Don't Miss!
- News
தினமும் வீட்டுக்கு போங்க.. எடப்பாடி போட்ட போடு.. டார்கெட் "80000".. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான்!
- Sports
ஏய் எப்புட்றா.. பிட்ச் தந்த ட்விஸ்ட்.. முதல் டி20ல் இந்தியா தோற்றது எப்படி??.. 3 முக்கிய காரணங்கள்!
- Automobiles
சுஸுகியும் கோதாவுல இறங்க போகுது... ஓலாவுக்கு மட்டுமல்ல ஹீரோ விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் ஆப்பு உறுதி!
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
அசீமை கிழித்தெடுத்த கமல்? பதிலளிக்க முடியாமல் நின்ற அசீம்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோவில், கமல் அசீமை கேள்வி கேள்வி கேட்டு விளாசி உள்ளார்.
வழக்கமாக காலையில் வெளியாகும் ப்ரோமோ இன்று சனிக்கிழமை என்பதால், அனைத்து ப்ரோமோக்களும் தாமதமாகவே வந்தன.
இந்த வாரத்திற்கான பஞ்சாயத்துக்களை பேசுவதற்காக நாயகன் வரான் பேக் ரவுண்ட் மியூசிக்குடன் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
பச்சோந்தி விக்ரமன்... நயவஞ்சகக்காரன் அசீம்: மூட்டிவிட்ட பிக் பாஸ்... வேடிக்கைப் பார்க்கும் கமல்

டிக்கெட் டூ ஃபினாலே
பிக் பாஸ் வீட்டில் கடந்த வாரம் முழுவதும் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் பலவிதமான டாஸ்குகள் நடைபெற்றன. இதில் நடந்த சைக்கிள் டாஸ்கில் போட்டியாளர்கள் இரவு முழுவதும் தூங்காமல் சைக்கிள் ஓட்டினார்கள். இதில், விக்ரமன் கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கும் மேல் சைக்கிள் ஓட்டி முதல் இடம் பிடித்தார். இப்படி இந்த வாரம் நடந்த அனைத்து டாஸ்குகளும் ரசிக்கும்படி இருந்தது.

அமுதவாணனுக்கு ஜாக்பாட்
இதையடுத்து, டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்ட அமுதவாணனுக்கு கோல்டன் டிக்கெட் கிடைத்தது. இதனால், குறைந்த வாக்குகளை பெற்று இந்த வாரம் வெளியேறுவார் என்று கருதப்பட்ட அமுதவாணன் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது. எப்போதும் விஜய் டிவி இப்படித்தான் நடந்து கொள்ளும் இது எதிர்பார்த்த ஒன்றுதான் என ரசிகர்கள் கருத்து கூறிவருகின்றனர்.

ஒபன் நல்லாத்தான் இருக்கு
இன்றைய நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வெளியாகி உள்ளது. அந்த ப்ரோமோவில் ஒபன் நல்லாத்தான் இருக்கு ஆனா, பினிஷிங் சரி இல்லை என்ற கமெண்டை நான் அசீமுக்கு கொடுத்தேன். அதற்கு அவர் நீ கொடுக்கும் கமெண்டை எல்லாம் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று முகத்தில் அடித்தது போல் சொன்னார் என்று ஏடிகே கமலிடம் தனது ஆதங்கத்தை கொட்டினார்.

சரமாரியான கேள்வி
இதற்கு ஆசிம், அந்த கமெண்ட் எனக்கு ஏற்புடையதாக இல்லை அதனால், நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றார். அப்போது குறுக்கிட்ட கமல் ஏன் அது ஏற்புடையதாக இல்லை, நீங்க நடந்து கொண்ட விதம் சரியா இருந்தது என்று நினைக்கிறீங்களா? என்றும், இதை விக்ரம் மற்றும் ஏடிகேவிடம் சொன்னீங்களா? இதை அவர்களிடம் சொல்லுவதற்கு எது தடுக்கிறது என கமல் அசீமை நிற்கவைத்து கேள்வி மேல் கேள்வி கேட்டார்.

அமுதவாணனை பாராட்டிய கமல்
காலையில் வெளியான முதல் ப்ரோமோவில், கமல்ஹாசன், போன வாரம் நான் இப்படி உழைத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதானா என்று கேட்டவர் எப்போதும் போல சளைக்காமல் உழைத்து வெற்றிக்கு மிக அருகில் நெருங்கி இருக்கிறார் என்று அமுதவாணன் டிக்கெட் டூ ஃபினாலே டிக்கெட்டை பெற்றது குறித்து பேசியிருந்தார்.