Don't Miss!
- Automobiles
கார்களுக்கு பதிலா இந்த ஆட்டோக்களையே வாங்கிடலாம் போல... விலையோ கம்மி, வசதியோ மிக அதிகம்!
- Lifestyle
Today Rasi Palan 23 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் பண பிரச்சனை நீங்கிடும்...
- News
"ஹிட்லர் தெரியுமா உங்களுக்கு.. மோடிக்கும் அதே கதிதான்.." சித்தராமையா சொன்னதும்.. கொதித்தெழுந்த பாஜக
- Sports
U-19 மகளிர் உலக கோப்பை- 59 ரன்களில் சுருண்ட இலங்கை.. இந்திய அணி அபார வெற்றி
- Finance
Budget 2023:பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் 5 முக்கிய அறிவிப்புகள்..!
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
வழக்குடன் வந்த கமல்..குற்றவாளி யார்? சேஃப்பா விளையாடும் போட்டியாளர்.. தரமான சம்பவம் லோடிங்!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில், சேஃப்பா விளையாடிய போட்டியாளர்களை வெளுக்க சாட்டையுடன் வந்துள்ளார் கமல்ஹாசன்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற ராஜ வம்சமும் அருங்காட்சியகமும் என்ற டாஸ்க்கில் பலவிதமான குளறுபடிகள் நடந்தன.
இதையடுத்து இந்த வாரம் நீதிமன்ற டாஸ்கிற்காக பிக் பாஸ் வீடு நீதிமன்றமாக மாற்றப்பட்டது. இதில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டன இதில் குறிப்பாக அமுதவாணன் விக்ரம் மீது தொடுத்த வழக்கு சுவாரசியமாக இருந்தது.
மருத்துவமனையில்
ஓரிரு
நாள்
தங்கியிருப்பார்..கமல்ஹாசன்
உடல்
நிலை
மருத்துவமனை
அறிக்கை..பிக்பாஸ்?

கொளுத்திப்போட்ட கமல்
கடந்த வாரம் பிக் பாஸ் பாஸ் நிகழ்ச்சியில், யார் அம்பாக இருக்கிறார், யார் வில்லாக இருக்கிறார்கள் என்று கமல் கொளுத்திப் போட பல போட்டியாளர்கள் அமுதவாணன் வில், ஜனனி அம்பு எனக் கூறியிருந்தார். வீட்டில் பல போட்டியாளர்கள் அமுதவாணன் ஜனனி பெயரை சொன்னபோதும், தனிப்பட்ட முறையில் காழ்ப்புணர்ச்சி காரணமாக விக்ரமன் சொன்ன கருத்து என அமுதவாணன் வழக்கு தொடுத்தார்.

விக்ரம் வெற்றி பெற்றார்
இந்த வழக்கை எடுத்துக்கொண்ட அசிம் வழக்கறிஞராக சிறப்பாக வாதாடினார். இது விளையாட்டுக்கான டாஸ்க்காக இருந்த போதும் இந்த டாஸ்க்கில் ஒரு சிறந்த வழக்கறிஞராகவே செயல்பட்டு அசீம், ஒவ்வொரு பாயிண்டையும் எடுத்துவைத்தார். இருந்த போதும், இந்த வழக்கில் விக்ரம் வெற்றி பெற்றார்.

வித்தியாசமான வழக்கு
இதையடுத்து, பிக் பாஸ் வீட்டில், பல விநோதமான, பல சுவாரசியமான வழக்குகள், பல கிண்டல் வழக்குகள் என அனைத்தும் நடைபெற்றன. நேற்று ஒரு முக்கியமான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, அதாவது அந்த வழக்கின் சாராம்சம் என்னவென்றால் இந்த வீட்டில், போட்டியாளர்கள் பயன்படுத்தும் டீ கப், தட்டு போன்றவற்றை எடுக்காமல் ஆங்காங்கே வைத்துவிடுவதாக ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது.

தீர்ப்பளித்த குயின்ஸி
இந்த வழக்கில் நீதிபதியாக இருந்த குயின்ஸி, இந்த வீட்டில் இருப்பவர்கள் அனைவருமே பொறுப்பை உணர்ந்து அவரவர்களுடைய தட்டையோ, டீ கப்பையோ கண்ட இடத்தில் போடாமல் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், அது அனைவருடைய பொறுப்பு என்று கூறி தீர்ப்பு அளித்திருந்தார்.

வழக்குடன் வந்த கமல்
இன்றைய நிகழ்ச்சிக்கான இரண்டாவது ப்ரோமோவில், அழகாக டி-ஷர்ட்டுடன் புன்னகை மன்னன் போல பளிச்சென்று நிகழ்ச்சிக்கு வந்தார் நம் உலக நாயகன் கமலஹாசன். எனக்கு ஒரு வழக்கு இருக்கு என்கிறார், அப்போது கதிரவன், பேசிக்காக ஒரு விஷயம், நம்ம சாப்பிட்டு முடிச்சதும் பிளேட்டை கழுவணும் என்கிறார். இதையடுத்து, கமல் அப்படி கழுவாமல் வெச்சிட்டு போவது யாரு? என்று கேட்டதும் அனைவரும் திருதிருவென்று முழிக்கின்றனர்.

அனைவருக்கும் வார்னிங்
குற்றவாளி எங்கே? நான் விசாரிக்கும் போது பெயராவது வந்தது, நீங்க அந்த விசாரணையைக்கூட சரியா செய்யவில்லை. இது என்னுடைய வழக்கு நீங்க இவ்வளவு சேஃப்பா விளையாடுனீங்கனா? மோஸ்ட் போரீங் சீசனாக இது மாறிவிடும் என அனைத்து போட்டியாளர்களுக்கும் ஒரு வார்னிங் கொடுத்துள்ளார்.