கைத்தட்டல், பாராட்டு.. ஆணவமாக மாறக்கூடாது..தனலட்சுமிக்கு ரசிகர்கள் அட்வைஸ்!
சென்னை : பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி சிறப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் அறிமுகமானார்கள். இதில், இதுவரை மூன்று போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு இருக்கின்றனர்.
ஒவ்வொரு வாரமும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் பிரச்சனைகளை வார இறுதி நாட்களில் கமல் வந்து பேசுவார். இது ஒவ்வொரு சீசனிலும் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.
கடந்த வாரம் நடந்த பல பிரச்சனைகளை சனி மற்றும் ஞாயிறுகளில் கமல் சிறப்பாக பேசி இருந்தார். இது பிக்பாஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பிரபலங்கள் பலரும் கமலுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தனலட்சுமி இதைமாற்றிக்கொள்ள வேண்டும்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமாவில், தனலட்சுமி எந்த குணத்தை மாற்றிக்கொண்டால் அவரால் சிறப்பாக செயல்பட முடியும் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு, ஷெரீனா உன்னை யாராலும் சீக்கிரமாக ட்ரிகர் பண்ணமுடியும் என்றார், அதே போல உன்கிட்ட யாரும் பேசவே முடியாது என்கிற எண்ணம் இந்த வீட்டில் இருக்கும் அனைவருக்கும் வந்து விட்டது என்று ஆயிஷா கூறினார்.

ஆணவமாக மாறக்கூடாது
இந்த ப்ரோமோவை பார்த்த பிக்பாஸ் பார்வையாளர் ஒருவர், ஒருவருக்கு கிடைக்கும் கைத்தட்டலும் பாராட்டும் அவரை மேலும் உயர்த்தனும் உயரனும் அகம்பாவம் ஆணவமாக மாறக்கூடாது அதுக்கு உதாரணம் தனலட்சுமி என பதிவிட்டுள்ளார்.

டைட்டில் வின்னர் இவங்கதான்
மற்றொரு இணையவாசி, இந்த தனலட்சுமிக்கு அவ்ளோ சீன் எல்லாம் இல்ல. நல்லா டிரைனிங் எடுத்துட்டு வந்திருக்கு. ஆனால், டைட்டில் வின்னர் விக்ரமன் அல்லது ஷிவின்தான் என தனது மனதில் இருப்பதை பதிவிட்டுள்ளார்.

தனலட்சுமி கொஞ்சம் ஓவர்
போன வாரம் தனலட்சுமி தள்ளிவிடவில்லை என்பது கமல் குறும்படம் போட்டு நிரூபித்து விட்டதால் தனம் கொஞ்சம் ஓவராக ஆடி வருகிறார். இதை கவனித்த ஒரு நெட்டிசன், மக்கள் கை தட்டல் கேட்டவுடன் தனலட்சுமி கொஞ்சம் ஓவர் Attitude காட்டுற மாதிரி எனக்கு மட்டும் தான் தோணுதா? எல்லாத்துக்கிட்டையேயும் கத்திக்கிட்டே, யாரைவது குறை சொல்லிட்டே இருக்கா என பதிவிட்டுள்ளார்.

திமிரா இருக்கா
தனலட்சுமி மாறிவிடுவாள் என்று மக்கள் நினைக்கிறார்கள், அவள் முகத்தைப் பாருங்கள்... நீங்க என்ன வேணும்னாலும் சொல்லுங்க...நான் இப்படித்தான்... திமிரா இருக்கா. அவள் மனோபாவத்தை மாற்றினால் மொத்த வீடுமே அவ்வளவுதான்..யாராவது அவளை பத்தி பேசினீங்கனா...உங்களுக்கே பாயாசம் என பதிவிட்டுள்ளார்.

வாய்ப்பு கொடுக்காதீங்க
விக்ரமன் மற்றும் ரச்சிதா நல்ல ஆலோசனைகளை வழங்குகிறார்கள். அவள் அதை சரியான மனநிலையில் எடுத்துக்கொள்வாள் என்பது தெரியாது. ஒருவர் மோசமானவர் என்றால் மற்ற அனைவரும் புனிதர்கள் என்று அர்த்தமல்ல. அவர்கள் ஏன் தனலட்சுமியை தேர்வு செய்கிறார்கள் என்று தெரியவில்லை. நீங்களே அவளுக்கு வாய்ப்பு கொடுக்குறீங்க என பதிவிட்டுள்ளார்.

போதும் பா
நீங்க என்னத்தான் தனலட்சுமியை திருந்தும்படி பல அட்வைஸ் கொடுத்தாலும், தனலட்சுமி மைண்ட் வாய்ஸ்...இப்படி தான் இருக்கும்...இவர்கள் தனலட்சுமி பார்த்து சொல்லும்போது என போதும் பா என்ற மீமை பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











