Don't Miss!
- News
"சலங்கை ஒலி" இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்.. சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!
- Automobiles
இந்த அளவுக்கு புக்கிங் வரும்னு மாருதியே நெனச்சிருக்காது! 2 புதிய கார்களை வாங்க எல்லாரும் போட்டி போட்றாங்க!
- Sports
உடைந்த கைகளால் பேட்டிங்.. அணிக்காக ஒற்றை கையில் போராடிய ஹனுமா விஹாரி.. எதிரணி வீரர்களே பாராட்டு!
- Lifestyle
பளபளப்பான ஜொலிக்கும் சருமத்தை பெற... நீங்க ஏன் இயற்கை பொருட்களை மட்டும் பயன்படுத்தனும் தெரியுமா?
- Finance
எத்தியோப்பியா, கென்யாவோட ஜிடிபி-க்கு சமமான வீழ்ச்சி.. அதானி குழுமத்திற்கு அடிக்கு மேல் அடி!
- Technology
36 லட்ச WhatsApp பயனர்களுக்கு ஆப்பு.! உப்பு தின்னா தண்ணி குடிக்கனும்., தப்பு செஞ்சா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இதுக்கப்புறம் என்ன நடக்குன்னு தெரியாது..கடிதத்தை படித்து கதறி கதறி அழுத ரச்சிதா.
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது ப்ரோமோவில் ரச்சித்தா அம்மாவை நினைத்து கதறி கதறி அழுதுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தற்போது 72 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டி ஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட், குயின்சி, ராம், ஆயிஷா, ஜனனி ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள்.
21 போட்டியாளர்களில் இருந்து 11 போட்டியாளர்கள் போக தற்போது 10 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது.
அடக்கடவுளே..
துபாயில்
அதிரடியாக
கைது
செய்யப்பட்ட
பிக்
பாஸ்
பிரபலம்..
என்ன
காரணம்
தெரியுமா?

பிக் பாஸ் நிகழ்ச்சி
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது 11வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த வாரம் கணாக்காணும் காலமாக வீடு மாற்றப்பட்டுள்ளது. இதற்காக அசீம், தனலட்சுமி, ரச்சித்தா, ஷிவின் , ஏடிகே, மணிகண்டா ஆகியோர் மாணவர்களாக இருக்கின்றனர். இதில் கதிர்,அமுதவாணன், விக்ரமன் ஆசிரியர்களாக இருக்கின்றனர்.

அழுகாச்சி எபிசோடு
கடந்த சீசனில், கடந்து வந்த பாதையில், தங்கள் சோகக் கதையை சொல்லி அனைவரையும் அழவைத்தார்கள். இந்த சீசனில் பலரின் சோகக்தையை சொல்லாமல் பலரும் பர்சரை அழுத்தி பாதியில் நிறுத்திவிட்டனர். இந்த சீசனில், போட்டியாளர்களை வீட்டிற்கு கடிதம் எழுதச் சொல்லி இன்றைய எபிசோடின் டிஆர்பியை ரேட்டிங்கை உயர்த்த பிக் பாஸ் பிளான் போட்டுள்ளார்.

என் கூட பிறந்த பாவத்திற்கு
அதில் பிற்பகலில் வெளியான இரண்டாவது ப்ரோமோவில் ஷிவின் தனது அக்காவுக்கு கடிதம் எழுதி படிக்கிறார். அதில், அன்புள்ள அக்கா, என் கூட பிறந்த பாவத்திற்கு எண்ணால உனக்கு கஷ்டம் மட்டும் தான் என்று கண்ணீருடன் கடிதத்தை படிக்கிறார். இதையடுத்து, ஏடிகே, உன்னை நினைக்காதே நாளே இல்லை, நீ திரும்பி வருவாய் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்று கண்ணீருடன் கூறியிருந்தார்.

கதறி அழுத ரச்சித்தா
அந்த வரிசையில் இன்றைய எபிசோடுக்கான மூன்றாவது ப்ரோமோவில், ரச்சிதா மகாலட்சுமி தனது தாய்க்காக ஒரு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடவுள் கிட்ட கேட்டுகிறது ஒன்னே ஒண்ணுதான், எனக்கு இதுக்கப்புறம் என்ன நடக்குன்னு தெரியாது, குழந்தையோட அமைப்பு இருக்கான்னுகூட தெரியாது. என் அம்மாதான் எனக்கு குழந்தை, அந்த குழந்தைய கடைசி வரைக்கும் எனக்கு கொடுக்கணும் அந்த குழந்தைய நான் நல்லா பாத்துகணும் அது மட்டும் போதும் இதுக்கு பிறகு உனக்கு நான், எனக்கு நீன்னு வாழ நான் ரெடி அம்மா என அழுதுக்கொண்டே அந்த கடிதத்தை படித்து முடிக்கிறார்.

பதறிப்போன ரசிகர்கள்
ரச்சித்தா கடிதத்தை படிக்க படிக்க ஷிவின், ரச்சித்தாவை கட்டிப்பிடித்து அழுகிறார். இந்த ப்ரோமோவை பார்த்த அனைவரும் சற்று கலங்கி போனார்கள். ரச்சிதாவின் சொந்த வாழ்வில் பல பிரச்சனைகள் தான் அவரின் கண்ணீருக்கு காரணம். ரசிகர்கள் அவருக்கு ஆறுதலாக பல கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

All the best Rachitha
இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர் ஒருவர், பைனலிஸ்ட் ஆகும் எல்லாத் தகுதியும் ரச்சிதாவிடம் இருக்கிறது. என் நேரமும் சிரித்துக்கொண்டிருக்கும் இவள் மனதில் கஷ்டங்கள் எண்ணிலாடங்காதவை. All the best Rachitha என்று பதிவிட்டுள்ளார்.