Don't Miss!
- News
பாஜக புறக்கணிப்பு.. எடப்பாடி பழனிசாமிக்கு உரிய பதில் கொடுக்கப்படும்.. டெல்லிக்கு செல்லும் அண்ணாமலை!
- Automobiles
சிஎம் பேரனா இருந்தாலும் தப்பிக்க முடியாது! இத்தன லட்சம் கார்களை அழிக்க போறாங்களா! திடீர் அதிரடியால் கலக்கம்!
- Lifestyle
பலவீனமான சிறுநீரகங்களை வலுவாக்க வேண்டுமா? இதோ அதற்கான சில எளிய இயற்கை வழிகள்!
- Finance
1 அல்ல 2 இல்ல.. 35000 கோடி..! பட்ஜெட் 2023 அறிவிப்பால் கஜானாவில் ஓட்டை.. எந்த அறிவிப்பு..?!
- Technology
90's கிட்ஸ்களின் கனவு கேட்ஜெட்.! இப்போது ஹை-டெக் டிசைனில்.! அலறவிட்ட Sony Walkman விலை.!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
டாஸ்க்கும் மொக்க..ப்ரோமோவும் மொக்க..ஏதாவது புதுசா ட்ரை பண்ணுங்க பாஸ்..கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவை பார்த்து ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சி 57 நாட்களை நடந்த நிலையில், நிகழ்ச்சி இனி மேல் சுவாரசியமாக இருக்கும் என்று பார்த்தால் மொக்கை டாஸ்க்கை கொடுத்து ரசிகர்களை டென்ஷனாக்கி உள்ளனர்.
ப்ரோமோவை பார்த்து டென்ஷனான பிக் பாஸ் பார்வையாளர்கள், அடுத்த ஒருவாரம் இந்த கொடுமையைத்தான் பாக்கணுமா என கேட்டு வருகின்றனர்.
Bigg Boss Tamil 6: குட் பை குயின்ஸி.. இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது இவர் தான்!

3வது முறையாக கேப்டன்
நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி வழக்கம் போல சண்டை சச்சரவுகள் இல்லாமல் அமைதியாக சென்றது. கடந்த வாரம் நடந்த ஆதிவாசியும் ஏலியன்ஸ் டாஸ்கில் சிறப்பாக செயல்பட்ட மணிகண்டன், ஷிவின்,தனலட்சுமி மூவரும் கேப்டன் பதவிக்கு போட்டி போட்டனர். இந்த டாஸ்கில் மணிகண்டன் வெற்றி பெற்று வீட்டில் மூன்றாவது முறையாக கேப்டன் ஆனார்.

இந்த வார நாமினேஷன்
நேற்று நாமினேஷன் நடைபெற்றது இதில் பலரும் ஆயிஷா, ராம்,அசீம் ஆகியோரின் பெயரை கூறினார்கள். இதையடுத்து, இந்த வார நாமினேஷனில் ஆயிஷா,ராம்,அசீம்,ஏடிகே ஆகியோர் இருக்கிறார்கள். ஆதிவாசி டாஸ்கின் போது, ரச்சித்தா ஸ்மார்ட்டாக விளையாடி யாருக்கும் தெரியாமல் அனைத்து கற்களையும் ஆட்டைய போட்டதால், இந்த வாரம் நாமினேஷனில் இருந்து அவர் தப்பித்துள்ளார்.

புது டாஸ்க்
இதையடுத்து ஆட்டம் பாட்டத்துடன் புது டாஸ்க் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதில்,ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ஒவ்வொரு கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. அந்த கதாபாத்திரமாகவே இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்கள் இருக்க வேண்டும். இதில் சிறப்பாக நடிக்கும் கேரக்டருக்கு சன்மானம் வழங்கப்படும்.

போகானாந்தா ஏடிகே
இதில், ஏடிகேவிற்கு போகானாந்தா, மைனாவிற்கு பூனை சேகர், ஷிவினிற்கு மாடர்ன் மோகினி, தனலஷ்மிக்கு மோசமணி, மணிக்கு பாலைய்யா, ரச்சிதாவிற்கு சீதா தேவி, அசிமிற்கு வக்கீல் கணேசன், ராமிற்கு தகுவரன், ஜனனிக்கு அராத்து வானதி, அமுதவாணனுக்கு எம்.ஆர்.ராதா, ஆயிஷாவுக்கு சூப்பர்வைசர் கதாபாத்திரம், விக்ரமனுக்கு கன்னியன் வேடமும் கொடுக்கப்பட்டுள்ளது.

மொக்கை டாஸ்க்
இந்நிலையில், இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. இதில் போகானாந்தா ஏடிகேவும் ஆயிஷாவும் மாறி மாறி பேசிக்கொண்டு இருக்கின்றனர். இந்த ப்ரோமோவை பார்த்த ஃபேன்ஸ், இதெல்லாம் ஒரு ப்ரோமோவா என்றும், டாஸ்க்கும் மொக்கை , ப்ரோமோவும் மொக்கை என்று இணையத்தில் பங்கமாக கிண்டலடித்து வருகின்றனர்.