Don't Miss!
- Sports
அதனால் தான் அவர் கிங் கோலி.. என்னுடைய 10 வயது உனக்கு தான்.. சுப்மன் கில்லை உற்சாகப்படுத்திய கோலி
- News
ஈரோடு மாநகராட்சியில் குறைகள் இருக்கிறது! ஒளிவு மறைவின்றி ஒப்புக்கொண்ட அமைச்சர் முத்துசாமி!
- Lifestyle
தினமும் ஒரு கையளவு பாதாம் சாப்பிட்டு ஒரு டம்ளர் பால் குடிப்பதால் பெறும் நன்மைகள் குறித்து தெரியுமா?
- Finance
அதானி எண்டர்பிரைசஸ்-க்கு அடுத்த பாதிப்பு.. Dow Jones நிலைத்தன்மை குறியீட்டில் இருந்து நீக்கம்..!
- Technology
iPhone: முழுக்க முழுக்க ஐபோனில் படமாக்கப்பட்ட இந்திய திரைப்படம்; யூட்யூப்பில் வெளியானது!
- Automobiles
மைலேஜில் மாருதியை என்ன சேதினு கேக்க போகும் டாடா கார்கள்! இவ்ளோ சீக்கிரமா இது நடக்கும்னு யாருமே நெனைக்கல!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
குரூப்பிசம் இருக்கா? கமலிடம் வசமாக சிக்கிய அன்பு டீம்.. அசீமிடம் பாய்ந்த மைனா!
சென்னை : பிக் பாஸ் வீட்டில் குரூப்பிசம் இருக்கா என்ற கேள்வியுடன் வந்த கமல், போட்டியாளர்களை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி உள்ளார்.
பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சி ஏழாவது வாரத்தின் இறுதி கட்டத்தில் உள்ளது. இதில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறப் போகிறார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்
கடந்த வாரம் நிவாஷினி வெளியேறிய நிலையில் அவரது ரசிகர்கள் மனம் நொந்து போனார்கள்.
Bigg Boss Tamil 6: அப்போ ரச்சிதா நிலைமை.. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் ராபர்ட் மாஸ்டர்?

வலுவான போட்டியாளர்கள்
பிக் பாஸ் சீசன் 6 இன்று 49வது நாளை எட்டி உள்ளது ஏறக்குறைய பாதி கிணறை போட்டியாளர்கள் தாண்டி விட்டார்கள். இனி வரும் நாட்களில் டாஸ்குகள் அனைத்தும் சும்மா மிரட்டலாக இருக்கும் என்பதால், இதில் யார் தாக்கு பிடித்து அடுத்த காட்டத்திற்கு செல்லப்போகிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த சீசனின் வலுவான போட்டியாளராக அசீம்,விக்ரம்,ஷிவின் இருக்கிறார்கள்.

டேஞ்சர் ஜோனில்
இந்த வாரம் நடந்த ஓப்பன் நாமினேஷனில் அசீம், தனலட்சுமி, ராபர்ட் மாஸ்டர், ராம், கதிரவன், அமுதவாணன் என ஏழு பேர் நாமினேஷனான நிலையில், நேற்றைய எபிசோடில் முதல் நபராக தனலட்சுமியும், அசீமும் காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்தார். ராபர்ட் மாஸ்டர், ராம் டேஞ்சர் ஜோனில் இருக்கிறார்கள்.

குரூப்பிசம் இருக்கா?
தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவில், நீல நிற கோர்ட், தலையில் கேப்புடன் நாயகன் மீண்டும் வரார் என்ற பாடலில் என்ட்ரி கொடுத்த கமல் போல, சும்மா மாஸாக இருக்கிறார் கமல்ஹாசன். இந்த வீட்டில் குரூப்பிசம் இருக்கா? என்று கமல் கேட்க, ஆமாம், சார் சத்தியமா குரூப்பிசம் இருக்கு என்று ஆஜரான அசீம், மணி மற்றும் மைனா பெயரை கூறுகிறார்.

சவுண்டுவிட்ட மைனா
உடனே எழுந்த மைனா எதுவுமே தெரியாமல் பேசாதீங்க, பிரண்ட்ஷிப் வேற.. கேம் வேற... இல்லை உனக்கு அப்படித்தான் தெரியுது என்றால், அப்படியே வெச்சிக்கோ வீ டோன்ட் கேர் என்று கமலின் முன்பே மைனா சவுண்டு விட்டார். இதையடுத்து, கமல், ஆகமொத்தத்தில் குரூப்பிசம் இருக்கிறது என்பதுதான் ஊர்ஜிதமாகிறது என்று ஒரு போடு போட, மொத்த போட்டியாளர்களின் முகத்திலும் 'ஈ' ஆடவில்லை.