை வரும்... கவனமா இருங்க..
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Finance
என் இதயமே கனத்து விட்டது.. 8 மாத கர்ப்பிணி பெண் கூகுள் பணி நீக்கம் குறித்து கலக்கம்.. !
- Automobiles
குறைவான விலையில் மைலேஜை வாரி வழங்கும் பைக்! பழைய நண்பன் ஹீரோவின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போட்ட ஹோண்டா!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
என்னய்யா மனுஷன் இவன்..அசீமை பார்த்தாலே எரிச்சலா இருக்கு.. விக்ரமனிடம் புலம்பிய ஏடிகே!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான 2வது ப்ரோமோவில் அசீமை பார்த்தாலே எரிச்சலா இருக்கு என்று ஏடிகே கூறியுள்ளார்.
தமிழ் டிவி ரசிகர்களிடையே பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது நடந்து வருகின்றது. இந்த நிகழ்ச்சியினை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
கடந்த சீசனை விட இந்த சீசனின் ஆரம்பத்தில் சண்டையும் சர்ச்சரவுமாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் கமல் போட்டியாளர்களை போட்டு வெளுத்து வாங்கியதால் நிகழ்ச்சி கொஞ்சம் சுவாரசியமாக இருந்தது. ஆனால் கடந்த இரண்டு வாரமாக செம மொக்கையாக இருக்கிறது.
பிக் பாஸில் இருந்து ஜாலியாக வெளியேறிய ஆயிஷா... லட்சக்கணக்கில் சம்பளம்... இதெல்லாம் ஓவரா இல்லையா?

பிக்பாஸ் சீசன் 6
இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று கமல் ஏற்கனவே கூறிய நிலையில், சனிக்கிழமை ராம் வீட்டிலிருந்து வெளியேறினார். இதையடுத்து, நேற்று ஆயிஷா குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறினார். நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் அதிர்ஷ்டத்தால் இருப்பது யார்... கடுமையான உழைப்பால் இருப்பது யார் என்று கமல் கேட்ட நிலையில், பலர் ஜனனி மற்றும் ரச்சித்தா லக்கால் இருப்பதாக கூறினர்.

அசீம்..மணிகண்டன் தான் டார்கெட்
இதையடுத்து, இன்று காலையில் வெளியான முதல் ப்ரோமோவில் நாமினேஷன் நடக்கிறது. இதில்,பல போட்டியாளர்கள் மணிகண்டன்,அசீம், ரச்சித்தா பெயரை நாமினேட் செய்துள்ளனர். அசீமுக்கு மக்களின் ஆதரவு இருப்பது தெரிந்த பிறகும் ,போட்டியாளர்கள் ஏன் தொடர்ந்து அவரையே நாமினேட் செய்து வருகிறார்கள் என இணையவாசிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

அசீமை பார்த்தாலே எரிச்சலா இருக்கு
இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில், போலி பேசிக்கிட்டு, அடுத்தவங்களை தாக்கிபேசிக்கிட்டு இருக்கும் ஆளு கூட வீட்டில் இருப்பதை நினைச்சாலே வெறுப்பா இருக்கு என்று அசீம் பற்றி ஏடிகே விக்ரமனிம் புலம்பி உள்ளார். மேலும், அசீம் கொஞ்ச நேரம், அப்படியே நார்மலா பேசினாலும், அதுக்கூட ஒரு மணிநேரம் தான், அதுக்கு அப்புறம் மீண்டும் நம்மை எமோஷனலா பிளாக் மெயில் செய்வான், எனக்கு யாரும் இல்லை என்று கட்டிப்பிடித்து அழுவான் இவன் இன்னும் வளரவே இல்லை என்றார்.

இதே வேலைதானா உங்களுக்கு
இந்த ப்ரோமோவை பார்த்த நெட்டிசன் ஒருவர், இந்த ஏடிகே மற்றும் விக்ரமனுக்கு வேற வேலை கிடையாதா இந்த வெண்ணைகளுக்கு உங்காந்து பின்னாடி பேசிக்கிட்டே இருக்கனும், இவங்க மட்டும் மத்தவங்களை குறை சொல்லிக்கிட்டே இருப்பாங்க, ஆனால், இவங்களை யாரும் குறை சொல்லக்கூடாது , நீ மத்தவங்களை விமர்சனம் பண்ணனும்னு போது உங்களுக்கு வரும் விமர்சனத்தை ஏத்துக்கோங்க என பதிவிட்டுள்ளார்.