தனலட்சுமி கிட்ட பேசவே பயமா இருக்கு...நாமினேஷன் செய்த ஏடிகே.. ஆர்ப்பாட்டம் செய்த தனா!
சென்னை : பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோவில் ஏடிகே தனலட்சுமியிடம் பேசவே பயமா இருக்கு என்று கூறி அவரை நாமினேட் செய்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாளும் மிகவும் சுவாரசியமாக சென்றது. அனைத்து போட்டியாளர்களையும் மடக்கி மடக்கி கேள்வி கேட்டு விழிபிதுங்க வைத்தார்.
நாமினேஷனில் சிக்கி ராபர்ட் மாஸ்டர் நேற்று குறைவான வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.

க்ரீமை பூசி நாமினேஷன்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 50வது நாளை எட்டியுள்ளது. வழக்கமாக திங்கட்கிழமை கேப்டன் பதவிக்கான போட்டியும், நாமினேஷனும் நடைபெறும் என்பதால், வீடே சுறுசுறுப்பாக இருக்கும். கடந்த வாரம் நடைபெற்ற ஓப்பன் நாமினேஷன் போல இந்த வாரமும் ஓப்பன் நாமினேஷன் நடந்துள்ளது. இதில் நாமினேட் செய்பவர்களில் முகத்தில் க்ரீமை பூசி நாமினேட் செய்ய வேண்டும்.

முதல் ப்ரோமோ
காலையில் வெளியான முதல் ப்ரோமோவில், அசீம் குயின்ஸி மற்றும் ரச்சித்தாவின் பெயரை நாமினேட் செய்துள்ளார். அதே போல மணிகண்டனும் ரச்சித்தா வீட்டில் வாய்ஸ் அவுட் செய்வதில்லை என்ற காரணத்தை கூறி நாமினேட் செய்துள்ளார். இதையடுத்து, தனலட்சுமி, குயின்ஸி மற்றும் கதிரவனை நாமினேட் செய்துள்ளார்..

பேசவே பயமா இருக்கு
தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது ப்ரோமோவிலும் ஓப்பன் நாமினேஷனே நடைபெறுகிறது. இதில், ஏடிகே தனலட்சுமியை நாமினேட் செய்து, உங்ககிட்ட பேசுவதற்கே நிறைய பேர் யோசிப்பது போல இருக்கு, டக்குனு கோவப்படுறீங்க, கேப்டன் டாஸ்கில் நீங்கள் நடந்து கொண்டது சரி இல்லை என்று கூறினார். அப்போது குறுக்கிட்ட தனம், அது வந்து அப்படி இல்லை...என குறுக்கிட்டுக்கொண்டே இருந்தார்.

காரசாரமான நாமினேஷன்
இருங்க தனம் நான் சொல்லி முடித்துவிடுகிறேன் என்று சொல்லியும் தனம் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்ததால், இதோ இந்த காரணத்திற்காகத்தான் நான் உங்களை நாமினேட் செய்கிறேன் என்றார். கடந்த வாரம் நடந்த ஓப்பன் நாமினேஷனில் யாரும் சரியான காரணத்தை சொல்லி நாமினேட் செய்ய வில்லை, அனைவரும் பூசிமுழுகி மழுப்பலான காரணத்தை சொல்லி நாமினேட் செய்ததாக கமல்ஹாசன் குற்றம்சாட்டிய நிலையில், இன்று ஓப்பன் நாமினேஷன் காரசாரமாக நடந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











