Don't Miss!
- News
இதுதான் டாடா.. A டூ Z எல்லாமே பக்கா ஸ்கெட்ச்.. மின்சார கார் சந்தையில் டாடா போடும் மெகா பிளான்
- Lifestyle
Today Rasi Palan 28 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பிற்கான பலன் தேடி வரப்போகிறது...
- Finance
Budget 2023:உணவு, உரம், எரிபொருள் மீதான ,மானியங்கள் குறைக்கப்படலாம்.. அப்படி நடந்தால் என்னவாகும்?
- Sports
ஆடுகளத்தை தவறாக கணித்தோம்.. கடைசி ஓவர் எல்லாத்தையும் மாற்றிவிட்டது.. ஹர்திக் பாண்டியா பேச்சு
- Automobiles
முக்கியமான சாலையை கிழித்து கொண்டு சென்ற விசித்திரமான வாகனம்!! பதற்றத்தில் வழிவிட்ட வாகன ஓட்டிகள்...
- Technology
நம்பமுடியாத அம்சங்களுடன் மலிவு விலையில் இறங்கிய பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
காலம் காலமாக இஸ்லாமியர்கள் வழிபடும் சிவன் கோவில் – மனமுருகி வேண்டினால் கேட்டது கிடைக்குமாம்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
Bigg Boss Tamil 6: டேஞ்சர் ஜோனில் இந்த வாரம் யார் இருக்காங்க.. திமிரா பேசுனவங்க வெளியேற போறாங்களா?
சென்னை: 50 நாட்களை வெற்றிகரமாக கடந்து பிக் பாஸ் சீசன் 6 ஓடிக் கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் போட்டியாளர்கள் ரசிகர்களை கவர்வதும், அதன் பிறகு கம்பளி போர்த்தி படுத்துத் தூங்குவதும் என்கிற நடைமுறை இந்த சீசனிலும் அப்படியே தொடர்கிறது.
போன வாரத்தை போலவே இந்த வாரமும் ஓப்பன் நாமினேஷன் வைத்த நிலையில், முகத்தில் கரி பூசி நாமினேட் செய்வது போல க்ரீமை முகத்தில் பூசி போட்டியாளர்கள் நாமினேட் செய்தது மேலும், பரபரப்பை கூட்டி உள்ளது.
இந்த வாரம் யாரெல்லாம் நாமினேட் செய்யப்பட்டனர். யார் டேஞ்சர் ஜோனில் உள்ளனர் மற்றும் யார் வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளது என்பதை விரிவாக அலசுவோம் வாருங்கள்..

இந்த வார நாமினேஷன்
முகத்தில் க்ரீமை பூசி இந்த வாரம் நடந்த ஓப்பன் நாமினேஷன் நடைபெற்ற நிலையில், கதிர், குயின்ஸி, மைனா நந்தினி, ரச்சிதா, தனலட்சுமி மற்றும் ஜனனி உள்ளிட்ட 6 பேர் நாமினேட் ஆகி உள்ளனர். இதில் யார் முதலில் சேவ் ஆவார், யார் டாட்டா பை பை சொல்லி வீட்டுக்கு கிளம்புவார் என்று பார்ப்போம்..

அசீம் நாமினேட் ஆகல
என்ன இந்த லிஸ்ட்டில் அசீம் பெயரே இல்லை என யோசிக்கிறீங்களா, அசீம் இந்த வாரம் கேப்டன் ஆன நிலையில், தான் அவர் பெயர் நாமினேஷனில் வரவில்லை. ஆனால், மணிகண்டன், ஏடிகே, ராம் உள்ளிட்டவர்களின் பெயர்கள் எப்படி நாமினேஷனில் வராமல் மிஸ் ஆனது என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.

கிச்சன் டீம்
ரச்சிதா, மைனா நந்தினி நாமினேஷனில் சிக்காமல் இருக்க காரணமே அவர்கள் இருவரும் கிச்சன் டீமில் சேஃபாகி விடுகின்றனர் என்பதால் தான் என்பதை தனலட்சுமி போட்டு உடைத்த நிலையில், இந்த வாரம் அசீம் அவர்கள் இருவரையும் கிச்சன் டீமை விட்டு வெளியேற்றிய நிலையில் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், மறுபடியும் கிச்சன் டீமில் இருக்கும் விக்ரமன், ராம், ஏடிகே, மணிகண்டன் உள்ளிட்ட யாருமே நாமினேட் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சேவ் ஆகிவிடுவார்கள்
இந்த வாரம் ரச்சிதா நாமினேஷனில் வந்தாலும், ராபர்ட் மாஸ்டர் வெளியேறிய அடுத்த வாரத்திலேயே அவர் வெளியேறுவார் என நினைக்க முடியாது. கதிர், ரச்சிதா மற்றும் ஜனனி ஆகிய மூவருக்கும் கருத்து கணிப்பு வாக்கெடுப்பில் ஏகப்பட்ட ஓட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த வாரம் இந்த மூவரும் சேஃப் ஜோனில் தான் இதுவரை உள்ளனர்.

யாருக்கு டேஞ்சர்
குறைவான ஓட்டுக்களுடன் கடைசி மூன்று இடங்களில் இருப்பது தனலட்சுமி, மைனா நந்தினி மற்றும் குயின்ஸி ஆகிய மூவர் தான். மூவருக்கும் பெரிதாக ஓட்டு வித்தியாசம் இல்லாமல் கொஞ்சம் முன்ன பின்ன அதிக ஓட்டுக்களுடன் உள்ளனர். இந்த வாரமும் தனலட்சுமி எப்படியோ ஆதிவாசிகள் vs ஏலியன் டாஸ்க்கில் பர்ஃபார்ம் பண்ணி சேவ் ஆகிவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மைனாவா? குயின்ஸியா?
ராபர்ட் மாஸ்டரின் செல்ல மகளாகவே இதுவரை பிக் பாஸ் வீட்டுக்குள் சாப்பிடுறது, தூங்குவது என 50 நாட்களை ஒட்டி விட்ட குயின்ஸி இந்த வாரம் வெளியேறுவாரா? அல்லது சமையல் கட்டிலிருந்து வெளியே வந்ததும் நாமினேட் செய்யப்பட்ட மைனா நந்தினி அதிரடியாக எவிக்ட் ஆவாரா? என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

திமிர் பேச்சு வெளியேற்றுமா
சன்டே எபிசோடில் ஆடியன்ஸ் ஒருவர் மைனா நந்தினியை பார்த்து பெயிட் ஹாலிடேஸ் எப்படி இருக்கு என கேட்டதற்கு, உங்களுக்கு புடிக்கலைன்னா வெளியே அனுப்பிடுங்க என பேசியிருந்தார். இந்நிலையில், அந்த திமிர் பேச்சுக்காக மைனா நந்தினி வெளியேற வேண்டும் என அவருக்கு ரசிகர்கள் ஓட்டே போடாமல் குயின்ஸியை விட கீழே வைத்துள்ளனர். இருவரில் இந்த வாரம் யார் வெளியேறினாலும் ரசிகர்கள் ஹாப்பி தான் என்கின்றனர்.